தடுப்பு மருந்து வரி குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்

Updated : மே 09, 2021 | Added : மே 09, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தற்போது இந்தியாவில் தீவிரமாகப் பரவி வருகிறது. இதனை அடுத்த கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் தடுப்பு மருந்து விநியோகம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு வரி விதிக்கிறது என்று முன்னதாக இணையத்தில் குற்றச்சாட்டு வெளியானது. இதுகுறித்து தற்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.தனது

புதுடில்லி: கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தற்போது இந்தியாவில் தீவிரமாகப் பரவி வருகிறது. இதனை அடுத்த கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் தடுப்பு மருந்து விநியோகம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு வரி விதிக்கிறது என்று முன்னதாக இணையத்தில் குற்றச்சாட்டு வெளியானது. இதுகுறித்து தற்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.



latest tamil news



தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்த நிர்மலா சீதாராமன், ஏற்றுமதி வரியிலிருந்து தடுப்பு மருந்துக்கு ஏற்கனவே விலக்கு அளிக்கப்பட்டு விட்டது என்று தெரிவித்துள்ளார். மாநில மற்றும் மத்திய ஜிஎஸ்டியில் இருந்தும் இவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


latest tamil news



மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இதுகுறித்து முன்னதாக பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். வெளிநாடுகளில் இருந்து ஏற்றுமதியாகும் வைரஸ் தடுப்பு மருந்துகளுக்கு மத்திய அரசு விதித்த வரி குறித்த விரிவான தகவல்களை தனக்கு அனுப்புமாறு அவர் கேட்டிருந்தார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி மாபெரும் வெற்றி பெற்ற பின்னர் மூன்று முறை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. நிர்மலா சீதாராமன் தடுப்பு மருந்து வரிவிதிப்பு குறித்து விளக்கும் நான்கு டுவீட்டுகளை இட்டு, இதுகுறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivagiri - chennai,இந்தியா
10-மே-202113:14:31 IST Report Abuse
Sivagiri எல்லாப் பொருள்களுக்கும் இதே சிஸ்டம்-தானே - இது தெரியாமல் ஒரு CM-ஆ
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
10-மே-202110:52:11 IST Report Abuse
Sridhar ஏற்கனவே வரி விலக்கு அளிக்கப்பட்டிருப்பது கூட தெரியாத ஒரு முதலமைச்சர் அவருக்கு பதில் ஒரு கேடா?
Rate this:
Cancel
P. SRINIVASALU - chennai,இந்தியா
10-மே-202109:48:10 IST Report Abuse
P. SRINIVASALU ஒண்ணுத்துக்கும் உதவாத ஒரு நிதியமைச்சர்... பொய்வேரவேலயபரும....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X