பொது செய்தி

தமிழ்நாடு

விலங்குகளுக்கு உணவு வழங்க அனுமதி வேண்டும்: ஆர்வலர்கள் கோரிக்கை

Updated : மே 10, 2021 | Added : மே 10, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
சென்னை: 'ஊரடங்கு காலத்தில், ஆதரவற்ற விலங்குகளுக்கு உணவளிக்க செல்வோரை அனுமதிக்க வேண்டும்' என, விலங்குகள் நல ஆர்வலர்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த, வரும், 24 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. ஊரடங்கு காலத்தில், யார் யார் வெளியில் செல்லலாம் என்பதற்கு, அரசு உரிய வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது.இதன்படி, முன்கள

சென்னை: 'ஊரடங்கு காலத்தில், ஆதரவற்ற விலங்குகளுக்கு உணவளிக்க செல்வோரை அனுமதிக்க வேண்டும்' என, விலங்குகள் நல ஆர்வலர்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



latest tamil news


தமிழகத்தில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த, வரும், 24 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. ஊரடங்கு காலத்தில், யார் யார் வெளியில் செல்லலாம் என்பதற்கு, அரசு உரிய வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது.

இதன்படி, முன்கள பணியாளர்கள், அத்தியாவசிய சேவையில் இருப்போர் மட்டும், வெளியில் செல்ல முடியும். இந்நிலையில், தனிமைப்படுத்தப் பட்டவர்களுக்கும், ஏழை மக்களுக்கும் உணவு அளிக்கும் பணியை, பல்வேறு தன்னார்வ அமைப்புகள் மேற்கொள்கின்றன.ஊரடங்கு காலத்தில், ஆதரவற்ற விலங்குகள் உணவு கிடைக்காமல் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.


latest tamil news


இதற்கு உதவ, ஏராளமான தன்னார்வலர்கள் உள்ளனர்.இது குறித்து, விலங்குகள் நல ஆர்வலர் தீபக் நம்பியார் கூறியதாவது:ஆதரவற்ற விலங்குகள், ஊரடங்கு காலத்தில் தண்ணீர், உணவு கிடைக்காமல் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. அவைகளுக்கு உதவ, தன்னார்வலர்கள் தயாராக உள்ளனர்.அவற்றுக்காக, உணவு எடுத்து செல்லும் போது, போலீசார் அனுமதிப்பதில்லை.

எனவே, இத்தகைய தன்னார்வலர்களை அனுமதிக்க, அரசு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். இதற்காக, அரசுக்கு மனு அளித்து இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா
10-மே-202117:50:26 IST Report Abuse
தமிழ்வேள் தெருநாய்களுக்கு கனகாரியமாக உணவு கொடுப்பார்கள் ..அது சாலையில் போகிறவன் வருகிறவன் என்று எல்லோரையும் சகட்டுமேனிக்கு துரத்தி கடிக்கும் ....நாய்கள் லைசென்ஸ் பெற்று வீட்டில் மட்டுமே வளர்க்கவேண்டும் ....தெருநாய்களை பிடித்து பட்டிகளில் அடைப்பது உத்தமம் ..தெருவில் நாயை அலையவிடுபவர்களுக்கு வலுவான அபராதம் விதிக்கவேண்டும் ....சோறுபோட வக்கில்லாதவன் எதற்கு நாய்வாளர்க்க வேண்டும் ?
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
10-மே-202117:11:32 IST Report Abuse
vnatarajan அரசாங்கம் இவர்கள் கோரிக்கையை கண்டிப்பாக பரிசீலிக்கவேண்டும்
Rate this:
Cancel
10-மே-202116:10:43 IST Report Abuse
ஆப்பு இதுக்கெல்லாம் அனுமதி தேடுவது வேலையத்த வேலை. எங்க ஊரில் அந்தந்த பகுதி மக்களே தெருநாய்களுக்கு தேவையான உணவு வழங்கி வருகின்றனர். சொந்தக் காசில் விளம்பரம் இல்லாம ஒரு பிஸ்கெட் போடுங்க. வசூல் செஞ்சு, பேனர் வெச்செல்லாம் செய்த வாணாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X