பொது செய்தி

இந்தியா

வரியை ஏன் குறைக்கவில்லை? நிர்மலா சீதாராமன் விளக்கம்!

Updated : மே 11, 2021 | Added : மே 09, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
புதுடில்லி:கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு பயன்படுத்தும் மருந்துகள், தடுப்பூசிகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் ஆகியவற்றுக்கான உள்ளூர் வினியோகம் மற்றும் இறக்குமதிக்கான ஜி.எஸ்.டி., வரியை குறைக்காதது குறித்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.'கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தும் மருந்துகள்
 வரி, ஏன், குறைக்கவில்லை? நிர்மலா,விளக்கம்!

புதுடில்லி:கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு பயன்படுத்தும் மருந்துகள், தடுப்பூசிகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் ஆகியவற்றுக்கான உள்ளூர் வினியோகம் மற்றும் இறக்குமதிக்கான ஜி.எஸ்.டி., வரியை குறைக்காதது குறித்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

'கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தும் மருந்துகள் உள்ளிட்டவற்றுக்கான, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை குறைக்க வேண்டும்' என, பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.


5 சதவீத ஜி.எஸ்.டி.,

இது குறித்து, மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான நிர்மலா சீதாராமன் கூறியுள்ளதாவது:தற்போது உள்நாட்டில் தடுப்பூசிகள் விற்பனை செய்வோர் மற்றும் வர்த்தக ரீதியில் இறக்குமதி செய்வோருக்கு, 5 சதவீத ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் இறக்குமதிக்கு, 12 சதவீத வரி விதிக்கப்படுகிறது.

தடுப்பூசி, மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு, ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு அளித்தால், உள்ளீட்டு வரியை அவர்களால் ஈடு செய்ய முடியாது. அந்த நிலையில், உள்ளீட்டு வரியையும் நுகர்வோரே செலுத்த நேரிடும். அதனால், இவற்றின் விலை உயரக் கூடிய நிலை ஏற்படும். இதனால் வீண் குழப்பங்கள் ஏற்படுவதுடன், மக்கள் அதிகம் செலவிடுவதை தவிர்க்கவே, வரி விலக்கு அளிக்கப்படவில்லை.தற்போது வசூலிக்கப்படும் 100 ரூபாய் வரியில், மத்திய - மாநில அரசுகள், தலா 50 ரூபாயை பகிர்ந்து கொள்கின்றன.


வரி விலக்கு

அத்துடன், மத்திய அரசுக்கு கிடைக்கும் 50 ரூபாயில், 41 சதவீதம் அதாவது, 20.50 ரூபாய் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. மொத்தத்தில் 100 ரூபாய் வரி வருவாயில், 70.50 ரூபாய் மாநிலங்களுக்கே கிடைக்கிறது.வரி விலக்கு அளித்தால், மாநிலங்களுக்கான வரி வருவாயும் குறையும்.

வெளிநாடுகளில் இருந்து இலவசமாக அல்லது நன்கொடையாக வரும் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி., மற்றும் சுங்கக் கட்டணங்களில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது; இது, ஏற்கனவே அமலில் உள்ளது. இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murugan - Puducherry,இந்தியா
10-மே-202123:29:51 IST Report Abuse
Murugan If they r unable to set off ITC against tax liability means they can get refund of which they paid during raw material purchase, so tis explanation is may not correct..,
Rate this:
Cancel
P. SRINIVASALU - chennai,இந்தியா
10-மே-202117:46:29 IST Report Abuse
P. SRINIVASALU இது இந்தியர்களின் தலையெழுத்து. இதுபோல நிதியமைச்சர் இனி இந்நாட்டுக்கு தேவையில்லை.
Rate this:
Cancel
Sathish - Coimbatore ,இந்தியா
10-மே-202116:33:47 IST Report Abuse
Sathish கொரோனா கூட மனது இரக்கப்பட்டு நம்மை விட்டு சென்றாலும் வரி போட்டு இவர்கள் கொன்று விடுவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X