பொது செய்தி

தமிழ்நாடு

பழங்குடியின கிராமத்தில் கொரோனா விழிப்புணர்வு

Added : மே 09, 2021
Share
Advertisement
ஊட்டி:'கொரோனா' தடுப்பு நடவடிக்கையாக பழங்குடியினர் கிராமங்களில் விழிப்புணர்வு நடந்தது.நீலகிரியில், 'கொரோனா' தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.ஊட்டி அருகே, பகல்கோடு மந்து, கக்கோடு மந்து, பெரட்ட தோல் மந்து, நரிகுழிமந்து உள்ளிட்ட பகுதிகளில் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். அந்த கிராம மக்கள் தாங்களாக முன்வந்து,
 பழங்குடியின கிராமத்தில்  கொரோனா விழிப்புணர்வு

ஊட்டி:'கொரோனா' தடுப்பு நடவடிக்கையாக பழங்குடியினர் கிராமங்களில் விழிப்புணர்வு நடந்தது.நீலகிரியில், 'கொரோனா' தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.ஊட்டி அருகே, பகல்கோடு மந்து, கக்கோடு மந்து, பெரட்ட தோல் மந்து, நரிகுழிமந்து உள்ளிட்ட பகுதிகளில் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். அந்த கிராம மக்கள் தாங்களாக முன்வந்து, மக்களை அழைத்து 'கொரோனா' விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.அப்போது, 'கொரோனா' வழிமுறைகளை கையாளும் விதமாக, தினமும் குறைந்தது, 10 முறையாவது சோப்பு போட்டு கை கழுவ வேண்டும்; சமூக இடைவெளியை கடைப்பிடித்து வெளியிடங்களில் கட்டாயம் 'மாஸ்க்' அணிய வேண்டும்; இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தியதால் தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்த்து வீட்டில் இருக்க வேண்டும்,' என, அறிவுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X