பொது செய்தி

இந்தியா

மூச்சுவிடவே தேசம் திணறுகையில் மாற்று எதார்த்தம் எதற்கு: மத்திய அமைச்சரை சாடும் சசி தரூர்

Updated : மே 10, 2021 | Added : மே 10, 2021 | கருத்துகள் (36)
Share
Advertisement
புதுடில்லி: 'தேசம் கொரோனாவின் பிடியில் சிக்கி, மூச்சு விடத் திணறுகையில், மாற்று எதார்த்தம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பேசி வருகிறார்' என, காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் தெரிவித்துள்ளார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அமைச்சர்கள் குழுவின் 25வது கூட்டத்தில் பேசுகையில், '180 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு கடந்த 7 நாட்களாக

புதுடில்லி: 'தேசம் கொரோனாவின் பிடியில் சிக்கி, மூச்சு விடத் திணறுகையில், மாற்று எதார்த்தம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பேசி வருகிறார்' என, காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் தெரிவித்துள்ளார்.



latest tamil news


மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அமைச்சர்கள் குழுவின் 25வது கூட்டத்தில் பேசுகையில், '180 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு கடந்த 7 நாட்களாக இல்லை. கடந்த 14 நாட்களாக 18 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை. 21 நாட்களாக 54 மாவட்டங்களில் தொற்று இல்லை. 32 மாவட்டங்களில் கடந்த 28 நாட்களாகத் தொற்று கிடையாது' எனத் தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலடி அளித்துள்ளார்.



latest tamil news


அதில், 'மத்திய சுகாதாரத்துறை அமைச்சரைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. இந்த தேசம் கொரோனா பிடியில் சிக்கி மூச்சுவிடத் திணறும்போது, இந்தியர்கள் பாதிக்கப்படுவதைப் பார்த்து உலகம் வேதனைப்படும்போது, அவர் மாற்று எதார்த்தம் குறித்துப் பேசுகிறார். இந்தியாவின் 3-வது கட்டத் தடுப்பூசி முன்பதிவு செய்துள்ளதற்கு வந்துள்ள குறுஞ்செய்தி குறித்தோ, போலி மருந்துகளை விளம்பரம் செய்தது குறித்தோ, உறுதி செய்யப்படாத சிகிச்சை குறித்தோ அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோனி பாஸி கொண்டாடுவார் எனக் கற்பனை செய்து பார்க்க முடியுமா? நம்முடைய அரசு வெளியிடும் எந்த எண்ணிக்கையையும் யாரும் நம்பமாட்டார்கள்' எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
C.SRIRAM - CHENNAI,இந்தியா
11-மே-202106:52:14 IST Report Abuse
C.SRIRAM நேர்மறையான கருத்துக்களை அமைச்சர் சொன்னால் இந்த நபருக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை . தமது முகத்தை கண்ணாடியில் பார்க்க மாட்டார் போலும் . எதற்கெடுத்தாலும் ஒரு வெட்டி கருத்து . நாடு விளங்கிடும் . இந்த பிரச்சனையில் தொகுதி மக்களுக்கு இவரது பங்களிப்பு என்ன (விமானத்தில் எகானமி வகுப்பை கேலி செய்த பெருமகனார் ).
Rate this:
Cancel
sahayadhas - chennai,பஹ்ரைன்
11-மே-202100:03:45 IST Report Abuse
sahayadhas ஐயா , சைனாவை போல் பொய் கூறி மூடி மறைக்க பார்த்தார் ஆனால் இது சர்வாதிகார நாடு இல்லையை . Currency மாற்றத்திலிருந்து கோரான வரை எல்லாமே failure.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
10-மே-202123:46:29 IST Report Abuse
தல புராணம் // பீஹாரில் கங்கை நதியில், 40க்கும் மேற்பட்ட சடலங்கள் மிதந்ததால் மக்கள் பீதி அடைந்தனர். // - இது தான் ராமராச்சியத்தில் எதார்த்தம்.. இன்னிக்கி வந்த செய்தி தான் இது..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X