பின்தங்கிய நாடுகளுக்கு தடுப்பூசி கிடைக்கவில்லை: உலக சுகாதார அமைப்பு கவலை

Updated : மே 10, 2021 | Added : மே 10, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
ஜெனிவா: கொரோனா தடுப்பூசி முன்னேறிய நாடுகளில் செலுத்தப்பட்டு வரும் நிலையில், 'பின்தங்கிய 10க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இன்னும் தடுப்பூசி கிடைக்கவில்லை' என, உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதாவது:கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலகையே உலுக்கி வருகிறது. லட்சக்கணக்கான மக்களின் உயிர்களைப் பறித்துள்ளது. பல்வேறு

ஜெனிவா: கொரோனா தடுப்பூசி முன்னேறிய நாடுகளில் செலுத்தப்பட்டு வரும் நிலையில், 'பின்தங்கிய 10க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இன்னும் தடுப்பூசி கிடைக்கவில்லை' என, உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.



latest tamil news




இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதாவது:கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலகையே உலுக்கி வருகிறது. லட்சக்கணக்கான மக்களின் உயிர்களைப் பறித்துள்ளது. பல்வேறு முன்னேறிய நாடுகள் தடுப்பூசிகளைக் கண்டறிந்து அதை மக்களுக்குச் செலுத்தி வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்களது நாட்டு மக்களுக்கு தடுப்பூசியை வழங்கி வருகின்றன. ஆனால் உலகில் உள்ள பல்வேறு நாடுகள் இன்னும் தடுப்பூசியின் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. குறிப்பாக ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளுக்கு தடுப்பூசி கிடைக்கவில்லை. அங்கு ஏராளமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வரும் அவல நிலை உள்ளது.


latest tamil news


இதேபோல், பின்தங்கிய 10க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இன்னும் தடுப்பூசி கிடைக்கவில்லை. வளமான நாடுகள் தங்களுக்காக கொரோனா தடுப்பூசியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து மக்களுக்கு செலுத்தி வருகின்றன. ஆனால் ஏழை நாடுகளுக்கு இது எட்டாக் கனியாகவே உள்ளது. குறிப்பாக, ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் சிகிச்சை மையத்தில் பணியாற்றும் டாக்டர்கள், செவிலியர்களுக்கு கூட வைரஸ் தடுப்பூசி கிடைக்கவில்லை. அவர்களுக்கு உதவ வளர்ந்த நாடுகள் முன்வர வேண்டும்.இவ்வாறு உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkataramanan Thiru - Sanjose, CA,யூ.எஸ்.ஏ
10-மே-202120:09:44 IST Report Abuse
Venkataramanan Thiru உழவனின் கதை நினைவிற்கு வருகிறது.பூச்சிமருந்து தெளிக்கும் பொது அடுத்தவன் நிலத்தையும் சேர்த்து மருந்து தெளிக்கிறான் ஏன் என்று கேட்டல் அப்போதுதான் தோற்று பரவலை தடுக்கமுடியும் என சொல்லுகிறான் , அந்த அறிவுகூட இல்லாத ஆட்சியாளர்கள் நிரம்பிய உலகம்.
Rate this:
Cancel
10-மே-202120:02:02 IST Report Abuse
ஆப்பு இந்தியாவை சொல்றாங்களோ?
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
10-மே-202115:05:42 IST Report Abuse
vbs manian பணக்கார நாடுகள் வாங்கி பதுக்கி விட்டன.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X