மூச்சுவிடவே தேசம் திணறுகையில் மாற்று எதார்த்தம் எதற்கு: மத்திய அமைச்சரை சாடும் சசி தரூர்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மூச்சுவிடவே தேசம் திணறுகையில் மாற்று எதார்த்தம் எதற்கு: மத்திய அமைச்சரை சாடும் சசி தரூர்

Updated : மே 10, 2021 | Added : மே 10, 2021 | கருத்துகள் (36)
Share
புதுடில்லி: 'தேசம் கொரோனாவின் பிடியில் சிக்கி, மூச்சு விடத் திணறுகையில், மாற்று எதார்த்தம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பேசி வருகிறார்' என, காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் தெரிவித்துள்ளார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அமைச்சர்கள் குழுவின் 25வது கூட்டத்தில் பேசுகையில், '180 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு கடந்த 7 நாட்களாக

புதுடில்லி: 'தேசம் கொரோனாவின் பிடியில் சிக்கி, மூச்சு விடத் திணறுகையில், மாற்று எதார்த்தம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பேசி வருகிறார்' என, காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் தெரிவித்துள்ளார்.



latest tamil news


மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அமைச்சர்கள் குழுவின் 25வது கூட்டத்தில் பேசுகையில், '180 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு கடந்த 7 நாட்களாக இல்லை. கடந்த 14 நாட்களாக 18 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை. 21 நாட்களாக 54 மாவட்டங்களில் தொற்று இல்லை. 32 மாவட்டங்களில் கடந்த 28 நாட்களாகத் தொற்று கிடையாது' எனத் தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலடி அளித்துள்ளார்.



latest tamil news


அதில், 'மத்திய சுகாதாரத்துறை அமைச்சரைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. இந்த தேசம் கொரோனா பிடியில் சிக்கி மூச்சுவிடத் திணறும்போது, இந்தியர்கள் பாதிக்கப்படுவதைப் பார்த்து உலகம் வேதனைப்படும்போது, அவர் மாற்று எதார்த்தம் குறித்துப் பேசுகிறார். இந்தியாவின் 3-வது கட்டத் தடுப்பூசி முன்பதிவு செய்துள்ளதற்கு வந்துள்ள குறுஞ்செய்தி குறித்தோ, போலி மருந்துகளை விளம்பரம் செய்தது குறித்தோ, உறுதி செய்யப்படாத சிகிச்சை குறித்தோ அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோனி பாஸி கொண்டாடுவார் எனக் கற்பனை செய்து பார்க்க முடியுமா? நம்முடைய அரசு வெளியிடும் எந்த எண்ணிக்கையையும் யாரும் நம்பமாட்டார்கள்' எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X