பேச்சு, பேட்டி, அறிக்கை| Dinamalar

சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : மே 10, 2021
Share
அண்ணாதுரை சொன்னதை, அப்படியே இவர் சொல்லி விட்டார். அந்த கால அரசியல், இப்போதைக்கு சரிப்படாது என்பதை தாமதமாக புரிந்து கொள்வார்...' என, கூறத் தோன்றும் வகையில், புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி அறிக்கை: பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மையுடைய, தமிழ் மண்ணின் முதல்வராக பொறுப்பேற்கும் ஒருவர், தமிழ் இனம் என்பதை விட்டு, தான் திராவிட இனத்தை சார்ந்தவன் என
 பேச்சு, பேட்டி, அறிக்கை

அண்ணாதுரை சொன்னதை, அப்படியே இவர் சொல்லி விட்டார். அந்த கால அரசியல், இப்போதைக்கு சரிப்படாது என்பதை தாமதமாக புரிந்து கொள்வார்...' என, கூறத் தோன்றும் வகையில், புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி அறிக்கை: பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மையுடைய, தமிழ் மண்ணின் முதல்வராக பொறுப்பேற்கும் ஒருவர், தமிழ் இனம் என்பதை விட்டு, தான் திராவிட இனத்தை சார்ந்தவன் என அடையாளப்படுத்த வேண்டியதன் அவசியம் என்ன? ஸ்டாலினின் திராவிட இன வாதம், தமிழ் இன அழிப்பின் அடையாளம் என பொருள் கொள்ளலாமா?
'நகர பஸ்களில் திருநங்கையர் பயணம் செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என, முதல்வர் அறிவித்துள்ளார். விரைவில், உங்கள் எதிர்பார்ப்பும் நிறைவேற்றப்படும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், பா.ஜ., செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை: அவசரமாக ஊரடங்கை அறிவித்த தமிழக அரசு, புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான இருப்பிடம், உணவு குறித்து, எந்த அறிவிப்பையும் செய்யாதது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
'கடந்த, ஏப்., 24ல், தமிழகம் இன்னொரு முழு ஊரடங்கை தாங்காது என்று கூறிய ஸ்டாலின் தான், இப்போது முதல்வர் ஆனதும், ஊரடங்கை பிறப்பித்துள்ளார் என்பதை மறக்க வேண்டாம்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக காங்., செய்தித் தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை: தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு, காலத்தின் தேவையறிந்து எடுக்கப்பட்ட சரியான முடிவு. 'டாஸ்மாக்'கை மூடியதும், 'அம்மா' உணவகங்களை திறப்பதும், முதல்வரின், ஏழைகளின் மீதுள்ள கரிசனம். முதல் அலையின் போது அமல்படுத்தப்பட்ட முரட்டுத்தனமான ஊரடங்காக இல்லாமல், மனிதநேயத்தோடு இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
'வாழ்த்துகள், பாராட்டுகள். எல்லாரும் இப்படி முன்வர வேண்டும்; கொரோனா ஓடி விடும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், கவிஞர் வைரமுத்து அறிக்கை: திருமண மண்டபங்களைத் தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றுவதற்கு தமிழக அரசு முடிவெடுத்தால், முதல் மண்டபமாக, எங்கள், 'பொன்மணி மாளிகை' திருமண மண்டபத்தை மருத்துவமனையாக மாற்ற வழங்குகிறோம்.
'நீங்களும், தி.மு.க.,வில் இணைந்து இத்தனை காலம் ஆகிறது; தலைமை கண்டு கொள்ள வில்லை என்ற கோபம் தென்படுகிறதே...' என, சொல்லத் தோன்றும் வகையில், தி.மு.க., செய்தித் தொடர்பாளர், ராதாகிருஷ்ணன் அறிக்கை: பொறுமை, அமைதி, நிதானம் என்பது முடங்கிக் கிடப்பது அல்ல. இலக்கை அடைய விடாமுயற்சியோடு, தடுமாற்றங்கள் அற்று, தெளிவாக செயல்படுவது.
'விக்கிரமராஜன், வௌ்ளையன் போன்றோர் வலியுறுத்த வேண்டிய விஷயம் இது. அவர்கள் அரசியல்ரீதியாக செயல்படுவதால், நீங்கள் வலியுறுத்துகிறீர்களோ...' என, சொல்லத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் கோவை சத்யன் அறிக்கை: மக்கள் நலனுக்காக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது. இதனால், வாடகை கடைகளில் தொழில் செய்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே, வாடகைக்கு விலக்கு அளித்து, வணிக பெருமக்களை காப்பாற்ற வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X