பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: ராஜதந்திரம் இல்லையே!

Updated : மே 10, 2021 | Added : மே 10, 2021 | கருத்துகள் (70)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :தொ.ச.சுகுமாறன், வேலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:நடந்து முடிந்த தேர்தல், ஒரு விஷயத்தை நன்கு தெளிவாக்கியுள்ளது.தி.மு.க.,விடம் இருந்து, அதன் கூட்டணி கட்சிகள் கேட்ட தொகுதிகளும், இடங்களும் கிடைக்கவில்லை. எனினும், அந்தக் கட்சிகள் அனைத்தும், 'தமிழகத்தில், பா.ஜ., கால் ஊன்றக்
idhu, ungal, idam, இது,உங்கள், இடம்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :



தொ.ச.சுகுமாறன், வேலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

நடந்து முடிந்த தேர்தல், ஒரு விஷயத்தை நன்கு தெளிவாக்கியுள்ளது.தி.மு.க.,விடம் இருந்து, அதன் கூட்டணி கட்சிகள் கேட்ட தொகுதிகளும், இடங்களும் கிடைக்கவில்லை. எனினும், அந்தக் கட்சிகள் அனைத்தும், 'தமிழகத்தில், பா.ஜ., கால் ஊன்றக் கூடாது' என்ற ஒரு செய்தியை மக்களுக்கு கூறி, தங்களை தாங்களே தேற்றிக் கொண்டன.

தி.மு.க., சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என, நிர்பந்தம் செய்த போதும், கட்சியின் மானம் காற்றில் பறந்த போதும், அக்கட்சியின் தலைவர்கள், பா.ஜ.,வை முன்னிறுத்தி, தங்கள் மனதை தேற்றிக் கொண்டனர்.தங்களுக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, பா.ஜ.,விற்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என, இடதுசாரிகள், முஸ்லிம் அமைப்புகள், ம.தி.மு.க., - வி.சி., கட்சிகள் களம் இறங்கின

.அதனால் தான், சட்டசபை தேர்தல் பிரசாரத்திலும், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்தன.தேர்தலில், தி.மு.க., வெற்றிபெற்று, ஆட்சி அமைத்தாலும், அதன் கூட்டணி கட்சிகளின் முயற்சி தோற்றுவிட்டது. ஆம்... தமிழகத்தில் தாமரை மலர்ந்து விட்டது.


latest tamil news


மேற்கு வங்கத்தில், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளும் கூட்டணி அமைத்தன. தேர்தலில், பா.ஜ.,விற்கு வெற்றி வாய்ப்பு இருப்பதை உணர்ந்த அக்கட்சிகள், தாம் தோற்றாலும் பரவாயில்லை; பா.ஜ., ஜெயிக்கக் கூடாது என, நினைத்தன.அதனால், அக்கட்சி தொண்டர்கள், திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு அளித்தனர். அதனால், மம்தா வெற்றி பெற்றார். ஆனால், பா.ஜ., கடந்த தேர்தலை விட, மிக அதிக தொகுதிகளில் வென்று, வலிமையாக உள்ளது.காங்கிரசும், கம்யூ., கட்சிகளும், தங்களுக்கு தாங்களே குழியைத் தோண்டின. மேற்கு வங்கத்தில், இனி அக்கட்சிகளுக்கு வாழ்வு இல்லை.

அதாவது, இந்த கட்சிகள், பா.ஜ.,வை எதிர்ப்பதாக நினைத்து, கரைந்து வருகின்றன. பா.ஜ.,வை பொறுத்த வரையில் மேற்கு வங்கம், புதுச்சேரி, தமிழகம் என, அனைத்து இடங்களிலும், வெற்றியே பெற்றுள்ளது.காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளிடம் ராஜதந்திரம் இல்லையே!

Advertisement




வாசகர் கருத்து (70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
11-மே-202102:18:51 IST Report Abuse
தல புராணம் சவுக்கித்தார் மோடி அவர்களே, பறந்து பறந்து கும்பமேளா வைரஸை பரப்பி எந்த இந்தியர்களை காப்பாத்தி, எந்த மானுட வர்க்கத்தையே காப்பாத்தினீங்க? 2,50,000 தினசரி தொற்று இருக்கும் சமயத்தில், பல்லாயிரம் மக்களை ஒன்று கூட்டினீர், இந்த அளவு கூட்டத்தை நான் பார்த்ததில்லைன்னு பூரிப்படைஞ்சி பொங்குனீங்களே, 40,00,000 பேரை கும்பமேளான்னு கூடவச்சீங்களே? உங்களாலே ஒரு நாளைக்கி 4000 உயிரிகள் சாவது என்னிக்காவது மனசுக்கு உறுத்துமா?? உண்மையான சாவுகள் எண்ணிக்கை 2 இலிருந்து 5 மடங்கு வரை அதிகமிருக்கும் என்று இந்திய மருத்துவர்கள் அடித்து சொல்கிறார்கள்.. 5 இலிருந்து 10 மடங்கு அதிகம் சாவுகள் என்று களத்தில் இருக்கும் வெளிநாட்டு பத்திரிக்கைகள் ஆதாரத்துடன் வெளியிடுகின்றன.. குறைந்தபட்சம் என்று வைத்தாலே 10,000 சாவுகள்.. ஆற்றில் உப்பி மிதக்கும் பிணங்கள் உங்களின் பொய்யை பறை சாற்றிக் கொண்டு இருக்கின்றன.. என்ன செய்து இந்த பாவங்களிலிருந்து கரையேறப் போகிறீர்கள்.
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
11-மே-202116:53:56 IST Report Abuse
Dr. Suriyaசொடலை கூடதான் இந்த கூடியிருக்கும் கூட்டத்தை பார்த்தல் 200 அல்ல 234 ளுமே திமுகா ஜெயிக்கிமுன்னு சொன்னா... அப்போ அவரால பரவிளையா கொரானா?...
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
11-மே-202122:30:29 IST Report Abuse
தமிழவேல் சொடலை டில்லியிலிருந்தா கொண்டுவந்து சேர்த்தார் ? ஒரு பிரதமர் ஒரு இடத்துக்கு வருவது என்றால் அவர் பின் வரு படைகளின் எண்ணிக்கைப் பற்றித்தெரியுமா... அந்த படைகள் டில்லியில் எந்தெந்த மூலையில் உள்ளார்கள் ?...
Rate this:
avvaiyar - Singapore,சிங்கப்பூர்
12-மே-202108:35:38 IST Report Abuse
avvaiyarஇல்ல தல புராணம் , எனக்கு இது சீனா-பாகிஸ்தான் Anti-Indian sleeper cell சதி மாதிரி தெரியுது . காலிஸ்தான் + pakisthani பசங்க டெல்லியில் Januvary இல் farmer agitation என்ற போர்வையில் ஆர்பாட்டம் செய்து வைரஸை பரப்பி விட்டது....
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
12-மே-202113:32:38 IST Report Abuse
Dr. Suriyaதமிழ்வெளுக்கு வரலாறு தெரியல... தேர்தல் பிரசாரத்துக்கு முன்னமே.. தமிழகத்துல கூரான பூந்திடிச்சு தப்லிகால.......
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-மே-202113:07:14 IST Report Abuse
தமிழவேல் அதுவும் போதாதுன்னு கொண்டாந்து இறக்கினீங்களா ?...
Rate this:
Cancel
Asagh busagh - Munich,ஜெர்மனி
10-மே-202121:35:17 IST Report Abuse
Asagh busagh எனக்கு என்னவோ ஸ்டாலின் (மோடிய காபி அடிச்சி அது போலவே ஆட்சி) போற ஸ்பீட பார்த்தா வருங்காலத்துல கூட்டணி பேச மோடி அலுவலகத்துல தான் வேண்டிய நிப்பாட்டுவாப்ல போல. ஸ்டாப்பிங் இல்லாத இந்த வண்டில இருந்து மானங்கெட்ட கூட்டணி கட்சி தலைவன் எல்லாம் குதிப்பானுங்களா மாட்டானுங்களாகிறது தான் மில்லியன் டாலர் கேள்வி. பேசாம குந்திகினா மானம் மட்டும் தான் போவும். குதிச்சானுவொணா உயிரும் சேர்ந்தே போயிரும்.
Rate this:
Cancel
BALU - HOSUR,இந்தியா
10-மே-202121:21:23 IST Report Abuse
BALU காங்கிரசும் கம்யூனிஸ்ட்டும் கரைந்து காணாமல் போவது இந்தியாவுக்கு மிகுந்த நண்மை பயக்கும். விரைவாக இது நடைபெற வேண்டும். காங்கிரஸ் இல்லாத இந்தியா மட்டுமே வல்லரசு ஆக முடியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X