பொது செய்தி

இந்தியா

18 கோடி தடுப்பூசிகள் வினியோகம்: சுகாதார அமைச்சகம் தகவல்

Updated : மே 10, 2021 | Added : மே 10, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: 'மாநிலங்களுக்கு இதுவரை 18 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. தற்போது 2 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வசம் கையிருப்பில் உள்ளன' என, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையால் பாதிப்புகள்

புதுடில்லி: 'மாநிலங்களுக்கு இதுவரை 18 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. தற்போது 2 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வசம் கையிருப்பில் உள்ளன' என, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.



latest tamil news



மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையால் பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில், சர்வதேச நாடுகள் மருத்துவ உதவிகளை அளித்து வருகின்றன. அவற்றை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் முறையாக ஒதுக்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்து வருகிறது.இதுவரை, சுமார் 18 கோடி (17,93,57,860) கொரோனா தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ளது. இன்று காலை 8:00 மணி நிலவரப்படி, 16,89,27,797 டோஸ் தடுப்பு மருந்து (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த மூன்று நாட்களில், மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 9,24,910 தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு கூடுதலாக அளிக்க உள்ளது.


latest tamil news


தமிழகத்திற்கு இதுவரை 76,43,010 தடுப்பூசி டோஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் 4.13 விழுக்காடு வீணானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 8,78,437 தடுப்பூசி டோஸ்கள் தமிழகத்தின்வசம் கையிருப்பில் உள்ளன.புதுச்சேரிக்கு இதுவரை 3,97,130 தடுப்பூசி டோஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் 0.59 விழுக்காடு வீணானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 1,79,914 தடுப்பூசி டோஸ்கள் புதுச்சேரி வசம் கையிருப்பில் உள்ளன.இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Unmai vilambi - Triolet,மொரிஷியஸ்
10-மே-202115:23:59 IST Report Abuse
Unmai vilambi இதே செய்தியில் மீதம் எவ்வளவு நபர்களுக்கு விநியோகிக்கபட வேண்டும் என்று விவரித்திருந்தால் தேவலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X