பொது செய்தி

இந்தியா

தடுப்பூசி செலுத்துவதே நீண்டகால தீர்வு: அமெரிக்க மருத்துவ நிபுணர்

Updated : மே 10, 2021 | Added : மே 10, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியர்கள் கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க தடுப்பூசி செலுத்துவதே நீண்டகால தீர்வு என அமெரிக அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோனி பவுசி தெரிவித்துள்ளார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் 2வது அலை தீவிரமடைந்து, நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கில் உயிரிழக்கின்றனர். இந்தியாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கு தற்காலிக
 Dr Fauci, GettingPeople, Vaccinated, LongTerm, Solution, COVID-19, Crisis, India, பவுசி, இந்தியா, கொரோனா, தடுப்பூசி, நீண்டகால தீர்வு

புதுடில்லி: இந்தியர்கள் கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க தடுப்பூசி செலுத்துவதே நீண்டகால தீர்வு என அமெரிக அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோனி பவுசி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2வது அலை தீவிரமடைந்து, நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கில் உயிரிழக்கின்றனர். இந்தியாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கு தற்காலிக ஊரடங்கை பிறப்பிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோனி பவுசி அறிவுரைகளை வழங்கியிருந்தார். இந்நிலையில், ஏபிசி செய்தி சேனலுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:


latest tamil news


இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை முடிவுக்குக் கொண்டுவர மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதுதான் நீண்டகாலத் தீர்வு. உலகிலேயே அதிகமான தடுப்பூசி தயாரிக்கும் நாடு இந்தியாதான். இந்தியாவில் ஏராளமான வளங்கள் இருக்கின்றன, அதை வைத்து தயாரிக்க வேண்டும். உள்நாட்டு அளவில் மட்டும் தடுப்பூசி தயாரிக்க முடியாவிட்டால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து பயன்படுத்தலாம். இந்தியா விரைவாக தொற்றிலிருந்து மீள வேண்டும் என்ற அவசியம் காரணமாகவே மற்ற நாடுகள் தடுப்பூசிகளை நன்கொடையாக அளித்து வருகின்றன.

தடுப்பூசி தயாரிக்கும் மிகப்பெரிய நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை அதிகப்படுத்தி, லட்சக்கணக்கான டோஸ் மருந்துகளை இந்தியாவுக்கு வழங்கலாம். ஆக்சிஜன் சப்ளை மிகவும் சிக்கலானதாக மாறியுள்ளது. கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான ஆக்சிஜன் இல்லாவிட்டால், மிகவும் கொடுமையானது. அதுதான் இந்தியாவில் நடந்து வருகிறது. இந்தியாவுக்கு தற்போது உடனடியாக படுக்கை வசதிகளை அதிகப்படுத்துதல், போதுமான அளவு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன், பிபிஇ ஆடைகள், மருந்துகள் உள்ளிட்டவை அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
10-மே-202116:33:33 IST Report Abuse
vbs manian டிரம்பை குழப்பி கடுப்பேற்றினார். இப்போது இந்தியா மீது கரிசனம்.
Rate this:
Cancel
10-மே-202116:06:23 IST Report Abuse
ஆப்பு இன்னிய நிலைமக்கு இதுமாதிரி சொல்ல வேண்டியதுதான்.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
10-மே-202115:36:57 IST Report Abuse
Vena Suna சீனாவை எவனும் கிடுக்கிப்பிடி போட மாட்டேங்கறான் ....டிரம்ப் நல்ல கேட்டாரு பாவம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X