பொது செய்தி

இந்தியா

பசுவின் பாலை பயன்படுத்தி கொரோனாவுக்கு சிகிச்சை

Added : மே 09, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
ஆமதாபாத்:குஜராத்தில் உள்ள பசு காப்பகத்தில், பசுவின் பால், சிறுநீரை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத மருந்துகள் வாயிலாக, கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மையம் துவக்கப்பட்டுள்ளது.குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பனஸ்கந்தா மாவட்டம், டிடோடா கிராமத்தில், பசு காப்பகம் ஒன்று உள்ளது.இங்கு கொரோனா சிகிச்சை மையம்
பசுவின் பாலை பயன்படுத்தி கொரோனாவுக்கு சிகிச்சை

ஆமதாபாத்:குஜராத்தில் உள்ள பசு காப்பகத்தில், பசுவின் பால், சிறுநீரை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத மருந்துகள் வாயிலாக, கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மையம் துவக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பனஸ்கந்தா மாவட்டம், டிடோடா கிராமத்தில், பசு காப்பகம் ஒன்று உள்ளது.இங்கு கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில், பசுவின் பால், சிறுநீர், நெய் ஆகியவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத மருந்துகள் வாயிலாக, தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு சிகிச்சைஅளிக்கப்படுகிறது.

இது பற்றி, பசு காப்பகத்தின் நிர்வாகி மோகன் ஜாதவ் கூறியதாவது:பசுவின் பால், தயிர், நெய், சிறுநீர் உள்ளிட்டவற்றால் தயாரிக்கப்பட்ட, 'பஞ்சகவ்யம்' உள்ளிட்ட மருந்துகள் வாயிலாக, கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம்; இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, பசுவின் பாலில் தயாரிக்கப்படும், 'சியவன பிராஷ்' என்ற மருந்தும் வழங்குகிறோம்.

மையத்தில் இரண்டு ஆயுர்வேத மருத்துவர்களுடன், எம்.பி.பி.எஸ்., டாக்டர் ஒருவரும் பணியாற்றுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-மே-202121:38:47 IST Report Abuse
ஆப்பு ஒருத்தன் தன் பையனுக்கு தினமும் புண்ணாக்கு சாப்பிட குடுத்துட்டு வந்தானாம். எல்லோரும் ஏய்யா பையனுக்கு புண்ணாக்கு குடுக்கன்னு கேட்டா, கண்ணு நல்லா தெரியறதுக்கான்னானாம். எப்பிடின்னு கேட்டா, பாருங்க மாடெல்லாம் புண்ணாக்கு சாப்புட்டு கண்ணாடியே போடாம இருக்குதுன்னான்னாம். நமது கோமிய ஆராய்ச்சிகள் இந்த ரேஞ்சில்தான் இருக்கு.
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
13-மே-202110:15:30 IST Report Abuse
Malick Rajaமக்கள் தொகை குறைக்க படுவதாக செய்தி .. தீயாக பரவுகிறது ....
Rate this:
Cancel
Nachiar - toronto,கனடா
10-மே-202119:12:21 IST Report Abuse
Nachiar மேற்கத்தைய மருத்துவத்தில் பெண் குதிரையின் சிறுநீர் பல்வேறு மருந்துகளில் விசேஷமாக ஹோமோன் சம்பத்தப்பட்ட மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. கோமியம் பாவிப்பதில் கேவலப்படுத்த ஒன்றுமில்லை. கேவலப்படுத்திபவர்கலின் அறியாமை தான் கேவலம். medicinal use of mare urine என்று வலையில் தேடினால் தெரியும்.
Rate this:
Cancel
Malarvizhi - Hyderabad,இந்தியா
10-மே-202116:27:19 IST Report Abuse
Malarvizhi நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பதால், ஆங்கில மருத்துவத்தை மட்டுமே நம்பியிராமல், மற்ற மருத்துவ முறைகளிலும் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க வேண்டும். எனவே இத்தகைய முயற்சிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். பகுத்தறிவுவாதிகள் என்று தங்களைக் கூறிக் கொள்பவர்கள் கிண்டல் செய்வார்கள் என்று பின்வாங்கக் கூடாது. சுமார் 30 வருடங்களுக்கு முன்னால் இப்போதைய செல்போன் தொழில்நுட்பம் எதிர்காலத்தில் சாத்தியம் என்று யாராவது கூறியிருந்தால், அதனை பகுத்தறிவுவாதிகள் கிண்டல் செய்திருப்பார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X