பொது செய்தி

தமிழ்நாடு

ஆரம்பிச்சுட்டாங்க: ஆபத்தை ஏற்படுத்தும் பிளக்ஸ் பேனர்கள்: ஆளும்கட்சியினர் 'முகம்' காட்ட ஆர்வம்

Updated : மே 10, 2021 | Added : மே 10, 2021 | கருத்துகள் (61)
Share
Advertisement
பொள்ளாச்சி, உடுமலையில் மீண்டும் 'பேனர்' கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. புதிதாக பொறுப்பேற்ற தி.மு.க.,வினர் ஆளும்கட்சி அதிகார மையங்களாக காட்டிக்கொள்ள, பேனர்கள், போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். பொது இடங்களில் பிரமாண்டமான பிளக்ஸ் பேனர்கள் வைப்பதால், போக்குவரத்து கவனச்சிதறல், விபத்து, உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதால், அவற்றை வைப்பதற்கு அரசு மற்றும் கோர்ட் உத்தரவுகள்

பொள்ளாச்சி, உடுமலையில் மீண்டும் 'பேனர்' கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. புதிதாக பொறுப்பேற்ற தி.மு.க.,வினர் ஆளும்கட்சி அதிகார மையங்களாக காட்டிக்கொள்ள, பேனர்கள், போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். பொது இடங்களில் பிரமாண்டமான பிளக்ஸ் பேனர்கள் வைப்பதால், போக்குவரத்து கவனச்சிதறல், விபத்து, உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதால், அவற்றை வைப்பதற்கு அரசு மற்றும் கோர்ட் உத்தரவுகள் கடுமையாக உள்ளது.latest tamil newsசென்னை அடுத்த பள்ளிக்கரணையில், 2019ல் பிளக்ஸ் பேனர் விழுந்ததில், பைக்கில் சென்ற பெண் விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து, 'பிளக்ஸ் பேனர்கள்' வைக்க நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து, அ.தி.மு.க., தி.மு.க., உள்பட கட்சியினர் 'பிளக்ஸ் பேனர்கள் வைக்க மாட்டோம்,' என உறுதியளித்து கோர்ட்டில், 'அபிடாவிட்' தாக்கல் செய்து, அறிக்கையும் வெளியிட்டனர். அதன்பின், அ.தி.மு.க., - தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர், கோர்ட் உத்தரவுகளையும், 'அபிடாவிட்' தாக்கல் செய்தையும், காற்றில் பறக்கவிட்டு, பிரமாண்ட பிளக்ஸ் பேனர் வைத்தனர்.


latest tamil newsஉடுமலையில் தி.மு.க.,வினர், தங்கள் போட்டோக்களுடன் பல்வேறு இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைத்து வருகின்றனர். பஸ் ஸ்டாண்ட் அருகே, அரசு கால்நடை மருத்துவமனையை மறைத்தும், 5 ரோடுகள் சந்திக்கும் பகுதியில்,போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் ஏராளமான பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளனர்.மேலும், பழைய பஸ் ஸ்டாண்ட், தளி ரோடு என ரோடு சந்திப்புகள், மக்கள் கூடும் இடங்களில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பிளக்ஸ் பேனர்கள் அமைத்துள்ளனர். அரசு அலுவலகங்கள், பள்ளிகளின் சுவர்கள், மையத்தடுப்புகள், புதிதாக கட்டப்பட்ட பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா முழுவதும் தி.மு.க.,வின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. விதிமீறி அமைக்கப்பட்டுள்ளபிளக்ஸ் பேனர்கள், போஸ்டர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்தை மீறுவோர் மீது கட்சித்தலைமை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


latest tamil news
பொள்ளாச்சி


பொள்ளாச்சி, கோட்டூர் ரோடு மேம்பால தடுப்புச்சுவரில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், முதல்வராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், அக்கட்சியினர் சுவர் விளம்பரம் செய்கின்றனர். மேம்பாலத்தில் உள்ள ரயில்வே தடுப்புச்சுவரில், கண்ணை கவரும் வகையில் விளம்பரம் எழுதியுள்ளனர்.அதேபோன்று, ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து, அம்பராம்பாளையத்தில் பேனர் வைத்துள்ளனர்.


latest tamil newsஅரசு அலுவலக சுவர்கள், பாலங்கள் என பொது இடங்களில் அரசியல் கட்சியினர் விளம்பரங்கள் செய்வது வழக்கமாகி விட்டது. பிளக்ஸ் கலாசாரத்தை விட, சுவர் விளம்பரங்களுக்கு கட்சிகளிடையே போட்டா போட்டி நிலவுகிறது. தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது போன்று, பாலம், அரசு அலுவலக சுவர்களில் விளம்பரம் செய்வதை முற்றிலும் தடுக்க, கடுமையான சட்ட திருத்தம் கொண்டு வர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


latest tamil newsதொகுதிகளில், வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில், அ.தி.மு.க.,வினரும் பல இடங்களில் பேனர்கள் வைத்துள்ளனர்.நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் இரு கட்சியினரும், ஆனைமலை முக்கோணம், அம்பராம்பாளையம் சுங்கம், தென்சங்கம்பாளையம் என, பல இடங்களில், போக்குவரத்துக்கு இடையூறாக பேனர்கள் வைத்துள்ளனர். அதிகாரிகளும், கண்டுகொள்ளாமல் உள்ளனர்.

- நிருபர் குழு -

Advertisement
வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
11-மே-202101:58:42 IST Report Abuse
தல புராணம் கடலூர் நகர் பகுதியில் வைக்கப்பட்ட பேனர்களை நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். - இதுவும் பத்திரிகை செய்தி தான்.. கடைசி பக்கம் கடைசி பத்தியில் வந்திருக்கு..
Rate this:
வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா
11-மே-202115:23:05 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டுஅற்பத்தனமான சமாளிப்பு நகராட்சி ஊழியர்கள் என்ன டீம்காவா?...
Rate this:
Cancel
Gokul Krishnan - Thiruvanthapuram,இந்தியா
10-மே-202122:40:47 IST Report Abuse
Gokul Krishnan கேரளாவுக்கு மோடி அமித் ஷா தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த போதும் மின் கம்பங்களில் இது போன்று பாணர்கள் வைத்தார்கள் அதையும் சேர்த்து கொள்ளுங்கள்
Rate this:
venkata achacharri - india,இந்தியா
11-மே-202110:30:50 IST Report Abuse
venkata achacharri ஆன்டி இந்தியர்களுக்கு மட்டும் தான் பாணர் வைக்க கூடாது...
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
10-மே-202121:18:09 IST Report Abuse
Endrum Indian வாழ்க வாழ்க ப்ளெக்ஸ் சாம்ராஜ்ஜியம்??????????????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X