அரசியல் செய்தி

தமிழ்நாடு

நாளொன்றுக்கு 20,000 ரெம்டெசிவிர் மருந்து: முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

Updated : மே 10, 2021 | Added : மே 10, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
சென்னை: தமிழகத்திற்கு நாளொன்றுக்கு 20 ஆயிரம் குப்பிகள் ம்டெசிவர் மருந்து ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் தற்போது 1 லட்சத்து 45 ஆயிரம் பேர் கொரோனா தொற்றிற்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் நுரையீரல் அதிகமாக
TamilnaduCM, Stalin, Remdesivir, Drug, Increase, PiyusGoyal, முதல்வர், ஸ்டாலின்,ரெம்டெசிவிர், மத்திய அமைச்சர்,பியூஸ் கோயல்

சென்னை: தமிழகத்திற்கு நாளொன்றுக்கு 20 ஆயிரம் குப்பிகள் ம்டெசிவர் மருந்து ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் தற்போது 1 லட்சத்து 45 ஆயிரம் பேர் கொரோனா தொற்றிற்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் நுரையீரல் அதிகமாக பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான ரெம்டெசிவிர் மருந்தைத் தேவையான அளவிற்குக் கொள்முதல் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது அனைத்து முக்கிய அரசு மருத்துவமனைகளிலும், ஆறு பெருநகரங்களில் உள்ள தனியார் மருத்துவமனை நோயாளிகளுக்கும் இந்த மருந்து வழங்கப்பட்டு வருகின்றது.


latest tamil news


அனைத்து மாநிலங்களுக்கும் இந்த மருந்திற்கான ஒதுக்கீட்டை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன்படி, தமிழகத்திற்கு இதுவரை 2 லட்சத்து 5 ஆயிரம் குப்பிகள், அதாவது நாளொன்றுக்கு 7 ஆயிரம் குப்பிகள் என்ற குறைந்த அளவிலேயே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் தேவைக்கு இது போதுமானதாக இல்லை என்பதால், இந்த ஒதுக்கீட்டை உடனடியாக உயர்த்தித் தர வேண்டுமென மத்திய ரயில்வே மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலிடம் தொலைபேசி வாயிலாக முதல்வர் கேட்டுக் கொண்டார்.

நாளொன்றுக்கு தமிழகத்திற்குக் குறைந்தபட்சம் 20 ஆயிரம் குப்பிகள் ரெம்டெசிவர் மருந்தை ஒதுக்கீடு செய்யுமாறும், அவ்வாறு செய்தால் மட்டுமே தமிழகத்திலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் தேவைகளை முழுமையாக நிறைவு செய்ய முடியுமென்றும் முதல்வர் வலியுறுத்தினார். மத்திய அமைச்சரும், இந்தக் கோரிக்கை குறித்து பரிசீலித்து ஆவண செய்வதாக உறுதி அளித்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-மே-202105:08:29 IST Report Abuse
ஆப்பு கண்களைப் பாத்தா சரியா தூங்குன மாதிரியே தெரியலை. தீயா வேலை செய்யுறாரு போலிருக்கு.
Rate this:
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
10-மே-202122:08:53 IST Report Abuse
R. Vidya Sagar சுகாதார துறை மந்திரியிடம் கேட்காமல் . . . .
Rate this:
Cancel
Balasubramanyan - Chennai,இந்தியா
10-மே-202120:02:13 IST Report Abuse
Balasubramanyan Palka Dravidan will not beg central govt instead die on corona. It was before election. Our manam miikka Vaiko black balloon specialist where is he. Why he is not opposing state govt request to central. Instead why not multimillionaires in DM K start real (NOT FAKE)PHARMA COPANIES . IPPADIKKU PAKKA DRAVIDAN
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X