பொது செய்தி

தமிழ்நாடு

2 லட்சம் ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள் இன்று தமிழகம் வருகை

Updated : மே 10, 2021 | Added : மே 10, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை: மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ள, 2 லட்சம், 'ரெம்டெசிவிர்' மருந்து குப்பிகள், இன்று தமிழகம் வரவுள்ளதால், தட்டுப்பாடு குறையலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.கொரோனா இரண்டாவது அலை பரவலால், மாநிலம் முழுதும் உள்ள, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க,

சென்னை: மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ள, 2 லட்சம், 'ரெம்டெசிவிர்' மருந்து குப்பிகள், இன்று தமிழகம் வரவுள்ளதால், தட்டுப்பாடு குறையலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.



latest tamil news



கொரோனா இரண்டாவது அலை பரவலால், மாநிலம் முழுதும் உள்ள, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப்படுகிறது.இது, உயிர்காக்கும் மருந்தல்ல என்று, மத்தியஅரசு கூறிவந்தாலும், டாக்டர்கள் பலரும், இந்த மருந்துகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். அதனால், நாடு முழுதும் இம்மருந்தின் தேவை அதிகரித்துள்ளது.

தமிழகம் உட்பட பல மாநிலங்களில், ரெம்டெசிவிர் மருந்து கிடைக்காத நிலை ஏற்பட்டது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில், அரசால் இந்த மருந்து வழங்கப்படுகிறது. அதனால், அங்கு கூட்டம் அலைமோதுகிறது. நாள் கணக்கில் காத்திருந்து பலர், மருந்துகளை வாங்கிச் செல்கின்றனர்.ஒரு நோயாளிக்கு செலுத்த, அதிகபட்சமாக ஆறு குப்பி மருந்துகள் வழங்கப்படுகின்றன. இதற்கு கட்டணமாக, 9,408 ரூபாய் பெறப்படுகிறது.


latest tamil news


பொதுமக்களின் நலன் கருதி, திருச்சி உட்பட, நான்கு மாவட்டங்களில், இந்த மருந்து விற்பனையை தற்போது, தமிழக அரசு துவக்கியுள்ளது.இந்நிலையில், தமிழகத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சிகிச்சை அளிக்க தேவையான ரெம்டெசிவிர் மருந்துகளை வழங்க வேண்டும் என, பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். அதையேற்று, தமிழகத்திற்கு, 2 லட்சம் ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.

இந்த மருந்துகள் இன்று தமிழகத்திற்கு எடுத்து வரப்பட்டு, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளன. அடுத்த சில நாட்களில், இவை விற்பனைக்கு வரும் போது, ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு தமிழகத்தில் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vnatarajan - chennai,இந்தியா
10-மே-202117:08:38 IST Report Abuse
vnatarajan இது உயிர்காக்கும் மருந்தில்லை என்று மத்திய அரசுகூறும்போது ஏன் மருத்துவர்கள் நோயாளியின் உடலில் செலுத்துகிறார்கள். உய்த்தபோது வரும் மருந்தின் ஒரு பகுதி பணமில்லாத ஏழை நோயாளிக்கு ஒதுக்கவேண்டும். கள்ள சந்தையில் விற்காமல் வார் ரூம் தீவிரமாக கண்காணிக்கவேண்டும்
Rate this:
Cancel
Ray - Chennai,இந்தியா
10-மே-202114:32:52 IST Report Abuse
Ray கோவாக்ஸின் கிடையாதோ?
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
10-மே-202112:47:15 IST Report Abuse
siriyaar இந்த வாரத்தில் தமிழக கடன் 10000 ஆயிரம் கோடி அதிகரிப்பு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X