திருவள்ளூரில் கடும் நெரிசல்

Added : மே 10, 2021 | |
Advertisement
முழு ஊரடங்கு உத்தரவுஅமல்படுத்தப்படுவதை அடுத்து, நேற்று, திருவள்ளூர் நகரைச் சேர்ந்தவர்கள், கடைகளில் பொருட்கள் வாங்க குவிந்தனர். zஊத்துக்கோட்டையில் போலீஸ் - வியாபாரிகள் கலந்துரையாடல் கூட்டத்தில், டி.எஸ்.பி., சாரதி பேசுகையில், ''அரசு அறிவித்த கடைகளை தவிர, மற்ற கடைகளை திறந்தால், கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வீட்டில்இருந்து வெளியே வரும்போது, கட்டாயம்முக கவசம்

முழு ஊரடங்கு உத்தரவுஅமல்படுத்தப்படுவதை அடுத்து, நேற்று, திருவள்ளூர் நகரைச் சேர்ந்தவர்கள், கடைகளில் பொருட்கள் வாங்க குவிந்தனர். zஊத்துக்கோட்டையில் போலீஸ் - வியாபாரிகள் கலந்துரையாடல் கூட்டத்தில், டி.எஸ்.பி., சாரதி பேசுகையில், ''அரசு அறிவித்த கடைகளை தவிர, மற்ற கடைகளை திறந்தால், கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வீட்டில்இருந்து வெளியே வரும்போது, கட்டாயம்முக கவசம் அணிய வேண்டும்.''கடைகளில் சமூக இடைவெளி கட்டாயம். தேவையின்றி யாரும் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும்,'' என்றார்.கும்மிடிப்பூண்டி பகுதியில், கடைகள், சலுான் கடைகள் நிரம்பி வழிந்தன.

வடமாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பி செல்ல, டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக, கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில், நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் முன்பதிவு செய்தனர்.திருத்தணி, கடம்பத்துார், பொன்னேரி, என, மாவட்டம் முழுதும், பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க கடைகளில் குவிந்ததால், நேற்று, நெரிசல் அதிகமாக இருந்தது.இதேபோல் காஞ்சிபுரம். செங்கல்பட்டு மாவட்டங்களிலும் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X