பொது செய்தி

தமிழ்நாடு

லேசான அறிகுறி இருந்தால் ரெம்டெசிவிர் தேவையில்லை: சுகாதாரத் துறை அமைச்சர்

Updated : மே 10, 2021 | Added : மே 10, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
சென்னை: ''சாதாரண தொற்று அறிகுறி இருந்தாலே, ஆக்சிஜன் படுக்கை வசதி, ரெம்டெசிவிர் மருந்து போன்றவற்றை, பொது மக்கள் தேடி செல்வதை தவிர்க்க வேண்டும்,'' என, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.சென்னை, வியாசர்பாடியில் உள்ள, அம்பேத்கர் கலை கல்லுாரியில், சித்தா கொரோனா சிகிச்சை மையத்தை, அமைச்சர்மா.சுப்பிரமணியன், நேற்று துவக்கி வைத்தார்.பின், அவர்

சென்னை: ''சாதாரண தொற்று அறிகுறி இருந்தாலே, ஆக்சிஜன் படுக்கை வசதி, ரெம்டெசிவிர் மருந்து போன்றவற்றை, பொது மக்கள் தேடி செல்வதை தவிர்க்க வேண்டும்,'' என, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.latest tamil news


சென்னை, வியாசர்பாடியில் உள்ள, அம்பேத்கர் கலை கல்லுாரியில், சித்தா கொரோனா சிகிச்சை மையத்தை, அமைச்சர்மா.சுப்பிரமணியன், நேற்று துவக்கி வைத்தார்.பின், அவர் கூறியதாவது:முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, கடந்த ஆண்டு செயல்பட்டு வந்த, சித்தா கொரோனா சிகிச்சை மையம், மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.சித்தா மருத்துவமனைஅம்பேத்கர் கலை கல்லுாரியில், 240 படுக்கைகளுடன் கூடிய இந்த மையத்தில், 195 பேர், மிதமான அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கடந்தாண்டு இம்மையத்தில், 2,290 பேர் சிகிச்சை பெற்று பயன் அடைந்து உள்ளனர்.

தமிழகம் முழுதும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி போன்ற, இயற்கை முறை மருத்துவமனைகள் விரிவுபடுத்தப்படும்.இந்த மாதத்திற்குள், தர்மபுரி, தேனி, நாமக்கல், கரூர், திருவண்ணாமலை, அரியலுார், தென்காசி, மதுரை, திண்டுக்கல், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய, 12 மாவட்டங்களில், இயற்கை முறை மருத்துவ மையங்கள் அமைக்கப்படும்.மேலும், தென்சென்னையில் உள்ள ஏ.எம்.ஜெயின் கல்லுாரியில், 70 படுக்கையுடன் கூடிய, சித்தா கொரோனா சிகிச்சை மையம் துவக்கப்பட உள்ளது.மேலும், இயற்கை முறை மருத்துவத்தில், 1,410 பேர் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களை ஒருங்கிணைத்து, மேலும் பல இடங்களில், இயற்கை முறை மருத்துவ மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு, உள் மருந்துகளாக கபசுர குடிநீர், அமுக்கராசூரண மாத்திரை, பகரம்மானந்தபைரவ மாத்திரை, தாளிசாதி சூரணம், ஆடாதொடை மணப்பாகு ஆகியவை வழங்கப்படுகின்றன. மனநல ஆலோசனைகள்வெளி மருந்தாக கற்பூராதி தைலம், பெயின்பாம் வழங்கப்படுகின்றன.உணவே மருந்து என்ற அடிப்படையில், தினமும் காலையில் சீரான குடிநீர், மாலையில் கரிசாலை பால், இரவில் சுக்கு கஞ்சி போன்ற, சிறப்பு மூலிகை வகை உணவுகள், நோயாளிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.புற சிகிச்சைகளாக, காலையில் திறந்தவெளியில், சித்தர் யோகா, திருமூலர் பிராணாயாமம், வர்ம சிகிச்சை, சித்தர் முத்திரைகள், மூலிகை நீராவி சிகிச்சை மற்றும் மனநல ஆலோசனைகள், நோயாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


latest tamil newsசென்னை மாநகராட்சி சார்பில், இன்று முதல், 11,800 களப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று, ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். தற்போது, சென்னையில், ௨௧ கொரோனா சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றை, 30 ஆக அதிகரிக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.தமிழகத்தை பொறுத்தவரை, சிகிச்சைக்கு வரும் கொரோனா நோயாளிகள், ஆக்சிஜன் படுக்கை வசதிகளே வேண்டும் என்ற எண்ணத்தோடு, மருத்துவமனைகளில் குவிகின்றனர்.

அதை கட்டுப்படுத்தும்வகையில், குறைவான அறிகுறி உள்ளவர்களுக்கு, சிகிச்சை அளிக்கும் வகையில், இதுபோன்ற சித்தா சிகிச்சை மையங்கள், மீண்டும் துவங்கப்பட்டுள்ளன.அதேபோல, தொற்று அறிகுறி இருந்தாலே, ஆக்சிஜன் படுக்கை வசதி, 'ரெம்டெசிவிர்' மருந்து போன்றவற்றை தேடி செல்வதை, பொது மக்கள் தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் முழு ஒத்துழைப்பு

சுகாதாரத் துறை செயலர்ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''தமிழகத்தில் உள்ள, 800 தனியார் மருத்துவமனைகளில், முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் வாயிலாக, சிகிச்சை பெற்று கொள்ளலாம். ''இது குறித்து, அந்தந்த மருத்துவமனைகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் முழு ஒத்துழைப்பு தந்தால் தான், முன்னர் போல, கொரோனா பரவலை தடுக்க முடியும்,'' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
10-மே-202113:31:15 IST Report Abuse
g.s,rajan ஆனா இந்த கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ் எல்லாருடைய பேங்க் பேலன்ஸ் ஐயும் காலி பண்ணுது தனியார் மருத்துவ மனைகளில் பொதுஜனம் சேர்ந்தா டவுசரை கழட்டிவிட்டுதான் விடுவாங்க .மொத்தத்துல கொரோனா இருக்கா. இல்லையா ???தெரியல பொய் சொல்றாங்க
Rate this:
Cancel
10-மே-202111:19:00 IST Report Abuse
ஸ்டாலின் :: உண்மை இதேமாதிரி கொரானா positive என்றவுடன் எல்லோரும் CT SCAN THORAXIN ( RS 4000 ) எடுக்க ஓடுகிறார்கள் , அவர்களும் without Dr pres எடுக்கிறார்கள் , இந்த மாதிரி தேவையற்ற பீதியை அரசு மக்களுக்கு விளக்கணும் , முன்னர் இருந்த அடிமை அரசு பீஜேபிக்கு சேவகம் செய்வதிலேயே நேரம் செலுத்தியது
Rate this:
Cancel
10-மே-202111:06:11 IST Report Abuse
ஆரூர் ரங் SIDCO நில மோசடி ஊழலில் குற்றப்பத்திரிகை 😝 ஜாமீனில் இருப்பவர் ( அ) சுகாதார மந்திரி. தமிழகத்தின் பெருநோய் திராவிஷ😝 ஊழல்
Rate this:
மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - மாநிலங்கள் VS ஒன்றிய அரசு,இந்தியா
10-மே-202112:50:42 IST Report Abuse
மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி பெரிசு நீ வீரன் என்றால் ஒரு PIL போட்டேன் தில் இருந்தா எப்படி ஒரு ஊழல் வழக்கில் உள்ளவர் மந்திரி யாகலாம் என்று அதைவிட்டு இங்கே பேசி என்ன பயன் உன் வயசுக்கு மரியாதை தரணும் ஆனா அதற்கு நீ WORTH ஆஹ் இருக்கனும் இல்லையா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X