வஞ்சிரம் மீன் ரூ.1,600 ஆனாலும் விற்பனை ஜோரு

Added : மே 10, 2021 | |
Advertisement
தொண்டாமுத்தூர்:கோவையில் நேற்று இறைச்சி, மீன் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.தமிழகத்தில், இன்று முதல் 24ம் தேதி வரை, முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. இதனால், கடந்த இரண்டு நாட்களாக, மளிகை கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள அனைத்து இறைச்சி
 வஞ்சிரம் மீன் ரூ.1,600 ஆனாலும் விற்பனை ஜோரு

தொண்டாமுத்தூர்:கோவையில் நேற்று இறைச்சி, மீன் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.தமிழகத்தில், இன்று முதல் 24ம் தேதி வரை, முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. இதனால், கடந்த இரண்டு நாட்களாக, மளிகை கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளிலும், பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.பெரும்பாலான கடைகளில், பொதுமக்கள் வரிசையில் நின்று இறைச்சி வாங்கி சென்றனர். சில கடைகளில், கூட்டம் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர்.சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, கடைக்காரர்கள் விலையை உயர்த்தி விற்றனர். வடவள்ளி பகுதியில், ஒரு கிலோ மட்டன், 800 ரூபாய்க்கும், தொண்டாமுத்தூர் சுற்றுப்பகுதியில், 600 ரூபாய்க்கும் நேற்று விற்பனையானது. நகர கடைகளில் வஞ்சிரம் மீன் கிலோ, 1,600க்கும், அயிரை மீன் ரூ.400க்கும் விற்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X