உ.பி., அரசு மீது அதிருப்தி: அமைச்சர் கடிதத்தால் சர்ச்சை

Updated : மே 10, 2021 | Added : மே 10, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
புதுடில்லி: உத்தர பிரதேசத்தில் மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வார் கடிதம் எழுதியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது.

புதுடில்லி: உத்தர பிரதேசத்தில் மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வார் கடிதம் எழுதியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



latest tamil news


உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பா.ஜ.,வைச் சேர்ந்தவரும், மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்புத் துறை இணை அமைச்சருமான சந்தோஷ் கங்வார், மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:உ.பி.,யில் பொது மக்களின் தொலைபேசி அழைப்புகளுக்கு, சுகாதாரத்துறை அதிகாரிகள் முறையாக பதில் அளிப்பதில்லை. இதனால், மருத்துவமனைகளில் படுக்கைகளை தேடி, மக்கள் அலைகின்றனர்.பரெய்லி மாவட்டத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தேவையின்றி பலர் ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி, வீட்டில் பதுக்கி வைத்துள்ளனர். இதனால், தேவை உள்ளவர்களுக்கு ஆக்சிஜன் கிடைப்பதில்லை. சிலர், ஆக்சிஜன் சிலிண்டர்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக புகார்கள் வருகின்றன. பரெய்லி மாவட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை திறக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.


latest tamil news


'வென்டிலேட்டர்'கள் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு, தனியார் மருத்துவமனைகள் தள்ளப்பட்டுள்ளன.குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனமாக பதிவு பெற்றுள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு, தள்ளுபடி விலையில் மருத்துவ உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சரே, உ.பி., - பா.ஜ., அரசின் நடவடிக்கைகளில் அதிருப்தி தெரிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நானும் Ji யாட பித்தளை செம்பு - அம்பை - வீகேபுரம்,இந்தியா
10-மே-202113:10:06 IST Report Abuse
நானும் Ji யாட பித்தளை செம்பு நாங்கள் ஏன் அலோபதி மருத்துவத்தின் கட்டமைப்பினை மேம்படுத்த வேண்டும். எங்களிடம் உள்ள மருத்துவத்தின் முன் எதுவும் இல்லை.
Rate this:
Cancel
Raj - Namakkal,சவுதி அரேபியா
10-மே-202111:54:16 IST Report Abuse
Raj சமீபத்தில் நடந்த UP உள்ளச்சி தேர்தல் முடிவுகளை எந்த ஊடகங்களும் பெரிது படுத்தி வெளியிடாது ஏனோ?
Rate this:
Cancel
Raj - Namakkal,சவுதி அரேபியா
10-மே-202111:52:54 IST Report Abuse
Raj குறங்குகையில் பூமாலையை கொடுத்து அழகு பார்க்கிறார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X