பொது செய்தி

இந்தியா

6 அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள்; அரசுக்கு கடற்படை கோரிக்கை

Updated : மே 10, 2021 | Added : மே 10, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: 'இந்திய - பசிபிக் கடல் பகுதியில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள, ஆறு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் தேவை' என, அரசுக்கு கடற்படை கோரிக்கை விடுத்துள்ளது.உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக, இந்திய கடற்படை தலைமை தளபதி கரம்பீர் சிங் கூறியதாவது:குஜராத் மாநிலம் கீவாடியாவில், முப்படை கமாண்டர்களின் மாநாடு சமீபத்தில் நடந்தது.அப்போது, இந்திய - பசிபிக் கடல்

புதுடில்லி: 'இந்திய - பசிபிக் கடல் பகுதியில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள, ஆறு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் தேவை' என, அரசுக்கு கடற்படை கோரிக்கை விடுத்துள்ளது.



latest tamil news


உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக, இந்திய கடற்படை தலைமை தளபதி கரம்பீர் சிங் கூறியதாவது:குஜராத் மாநிலம் கீவாடியாவில், முப்படை கமாண்டர்களின் மாநாடு சமீபத்தில் நடந்தது.அப்போது, இந்திய - பசிபிக் கடல் பகுதியில், இந்தியா சந்தித்து வரும் சவால்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள, கடற்படைக்கு ஆறு அணு சக்தி நீர்மூழ்கி கப்பல்கள் தேவை என, தெரிவிக்கப்பட்டது.


latest tamil news


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு, வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் எடுத்து வரும் பணியில், போர்க்கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டம் குறித்து பிரதமர் மோடியுடன் சமீபத்தில் ஆலோசிக்கப்பட்டது. அப்போது அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் தேவை பற்றி பிரதமரிடம் எடுத்துக் கூறப்பட்டது. ராணுவ அமைச்சகத்துடன் ஆலோசிப்பதாக பிரதமர் உறுதியளித்தார். அணுசக்தி நீர் மூழ்கி கப்பல்களை, கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தினால், இந்திய - பசிபிக்கடல் பகுதி பாதுகாப்பாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா
10-மே-202111:29:40 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு காங்கிரஸ் அரசில் ஆண்டனி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த பொழுது அதிக நிதி ஒதுக்கப்பட்டது இருந்தும் ? இதற்கெல்லாம் முன்னுரிமை அளிக்கப்படவில்லை காரணம் "ஒதுக்கிக் கொண்டதுதான்"
Rate this:
Cancel
S Bala - London,யுனைடெட் கிங்டம்
10-மே-202110:12:51 IST Report Abuse
S Bala இதெல்லாம் தேவையா என்று பப்பு பாணியில் சில பதிவுகளும் வரும்.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
10-மே-202108:36:02 IST Report Abuse
தல புராணம் இந்தியாவிலே ஆக்சிஜன் தட்டுப்பாடு வந்தா, அதில ஏறி தப்பிச்சிடுவாங்க..
Rate this:
Chandradas Appavoo - Kuzhithurai,இந்தியா
10-மே-202117:28:34 IST Report Abuse
Chandradas Appavooஉன்னை முதலில் அதில் அனுப்பலாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X