பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வரின் தனிச்செயலர் பெயரில் குடியிருப்பு: பட்டா தந்தவருக்கு மக்கள் காட்டிய விசுவாசம்

Updated : மே 10, 2021 | Added : மே 10, 2021 | கருத்துகள் (34)
Share
Advertisement
கருமத்தம்பட்டி:குடியிருப்பு பகுதிக்கு, விடுதலை போராட்ட வீரர்கள், அரசியல் தலைவர்கள், ஆறுகள், பூக்கள் மற்றும் ஆங்கிலேய அதிகாரிகளின் பெயர்கள் வைத்திருப்பதை பார்த்திருக்கிறோம்.ஆனால், கருமத்தம்பட்டி அருகே தங்கள் குடியிருப்பு பகுதிக்கு, தற்போது, முதல்வரின் தனிச் செயலாளராக இருக்கும் உமாநாத்தின் பெயரை சூட்டி, அழகு பார்த்துள்ளனர் மக்கள்.கருமத்தம்பட்டி அடுத்த

கருமத்தம்பட்டி:குடியிருப்பு பகுதிக்கு, விடுதலை போராட்ட வீரர்கள், அரசியல் தலைவர்கள், ஆறுகள், பூக்கள் மற்றும் ஆங்கிலேய அதிகாரிகளின் பெயர்கள் வைத்திருப்பதை பார்த்திருக்கிறோம்.



latest tamil news



ஆனால், கருமத்தம்பட்டி அருகே தங்கள் குடியிருப்பு பகுதிக்கு, தற்போது, முதல்வரின் தனிச் செயலாளராக இருக்கும் உமாநாத்தின் பெயரை சூட்டி, அழகு பார்த்துள்ளனர் மக்கள்.கருமத்தம்பட்டி அடுத்த சென்னியாண்டவர் கோவில் அருகே உள்ளது விராலிக்காடு. இப்பகுதியில், 30 ஆண்டுகளுக்கு முன், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வந்தனர். ஆனால், யாருக்கும் பட்டா இல்லை. அரசிடம் பல முறை கோரிக்கை விடுத்தும் எந்த பலனும் இல்லை. பல போராட்டங்களை நடத்தி பட்டா கோரி வந்தனர்.

இந்நிலையில், கடந்த, 2009ல் கோவைக்கு கலெக்டராக வந்தார் உமாநாத். 2010ல் இப்பகுதி மக்கள் கலெக்டர் உமாநாத்தை சந்தித்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர். மனுவை பரிசீலித்த அவர், 80 குடும்பங்களுக்கு பட்டா கொடுக்க உத்தரவிட்டார். அதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். நன்றியை மட்டும் தெரிவித்தால் போதாது என எண்ணி, தங்கள் குடியிருப்பு பகுதிக்கு 'கலெக்டர் உமாநாத் காலனி' என பெயர்சூட்டி மகிழ்ந்தனர். அனைத்து ஆவணங்களிலும், இந்தப் பெயரையே பயன்படுத்தி வருகின்றனர். அவர் பணி மாறுதல் பெற்று சென்றாலும், அந்தக் குடியிருப்பின் பெயர், அவருக்கு நன்றி செலுத்திக் கொண்டே இருக்கிறது


latest tamil news


.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,' எங்களின் பல ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றி தந்தவர் அவர். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் எங்கள் குடியிருப்பு பகுதிக்கு அவர் பெயரை வைத்தோம். தற்போது அவர் தமிழக முதல்வரின் தனிச்செயலாளராக பொறுப்பேற்றதை அறிந்து மகிழ்ச்சி அடைந்துள்ளோம்.

மக்களின் நியாயமான கோரிக்கைகளை அவர் தவறாமல் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு எப்போதும் குறையாது' என்றனர்.முதல்வரின் தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் உமாநாத். அவரின் பெயரை நன்றியுடன் நினைவு கூர்கின்றனர் கருமத்தம்பட்டி பகுதி மக்கள். தங்களின் குடியிருப்புக்கு, அவரின் பெயரையே சூட்டியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vnatarajan - chennai,இந்தியா
10-மே-202117:25:57 IST Report Abuse
vnatarajan எஏழையின் சிரிப்பில் கடவுளை காண்போம் என்று சும்மாவா சொன்னாங்க.அந்த கடவுளின் அருளால் அன்று ஏழைகளுக்கு பட்டா வழங்கிய கலெக்டர் உமாநாத் இன்று முதல்வரின் தனி செயலாளர் ஆனார்.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
10-மே-202115:01:20 IST Report Abuse
Pugazh V இங்கே அதிமுக பீஜேபீ வாசகர்களின் வயத்தெரிச்சல் இன்னுமா அணையவில்லை. கதறுவது நிற்கவே இல்லையே இன்னும் பத்து வருடங்களுக்கு இதேமாதிரி புலம்ப வேண்டியது தான். ஆனால் இந்த கதறல்களும் புலம்பல்களும் படிக்கப் படிக்கப் பேரானந்தம். இன்னும் இன்னும் வர.வேண்டும்.
Rate this:
Cancel
Krush - Pallavaram, Chennai,இந்தியா
10-மே-202113:44:13 IST Report Abuse
Krush இந்துக்களையும், இந்து கடவுள்களையும் அசிங்கமா பேசினவங்கள அரியணையில் ஏற்றிய மக்கள் இவர்கள். இதெல்லாம் ஒண்ணுமே இல்ல...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X