அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க.,வில் குழப்பம் முடிந்தது

Updated : மே 11, 2021 | Added : மே 09, 2021 | கருத்துகள் (46)
Share
Advertisement
சட்டசபை அ.தி.மு.க., தலைவராக தேர்வு செய்யப்படுபவரே, சட்டசபையின் பிரதான எதிர்க்கட்சி தலைவராக இருப்பார். அவருக்கு, சட்டசபை வளாகத்தில் தனி அறை, உதவியாளர் உள்ளிட்ட வசதிகள் கிடைக்கும்.மோதல்தற்போது, அ.தி.மு.க.,வில், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி., என, இரட்டைத் தலைமை உள்ளது. இதனால், ஏற்கனவே நடந்த, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில்,
அ.தி.மு.க.,வில் குழப்பம் முடிந்தது

சட்டசபை அ.தி.மு.க., தலைவராக தேர்வு செய்யப்படுபவரே, சட்டசபையின் பிரதான எதிர்க்கட்சி தலைவராக இருப்பார். அவருக்கு, சட்டசபை வளாகத்தில் தனி அறை, உதவியாளர் உள்ளிட்ட வசதிகள் கிடைக்கும்.


மோதல்

தற்போது, அ.தி.மு.க.,வில், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி., என, இரட்டைத் தலைமை உள்ளது. இதனால், ஏற்கனவே நடந்த, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், சட்டசபை அ.தி.மு.க., தலைவர் பதவிக்கு, இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது.
பன்னீர்செல்வம்., அந்த கூட்டத்தில், 'சசிகலாவை அ.தி.மு.க.,வில் இணைக்க வேண்டும் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்லியும், அதை நீங்கள் புறக்கணித்ததாலும், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கியதாலும், ஆட்சியை இழக்க வேண்டியதாயிற்று. இனிமேலாவது, சசிகலாவை சேர்க்க வேண்டும்' என்றார். அதற்கு கொங்கு மண்டல எம்.எல்.ஏ.,க்கள் சிலர், 'சசிகலாவை சேர்த்தால், நாங்கள் கட்சியிலிருந்து வெளியேறுவோம்' என, மிரட்டினர்.

அதற்கு பன்னீர்செல்வம்., 'முதல்வர் பதவிக்கு, உங்களை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்கிற போது, நீங்கள் எதிர்க்கட்சி தலைவர் பதவி கேட்டு, கட்சியில் சர்வாதிகாரியாக செயல்படாதீர்கள்' என்று, பழனிசாமியை பார்த்துக் கூறினார். அதற்கு துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, 'கட்சியின் நன்மைக்காக, நீங்கள் விட்டுக் கொடுக்க வேண்டும்' என்று, பன்னீர்செல்வத்திடம் கூறினார்.

இந்தக் கூட்டத்தில், இரு தரப்பினரிடமும் ஒருமித்த கருத்த ஏற்படவில்லை.

'ஸ்டாலின் பதவி ஏற்பு நிகழ்ச்சியில், நாம் இருவரும் பங்கேற்கலாம்; வாருங்கள்' என, பழனிசாமிக்கு, பன்னீர்செல்வம்., அழைப்பு விடுத்தார். ஆனால், பழனிசாமி., 'நாம் இருவரும் பங்கேற்க வேண்டாம்; நவநீதகிருஷ்ணனை அனுப்பி வைக்கலாம்' என்றார். ஆனால், எந்த பதிலும் தெரிவிக்காமல், பன்னீர்செல்வம்., மட்டும் பங்கேற்றார்.


இரு அணிகள்

ஸ்டாலினுக்கு முதல் நபராக, பன்னீ்ர்செல்வம்., வாழ்த்து தெரிவிப்பதும், முதல்வர் ஸ்டாலினுடன் நெருக்கமாக இருப்பதும், தி.மு.க., எதிர்ப்பு அரசியல் செய்ய முடியாத சூழ்நிலையை உருவாக்கி விடுமோ என, பழனிசாமி., கருதுகிறார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை, தனக்கு விட்டுக் கொடுத்தால், எதிர்க்கட்சி தலைவர் பதவியை விட்டுக் கொடுக்க தயார் என, பழனிசாமி., தரப்பினர் பேச்சு நடத்தினர். அதற்கு,பன்னீ்ர்செல்வம்., சம்மதிக்கவில்லை. ஒருங்கிணைப்பாளர் தான், எதிர்க்கட்சி தலைவராகவும் இருக்க வேண்டும் என, அவர் பிடிவாதம் பிடித்து வருகிறார்.

இரு தரப்பினரிடமும் சமரசம் ஏற்படாமல், இழுபறி நீடிக்கிறது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், போலீசாரிடம் அனுமதி பெற்று நடத்துகிற, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், இரு தரப்பினரும் விட்டுக் கொடுத்தாக வேண்டும் என்கிற நிலை ஏற்பட்டு உள்ளது.
மீண்டும் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், இன்று கூடியது. இதில் கட்சியின் இணை ஒருங்கிணப்பாளர் பழனிசாமி சட்டசபை கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதனால் குழப்பம் முடிவுக்கு வந்தது.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan - chennai,இந்தியா
17-மே-202120:57:17 IST Report Abuse
Narayanan Both of them just playing the game and giving the chance to media for their needs to boost their rate. Actually panneerselvam fully against to bring back sasikala was/is roomer. He started for dharmauththam only against sasikala .Only the media doing this for their itch . Now Mr. pazhanisamy must give the top leader post to OPS. By doing this there will be only one head will lead the party. That post should be for 3 years, again election to be held to another one. This scenario should be implemented . So that the chances being given to everybody .
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
17-மே-202116:54:47 IST Report Abuse
J.V. Iyer நீங்கள் இருவரும் அடித்துக்கொள்ளுங்கள். தீய திமுக நன்றாக வளரும்.
Rate this:
Cancel
Ellamman - Chennai,இந்தியா
15-மே-202109:07:03 IST Report Abuse
Ellamman அடிமை கட்சி குறித்து அக்கு வேறு ஆணி வேறாக தெரிந்து இருக்கு... ரொம்ப ஆச்சர்யம் தான்.... இவரே சச்சரவை தீர்த்துவிட்டார்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X