பொது செய்தி

இந்தியா

2டிஜி கொரோனா தடுப்பு மருந்து; ஒரு மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும்

Updated : மே 10, 2021 | Added : மே 10, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: 'கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோருக்கு வழங்கக்கூடிய, '2டிஜி' என்ற மருந்து, ஒரு மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும்' என, டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.கொரோனா தொற்று ஏற்பட்டு, மிதமானது முதல், தீவிர பாதிப்பு உள்ளவர்களுக்கான தடுப்பு மருந்து உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.
DRDO, 2DG_Drug, OneMonth, DrReddys, 2டிஜி, கொரோனா, தடுப்பு மருந்து, டிஆர்டிஓ, டாக்டர் ரெட்டிஸ்

புதுடில்லி: 'கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோருக்கு வழங்கக்கூடிய, '2டிஜி' என்ற மருந்து, ஒரு மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும்' என, டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று ஏற்பட்டு, மிதமானது முதல், தீவிர பாதிப்பு உள்ளவர்களுக்கான தடுப்பு மருந்து உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. 'இன்மாஸ்' எனப்படும், நியூக்ளியர் மருத்துவம் மற்றும் சார்பு அறிவியல் மையம், டி.ஆர்.டி.ஓ., ஆகியவை, தெலுங்கானா மாநிலம், ஐதராபாதைச் சேர்ந்த, 'டாக்டர் ரெட்டிஸ்' நிறுவனத்துடன் இணைந்து, இந்த மருந்தை தயாரித்துள்ளன. '2டிஜி' எனப்படும், '2 டி ஆக்சி டி குளுக்கோஸ்' என்ற இந்த தடுப்பு மருந்தை பயன்படுத்த, டி.சி.ஜி.ஐ., எனப்படும், இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.


latest tamil news



இது குறித்து, டி.ஆர்.டி.ஓ., திட்ட இயக்குநரும், இந்த தடுப்பு மருந்து ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானியுமான, டாக்டர் சுதிர் சந்தானா கூறியுள்ளதாவது: பொடி வடிவில் உள்ள இந்த மருந்தை, தண்ணீரில் கரைத்து கொடுக்க வேண்டும். இந்த மருந்து, வைரசால் பாதிக்கப்பட்ட செல்களில் செயல்படத் துவங்கும். வைரஸ் பரவுவது தடுக்கப்பட்டு, அதை செயலிழக்க செய்யும்.இந்த தடுப்பு மருந்தால், வேகமாக குணமடைவதுடன், ஆக்சிஜன் தேவை குறையும். அதனால் உயிர் பலியும் தடுக்கப்படும்.அடுத்த சில வாரங்களில் அல்லது அதிகபட்சம், ஒரு மாதத்தில், இந்த மருந்து பயன்பாட்டுக்கு வரும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,யூ.எஸ்.ஏ
11-மே-202103:09:50 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) பாராட்டுக்கள். முடிந்தால் இன்னும் விரைவாக உபயோகத்திற்கு வர முயற்சியுங்கள்..
Rate this:
Cancel
rsudarsan lic - mumbai,இந்தியா
10-மே-202111:14:57 IST Report Abuse
rsudarsan lic பாராட்டுக்கள் பாராட்டுக்கள்
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
10-மே-202110:49:01 IST Report Abuse
Sridhar 2G நாட்டையே அழித்தது என்றால், 2DG நாட்டை காப்பாற்ற வந்திருக்கிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X