பொது செய்தி

இந்தியா

கொரோனா மூன்றாவது அலை தப்பிக்க நிபுணர்கள் அறிவுரை

Updated : மே 11, 2021 | Added : மே 09, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி:'கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மற்றும் அதற்கடுத்து வரலாம் என, எதிர்பார்க்கப்படும் எந்த அலையில் இருந்தும் தப்பிப்பது மிக சுலபம். 'கொரோனா பரவல் தடுப்பு பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடிப்பது, தடுப்பூசி போடுவதன் வாயிலாகவே, இதை தடுக்க முடியும்' என, விஞ்ஞானிகள், மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.பாதுகாப்புநாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை
 கொரோனா ,மூன்றாவது அலை,தப்ப, நிபுணர்கள்,அறிவுரை

புதுடில்லி:'கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மற்றும் அதற்கடுத்து வரலாம் என, எதிர்பார்க்கப்படும் எந்த அலையில் இருந்தும் தப்பிப்பது மிக சுலபம்.

'கொரோனா பரவல் தடுப்பு பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடிப்பது, தடுப்பூசி போடுவதன் வாயிலாகவே, இதை தடுக்க முடியும்' என, விஞ்ஞானிகள், மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.


பாதுகாப்பு

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது. 'மூன்றாவது அலை பாதிப்பும் ஏற்படும்' என, மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர், சமீபத்தில் எச்சரித்திருந்தார். 'உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றினால், மூன்றாவது அலை ஏற்படுவதையே தடுக்கலாம்' என, அவர் கூறியிருந்தார்.

இது குறித்து, மருத்துவ துறை விஞ்ஞானிகள், நிபுணர்கள் கூறியுள்ளதாவது:கடந்தாண்டு துவக்கத்தில் துவங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு, ஆண்டு இறுதியில் தணியத் துவங்கியது. இந்தாண்டு துவக்கத்தில், வைரஸ் பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் வந்தது.


அலட்சியம்

ஆனால், 'வைரஸ் பாதிப்பு முழுமையாக நின்று விட்டது; இனி பிரச்னை இல்லை' என, மக்கள் அலட்சியம் காட்டினர். முக கவசம் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுவது ஆகியவற்றை மறந்தனர். பெரிய விழாக்களில் பங்கேற்பது என, மக்கள் அதிக அளவில் கூடத் துவங்கினர். அதனால், வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. இதற்கு பின், மேலும் பல அலைகள் வரலாம் என்றும் கூறப்படுகிறது.

மூன்றாவது அலை பாதிப்பு எப்போது வரும் என்பது குறித்து தற்போது எதுவும் கூற முடியாது. இரண்டாவது அலை பாதிப்பு மற்றும் எதிர்கால பாதிப்புகளில் இருந்து, நம்மை காத்துக் கொள்வதற்கு, கொரோனா பரவல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அடுத் தது, தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
12-மே-202113:28:30 IST Report Abuse
Malick Raja நிபுணர்கள் நிலையை முதலில் தக்கவைத்தாலே போதும் .. காரணம் நிபுணர்கள் பலரும் எப்படி இறந்தார்கள் என்பதையும் மேற்கோள் காட்டுதல் நல்லது
Rate this:
Cancel
10-மே-202121:32:48 IST Report Abuse
ஆப்பு வானிலை அறிக்கை போல... மூணாம் வரும். வந்தா லேசானது முதல் கடுமையாக பாதிப்பு இருக்கும். வராமலேயே போகவும் வாய்ப்பு இருக்கு. இப்பிடி சொல்லிட்டா, கொரோனா மூணாவது வந்தா அப்பவே சொன்னோம், எச்சரிக்கை குடுத்தோம்னு வேதனை தெரிவிக்கலாம். வரலியா, கொரோனாவை பிரதமரும், முதல்வரும் சேந்து முறத்தால் அடிச்சு விரட்டிட்டாங்கன்னு மெடல் குடுக்கலாம்.
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
10-மே-202108:41:26 IST Report Abuse
Darmavan மிகப்பெரிய வேறுபாடு. நாட்டு மருத்துவர்கள் நம்பிக்கை அளிக்கிறார்கள் ஆங்கில மருத்துவர்கள் பயமுறுத்துகிறார்கள்.இது தடுக்கப்பட வேண்டும்.மருத்துவமுறை நோயாளியின் விருப்பத்துக்கு ஏற்ப கட்டுப்பாடில்லாமலிருக்க வேண்டும். திருத்தணிகாசலத்தை குண்டர் சட்டத்தில் அடைத்தது போல்.இல்லாமல்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X