நெல்லைக்கு அமைச்சர்கள் இல்லை: எதிர்க்கட்சிகள் பலம் ஓங்கும்

Updated : மே 10, 2021 | Added : மே 10, 2021 | கருத்துகள் (15) | |
Advertisement
திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லாததால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.தமிழகத்தில், தி.மு.க., - அ.தி.மு.க., என இரு அரசுகளிலும் திருநெல்வேலி மாவட்டத்திற்கு அமைச்சரவையில் நிச்சய பங்களிப்பு இருந்தது. இந்த முறை, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில், 10 தொகுதிகளில் ஆறில், தி.மு.க., அணி வெற்றி பெற்று உள்ளது. ஆனாலும், ஒரு
நெல்லை, திருநெல்வேலி, அமைச்சர்கள், அப்பாவு,

திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லாததால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

தமிழகத்தில், தி.மு.க., - அ.தி.மு.க., என இரு அரசுகளிலும் திருநெல்வேலி மாவட்டத்திற்கு அமைச்சரவையில் நிச்சய பங்களிப்பு இருந்தது. இந்த முறை, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில், 10 தொகுதிகளில் ஆறில், தி.மு.க., அணி வெற்றி பெற்று உள்ளது. ஆனாலும், ஒரு அமைச்சர் கூட இல்லை.திருநெல்வேலி மாவட்டத்தில், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், அம்பாசமுத்திரத்திலும், தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் முன்னாள் அமைச்சர் பூங்கோதையும் தோற்றனர்.சபாநாயகர் பொறுப்பு


இருப்பினும், திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரத்தில் அப்பாவு, திருநெல்வேலி மத்திய மாவட்ட செயலர் அப்துல்வகாப், தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் ராஜா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த முறை, தி.மு.க., ஆட்சியில் ஒரே நேரத்தில் ஆவுடையப்பன் சபாநாயகர், அமைச்சர்களாக மைதீன்கான், பூங்கோதை ஆகியோர் செயல்பட்டனர். ஆனால், தற்போது பெயரளவிற்கு அப்பாவுவிற்கு சபாநாயகர் பொறுப்பு வழங்கப்பட உள்ளது. ஆனால், சபாநாயகராக இருந்து அரசியல் செய்யவோ, மக்கள் திட்டங்களை கேட்டுப் பெறவோ முடியாத நிலை உள்ளது.

பக்கத்து மாவட்டங்களான துாத்துக்குடியில் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், விருதுநகரில் தங்கம் தென்னரசு, சாத்துார் ராமச்சந்திரன் என, தலா இரண்டு அமைச்சர்கள் உள்ளனர். அப்பாவுவிற்கு சபாநாயகர் பதவி தந்தாலும், தென் மாவட்டங்களில் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதாக, பரவலான பேச்சு உள்ளது.


latest tamil news

குற்றச்சாட்டு

வடமாவட்டங்களில் ஆவடி நாசர், செஞ்சி மஸ்தான் ஆகியோருக்கு அமைச்சர் பதவி தரப்பட்டு உள்ளதால், திருநெல்வேலியில் அப்துல் வகாபிற்கு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. தற்போது, திருநெல்வேலி, தென்காசியில், பா.ஜ., சட்டசபைக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், அம்பாசமுத்திரத்தில் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா, கடையநல்லுாரில், அ.தி.மு.க., மாவட்டச் செயலர் கிருஷ்ணமுரளி.ஆலங்குளத்தில், மனோஜ்பாண்டியன் என எதிர்க்கட்சி பிரமுகர்கள் பரவலாக உள்ளதால், உள்ளூர் அரசியலிலும், அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கவும் திருநெல்வேலி, தென்காசியில் அமைச்சரவை பிரதிநிதித்துவம் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது.

தி.மு.க., தலைவர் கருணாநிதி, வழக்கமாக தம் பேச்சில், 'நெல்லை எங்கள் எல்லை. குமரி எங்கள் தொல்லை' என, கன்னியாகுமரி மாவட்டத்தில் தி.மு.க.,வுக்கு பிரதிநிதித்துவம் இல்லாதது குறித்து பேசுவார்.ஆனால், இந்த முறை கன்னியாகுமரியில் வெற்றி பெற்ற ஒரே ஒரு எம்.எல்.ஏ., மனோ தங்கராஜ் அமைச்சராகி விட்டார். பத்தில் ஆறு வென்றும், திருநெல்வேலி, தென் காசிக்கு எதுவும் இல்லாமல் போய்விட்டது. இதனால், நெல்லை, தென்காசி மாவட்ட மக்கள், அதிருப்தியில் உள்ளனர்.மேலும், 'இந்த ஐந்து ஆண்டுகளில், பலம் வாய்ந்த அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள், தென் மாவட்டங்களில் சிறந்த அரசியலை மேற்கொள்வர்' என, தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-மே-202107:32:14 IST Report Abuse
அருண், சென்னை "EPS, OPS உள்ளிட்ட 250 பேர்மேல் வழக்கு பதிவு", இந்த டீம்கா செய்தி போட்டோவில், யாராவது மாஸ்க் அணித்திருக்கிறார்களா? இப்போ கிருமி பரவதா?
Rate this:
Cancel
ppmkoilraj - erode.10,இந்தியா
10-மே-202119:21:50 IST Report Abuse
ppmkoilraj கடந்த அதிமுக ஆட்சியில் கவுண்டர் சமுதாயம் 7 பேர்கள் தேவர் சமுதாயம் 8 பேர்கள் என அமைச்சரவை பங்கெடுத்து கொண்டார்கள் அதிமுக சார்பில் நீங்கள் இப்போது சொல்லும் சமுதாயத்தில் மந்திரி பதவி அளிக்கப்படவில்லை .அதை நீங்கள் ஏன் அப்பொழுது சென்னையைச் சேர்ந்த ஒருவருக்கு மட்டுமே பதவி வழங்கப்பட்டது .அப்போதுசுட்டிக் காட்டவில்லை அந்த சமுதாயம் என்ன உங்களுக்கு ஆகாதா ?தூத்துக்குடி ,கன்னியாகுமரி, திருநெல்வேலி, பகுதிகளில் உள்ள அந்த சமுதாயத்திற்கு மந்திரி பதவிஎண்ணிக்கை இல்லை என்று எழுதி இருக்கிறீர்களா ?எனக்கு தெரியவில்லை .இருப்பினும் நீங்கள் சொன்ன சமுதாய த்தில் மூன்று பேருக்கு மட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது அப்பாவுக்கு மந்திரி பதவி கொடுக்கலாம்.
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
10-மே-202117:36:08 IST Report Abuse
Mohan கவலை படாதீங்க 5 வருஷத்திற்கு இதே அமைச்சர்களா நீடிப்பாங்க அதுக்குள்ள அவ்வசரம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X