வாலாஜாபாத் : பரந்துார் ஆரம்ப சுகாதார நிலையத்தில், கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள, கிராமப்புற மக்கள் அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வாலாஜாபாத் ஒன்றியத்தில், பரந்துார் ஆரம்ப சுகாதார நிலையம், வட்டார மருத்துவ அலுவலகமாகவும் இயங்கி வருகிறது. இது, பரந்துார், காரை, சிறுவாக்கம், கோவிந்தவாடி உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த கர்ப்பிணிகளுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் பிரசவம் பார்க்கும் முன்னோடி சுகாதார நிலையமாகவும் திகழ்ந்து வருகிறது.காய்ச்சல் மற்றும் பலவித சிகிச்சைக்கு, பலரும் வருகின்றனர். அவ்வாறு வருவோரிடம், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு, மருத்துவ அலுவலர்கள் அறிவுரை வழங்குகின்றனர்.அவர்களின் அறிவுரையை ஏற்று, கிராம மக்கள், 'கோவிட் - -19' தடுப்பூசி போட்டுக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
தினமும், ஐந்து பேருக்கும் மேல், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். மற்றவர்களும், தாமாக முன்வந்து, கொரோனா தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளலாம் என, மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE