பொது செய்தி

இந்தியா

குறைந்த விலையில் திறன்மிக்க வென்டிலேட்டர்: இஸ்ரோ சாதனை

Updated : மே 10, 2021 | Added : மே 10, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
திருவனந்தபுரம்: மிகக் குறைந்த விலையில் 3 வகையான வென்டிலேட்டர்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்து சாதனை படைத்துள்ளது.கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், பல மாநிலங்களில் வென்டிலேட்டர், ஆக்சிஜன் செறிவூட்டிகளின் தேவை அதிகரித்து வருகிறது. இவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் இஸ்ரோ நிறுவனம் குறைந்த செலவில் 3 வகை

திருவனந்தபுரம்: மிகக் குறைந்த விலையில் 3 வகையான வென்டிலேட்டர்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்து சாதனை படைத்துள்ளது.latest tamil news
கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், பல மாநிலங்களில் வென்டிலேட்டர், ஆக்சிஜன் செறிவூட்டிகளின் தேவை அதிகரித்து வருகிறது. இவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் இஸ்ரோ நிறுவனம் குறைந்த செலவில் 3 வகை வென்டிலேட்டர்களை வடிவமைத்துள்ளது. இதேபோல குறைந்தவிலை ஆக்சிஜன் செறிவூட்டிகளையும் தயாரித்துள்ளது.


latest tamil news
திருவனந்தபுரத்தில் செயல்படும் இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தின் இயக்குனர் சோம்நாத் கூறியதாவது: ஒரு வென்டிலேட்டர் தற்போது ரூ.5 லட்சத்துக்கு விற்கப்படுகிறது. நாங்கள் பிராணா, வாயு, ஸ்வாஸ்தா ஆகிய 3 வகையான வென்டிலேட்டர்களை வடிவமைத்துள்ளோம். இவை சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டிருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இந்த வென்டிலேட்டரை ஒரு லட்சம் ரூபாயில் வாங்க முடியும்.


latest tamil news


வென்டிலேட்டர் தவிர குறைந்த விலை ஆக்சிஜன் செறிவூட்டிகளையும் வடிவமைத்துள்ளோம். அடுத்த ஒரு மாதத்துக்குள் வர்த்தகரீதியாக புதிய வென்டிலேட்டர், ஆக்சிஜன் செறிவூட்டிகள் உற்பத்தி துவங்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
11-மே-202100:07:43 IST Report Abuse
மதுரை விருமாண்டி உண்மை என்னான்னா இதை சீனா, தைவானிலிருந்து இம்போர்ட் பண்ணி (SKD - Semi Knock Down Kit) இங்கே அசெம்பிள் பண்ணாங்க.. நண்பர் தெரிவிச்சார்.. லாபமில்லாமல் வித்தா ஒரு லட்ச ரூபாயாம்.. ISRO விஞ்ஞானிங்க சம்பளத்தை கணக்கிலே சேர்த்துக்கக்கூடாது..
Rate this:
Cancel
iconoclast - Surrey,யுனைடெட் கிங்டம்
10-மே-202123:53:41 IST Report Abuse
iconoclast Please manufacture it in BHEL and start the distribution right away. People are dying now. Emergency
Rate this:
Cancel
Murthy - Bangalore,இந்தியா
10-மே-202121:57:00 IST Report Abuse
Murthy கடந்தமுறையும் இதுபோல் செய்திவந்தது.......ஆனால் ஒன்னும் செய்யவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X