முதல்வர்களுடன் மோடி ஆலோசனை

Updated : மே 11, 2021 | Added : மே 09, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
புதுடில்லி:கொரோனா நிலவரம் தொடர்பாக, நான்கு மாநில முதல்வர்களுடன், பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.நாட்டில், கொரோனா இரண்டாவது அலை பரவல் அதிகரித்துள்ளது. இதையடுத்து, மாநில முதல்வர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மாநிலத்தின் தொற்று நிலைமை, தேவையான உதவிகள் பற்றி, பிரதமர் மோடி அவ்வப்போது பேசி வருகிறார். இந்நிலையில், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், கர்நாடக
முதல்வர்களுடன் மோடி ஆலோசனை


புதுடில்லி:கொரோனா நிலவரம் தொடர்பாக, நான்கு மாநில முதல்வர்களுடன், பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.

நாட்டில், கொரோனா இரண்டாவது அலை பரவல் அதிகரித்துள்ளது. இதையடுத்து, மாநில முதல்வர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மாநிலத்தின் தொற்று நிலைமை, தேவையான உதவிகள் பற்றி, பிரதமர் மோடி அவ்வப்போது பேசி வருகிறார். இந்நிலையில், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், கர்நாடக முதல்வர் எடியூரப்பா, பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், உத்தரகண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத் ஆகியோரை, தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசித்தார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி பிரதமரிடம், முதல்வர்கள் தெரிவித்தனர். 'வைரஸ் பரவலை தடுக்க தேவையான உதவிகளை, மத்திய அரசு செய்யும்' என, அவர்களிடம் பிரதமர் உறுதியளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வணங்காமுடி திராவிடன் - அஞ்சாமை திராவிடர் உடமையடா ,இந்தியா
10-மே-202111:29:10 IST Report Abuse
வணங்காமுடி திராவிடன் இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்பதுதான் முக்கியமே தவிர இதிலும் குறை சொல்லிக்கொண்டிருப்பதில் எந்த பிரயோசனமுமில்லை. சுப்பிரமணியன்சுவாமி கூட நிர்வாகம் தோல்வியுற்றதாக குறிப்பிட்டு செய்தி வந்துள்ளது. இந்த நிலைமையில் மக்களின் வாழ்வாதாரத்துக்கு ஏதேனும் வழி செய்து விட்டு "அடைப்பு " செய்வதை பற்றி மத்திய மாநில அரசுகள் யோசிக்கலாம் . இதில் அரசியலை கழட்டி வைத்துவிடலாம்
Rate this:
Cancel
மு.க.ஸ்டாலின், ‘பாதை புதிது பயணம் புதிது - வாழ்க தமிழ்",இஸ்ல் ஆப் மேன்
10-மே-202111:28:05 IST Report Abuse
மு.க.ஸ்டாலின், ‘பாதை புதிது பயணம் புதிது நாள்தோறும் நோய்த்தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் எகிறி கொண்டிருக்கிறது. அதனை தடுப்பதற்கு மத்திய அரசு திணறிக் கொண்டிருக்கிறது. நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி அவர்களின் ஆலோசனை பெற்று கரோனா என்ற நோய்த்தொற்றை தடுத்து மக்களை அந்த கொடிய நோயிலிருந்து காப்பாற்றுங்கள் என்று சமூக அக்கறையோடு சோனியா கூறிய கருத்தை கூட அரசியலாக்குவதற்கு உங்கள் மனசாட்சி எப்படி இடம் கொடுக்கிறது.அவராவது தனது கட்சியில் உள்ள அதிருப்தியாளர்களைத்தான் சந்திக்க மறுக்கிறார். உங்களது பிரதமர் பத்திரிகையாளர்களையே சந்திக்க மறுக்கிறாரே. அது தவறு என்று உங்களுக்கு தெரியவில்லையா.
Rate this:
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
10-மே-202114:42:25 IST Report Abuse
கொக்கி குமாரு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மு க ஸ்டாலின்.... ஹி...ஹி...ஹி... சிறுபான்மையினர் ஓட்டு வங்கியாலும், அதிமுக பிளவுபட்டதாலும், மேல்தட்டு மக்களும், நன்கு படித்தவர்களும் ஓட்டு போடாமல் ஓட்டு சதவீதம் குறைந்ததாலும், போலியான மோடி வெறுப்பு பிரச்சாரத்தாலும் கிடைத்த வெற்றியை மக்கள் தேர்ந்தெடுத்ததாக சொல்லி லேபிள் ஒட்ட வேண்டாம்....
Rate this:
Cancel
10-மே-202111:26:28 IST Report Abuse
ஸ்டாலின் :: தோற்பவர்கள்தான் எதிர்கட்சி. அவர்கள்தான் , அரசை நெறிப்படுத்தி, தவறு நடக்காமல் காப்பவர்கள். அரசுக்கு கடிவாளம். அவர்கள் இல்லாத அரசு , பிரேக் இல்லாத வாகனம் அரசுக்கு ஆலோசனை சொல்வதற்கும், வழிபடுத்துவதற்கும்தான் எதிர்க்கட்சி. அப்படி, அவர்கள் ஆலோசனைகளை கேட்க முடியாது, அவர்கள் சொல்ல தேவையில்லை என்பது சர்வாதிகாரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X