தடுப்பூசி கொள்கையில் உச்சநீதிமன்றம் தலையிட கூடாது: மத்திய அரசு

Updated : மே 10, 2021 | Added : மே 10, 2021 | கருத்துகள் (56)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா தடுப்பூசி கொள்கையில் உச்சநீதிமன்றம் தலையிடக்கூடாது என மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டு உள்ளது.கொரோனா தடுப்பூசி திட்டம்,விலை நிர்ணயம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கில், மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: சர்வதேச அளவிலான பெருந்தொற்றை
Judicial Interference, Centre, Supreme Court, Vaccine Policy,

புதுடில்லி: கொரோனா தடுப்பூசி கொள்கையில் உச்சநீதிமன்றம் தலையிடக்கூடாது என மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டு உள்ளது.

கொரோனா தடுப்பூசி திட்டம்,விலை நிர்ணயம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கில், மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: சர்வதேச அளவிலான பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் திட்டங்கள் முற்றிலுமாக மருத்துவ நிபுணர்களாலும், அறிவியல்பூர்வமான கருத்துகளாலும் உருவாக்கப்பட்டு உள்ளது. அங்கு நீதிமன்ற தலையீட்டிற்கு குறைந்தளவே இடமுள்ளது. அதிகளவில் நீதிமன்றம் தலையிட்டால், அது எதிர்பார்க்காததும், தேவையற்றதுமான பின்விளைவுகள் நோய் கட்டுப்பாட்டில் ஏற்படும்.


latest tamil news



நிபுணர்கள் ஆலோசனை, நிர்வாக அனுபவம் இல்லாவிட்டால், டாக்டர்கள், விஞ்ஞானிகள், நிபுணர்கள், ஆக்கப்பூர்வமான தீர்வை கண்டுபிடிப்பதற்கு எந்த வாய்ப்பும் ஏற்படாது. தடுப்பூசி விலை குறைந்தளவே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மத்திய அரசின் தலையீட்டிற்கு பின் ஒரே மாதிரியான விலை உள்ளது. 18 முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பல மாநிலங்களில் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இவ்வாறு அந்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
11-மே-202100:44:43 IST Report Abuse
தல புராணம் //தடுப்பூசி விலை குறைந்தளவே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.// முழுப்பூசணிக்காய் பொய்யிங்குறது இது தான்.. விலையை நிர்ணயித்து கொள்ளலாம்ன்னு அரசு சொல்லி, ஏற்றிக்கொண்டது அந்த கார்ப்பரேட் நிறுவனம் தான். இந்த விலையேற்றத்துக்கு காரணம் மோடி அரசு..
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
11-மே-202100:42:52 IST Report Abuse
தல புராணம் 40,000 கோடி தடுப்பூசி கொள்ளையில் தான் உச்சநீதிமன்றம் தலையிடுகிறது.. கொள்கையில் இல்லை.
Rate this:
Cancel
அன்பு - தஞ்சை,கனடா
11-மே-202100:13:51 IST Report Abuse
அன்பு சுப்ரிம் கோர்ட் அதன் வேலையை பார்க்க வேண்டும். கொரநா தடுப்பூசியின் விலை ஒரு லட்சமாக இருந்தாலும், அதை பற்றி தனியார் கம்பெனிகள் தான் முடிவு செய்ய வேண்டும். தனியாரின் வேலையில் சுப்ரிம் கோர்ட்டு மூக்கை நுழைக்க கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X