அரசியல் செய்தி

தமிழ்நாடு

எதிர்க்கட்சி தலைவரானார் எடப்பாடி பழனிசாமி

Updated : மே 10, 2021 | Added : மே 10, 2021 | கருத்துகள் (117)
Share
Advertisement
சென்னை: தமிழக எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இது குறித்த தகவல் அதிமுக.,வின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.தமிழக தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வாரமாக அதிமுகவில் யார் எதிர்க்கட்சி தலைவர் என்று முடிவு செய்யாமல் இழுபறி ஏற்பட்டது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி

சென்னை: தமிழக எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இது குறித்த தகவல் அதிமுக.,வின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.



latest tamil news



தமிழக தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வாரமாக அதிமுகவில் யார் எதிர்க்கட்சி தலைவர் என்று முடிவு செய்யாமல் இழுபறி ஏற்பட்டது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் இடையே கருத்து வேற்றுமை இருந்து வந்தது.
இந்நிலையில் இன்று 2வது முறையாக நடந்த அதிமுக எம்எல்ஏ.,க்கள் கூட்டத்தில் முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி அதிமுக சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.


latest tamil news



இந்த தகவல் முதன் முதலாக அதிமுக.,வின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியானது. இதனை கட்சியின் செய்தி தொடர்பாளர் சசிரேகா உறுதி செய்தார்.
தொடர்ந்து அதிமுக சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்பட்ட கடிதத்தை முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் சட்டசபை செயலரிடம் வழங்கினர்.

Advertisement




வாசகர் கருத்து (117)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
11-மே-202100:23:42 IST Report Abuse
தல புராணம் இன்னும் எத்தனையோ பொதுப்பிணி ஊழல், கொடுஞ்சாலை லஞ்சம், கொடநாடு கொலைவழக்குகள்ன்னு ஆயிரம் இருக்கு.. ஆடீம்காவிலே ஜெயிலுக்கு போன முதல்வர்ன்னு ஒருத்தர் இருக்கும் போது, ஜெயிலுக்கு போன எதிர்க்கட்சி தலைவர்ன்னு பேரு கிடைச்சா பயணிசாமிக்கு பெருமை தானே..
Rate this:
Cancel
sahayadhas - chennai,பஹ்ரைன்
11-மே-202100:09:34 IST Report Abuse
sahayadhas பேசாமா BJP யிடம் 5 சோ, பத்தோ வாங்கிட்டு போய் Settle ஆயிடுங்க.
Rate this:
Cancel
THAMIRAMUM PAYANPADUM THANGAM MATTUMALLA - india,இந்தியா
10-மே-202121:58:57 IST Report Abuse
THAMIRAMUM PAYANPADUM THANGAM MATTUMALLA அந்த அடிமை பிஜிபி யின் வாழ் ஓ பி எஸ் ஐ முதலில் கட்சியை விட்டு இப்போதே துக்கங்கள் அந்த அடிமை எதனையோ தொண்டர்கள் வரலாத கட்சியை பி ஜி பி க்கு கட்சியை விற்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை அவர் மகன் பார்லிமென்டில் பி ஜி பிக்கு அடிமை வேலை பார்க்கிறார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X