அதிகாரிகளால் மத்திய அரசுக்கு பிரச்னை

Updated : மே 11, 2021 | Added : மே 09, 2021 | கருத்துகள் (49)
Share
Advertisement
பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பரிந்துரையின்படி, முக்கிய துறைகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். அமித் ஷா சிபாரிசில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளால், மத்திய அரசுக்கு பிரச்னைகள் அதிகமாகி வருகின்றன.அரசியல் சாணக்கியர் என அழைக்கப்பட்ட அமித் ஷாவிற்கே அடி சறுக்கியுள்ளது என்கின்றனர், பா.ஜ.,வினர். தேர்தல் ஆணையத்தில், மூன்று ஆணையர்கள் இருப்பர்.
 அதிகாரிகள், மத்திய அரசு,  பிரச்னை

பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பரிந்துரையின்படி, முக்கிய துறைகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். அமித் ஷா சிபாரிசில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளால், மத்திய அரசுக்கு பிரச்னைகள் அதிகமாகி வருகின்றன.

அரசியல் சாணக்கியர் என அழைக்கப்பட்ட அமித் ஷாவிற்கே அடி சறுக்கியுள்ளது என்கின்றனர், பா.ஜ.,வினர். தேர்தல் ஆணையத்தில், மூன்று ஆணையர்கள் இருப்பர். தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஓய்விற்கு பின், இப்போது இரண்டு பேர் தான் உள்ளனர். சுஷில் சந்திரா தலைமை ஆணையராகவும், ராஜிவ் குமார் ஆணையராகவும் உள்ளனர். மத்திய நிதித் துறைச் செயலராக பணியாற்றியவர் ராஜிவ் குமார். இவருக்கும், நிதி அமைச்சருக்கும் கருத்து வேறுபாடு இருந்தது. இவர் பதவி ஓய்வு பெற்ற பின் தான், பெருமூச்சு விட்டார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

அமித் ஷாவைச் சந்தித்து, தன்னை தேர்தல் ஆணையராக நியமிக்கும்படி வற்புறுத்தியுள்ளார் ராஜிவ் குமார். பலத்த எதிர்ப்பு இருந்த போதிலும், அமித் ஷா இவர் பெயரை பிரதமருக்கு பரிந்துரை செய்ய, தேர்தல் ஆணையரானார் ராஜிவ் குமார். இப்போது தேர்தல் ஆணையத்தில் இவரால் பல பிரச்னைகள். இது, பிரதமருக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. சி.பி.ஐ., இயக்குனராக இருந்த அலோக் வர்மாவும், அமித் ஷாவின் சிபாரிசில் நியமிக்கப்பட்டவர்.

இவருக்கும், அரசுக்கும் பெரும் பிரச்னை ஏற்பட்டு, நீதிமன்றம் வரை விஷயம் சென்றது. அலோக் வர்மா பதவி ஓய்வு பெற்ற பின் தான், இந்த பிரச்னை ஓய்ந்தது. இப்படி அமித் ஷாவின் ஆதரவு அதிகாரிகளால், பிரதமர் மோடிக்கு ஏகப்பட்ட சிக்கல்கள் என்கின்றன, பா.ஜ., வட்டாரங்கள்.

Advertisement




வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja - Trichy,இந்தியா
15-மே-202100:53:23 IST Report Abuse
Raja பிற்போக்கு ஜனதா பசங்க. சிபார்சுலா பிரச்சனையாம், யாரை ஏமாற்ற நாடகம் இது. இன்று ஜாதியாலும் மதத்தாலும் நட்டால் பிளவுபடுத்தி வைத்திருக்கும் பிற்போக்கு ஜனதா பசங்க.
Rate this:
Cancel
Amal Anandan - chennai,இந்தியா
12-மே-202103:54:52 IST Report Abuse
Amal Anandan //60 வருட திருட்டு அயோக்கிய அரசின் குற்றத்தை மறைக்க சரிசெய்ய 6 வருடம் போதாது....// எத்தனை வருடங்கள் ஆனாலும் இப்படி குறைதான் சொல்லுவீங்க திறமையின்மையால்.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
10-மே-202123:16:50 IST Report Abuse
Pugazh V ஆட்சித்றமையும் நிர்வாக அறிவும் இல்லாதவர்கள் நிறைந்த அரசு, பீஜேபீ அமைச்சர்கள், தனது கையாலாகாத்தனத்தை நைசாக அதிகாரிகள் மேல் பழி போடப் பார்க்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X