பொது செய்தி

தமிழ்நாடு

ஜீயர் பதவிக்கு விண்ணப்பிக்க அறநிலையத்துறை அழைப்பு: இந்துக்கள் கொந்தளிப்பு

Updated : மே 10, 2021 | Added : மே 10, 2021 | கருத்துகள் (226)
Share
Advertisement
திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் ஜீயர் 51வது பட்டத்துக்கு விண்ணப்பிக்க இந்து சமய அறநிலையத்துறை அழைப்பு விடுத்திருப்பது இந்துக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ராமானுஜ மடத்தின் 50வது பட்டம் ஸ்ரீமத் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் சுவாமிகள் 2018 ஜூலை 11ம் தேதி பிற்பகல் 3:00 மணியளவில் ஆச்சார்யன் திருவடியை அடைந்தார்.

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் ஜீயர் 51வது பட்டத்துக்கு விண்ணப்பிக்க இந்து சமய அறநிலையத்துறை அழைப்பு விடுத்திருப்பது இந்துக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.latest tamil news


ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ராமானுஜ மடத்தின் 50வது பட்டம் ஸ்ரீமத் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் சுவாமிகள் 2018 ஜூலை 11ம் தேதி பிற்பகல் 3:00 மணியளவில் ஆச்சார்யன் திருவடியை அடைந்தார். அதன்பின் ஜீயர் பதவி காலியாக இருந்தது.

இந்நிலையில், கடந்த 6ம் தேதி, 'திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் ஜீயர் 51வது பட்டம் காலியாவுள்ளது. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க, இந்து தென்கலை தென்னாச்சார்ய சம்பிரதாயத்தைச் சேர்ந்தவராகவும், கோவிலின் பழக்க வழக்கங்களையும் அனைத்துவித பூஜைகளையும் ஆகமம் மற்றும் அனைத்து சம்பிரதாயங்களையும் அறிந்தவராகவும், திருவிழா மரபுகள், நாலாயிர திவ்யபிரபந்தம், வேதபாராயணம் மற்றும் திருவாராதன கிரமங்கள் தெரிந்தவர்கள் தகுதிவாய்ந்தவர்கள். இவர்கள், ஜூன் 8ம் தேதி மாலை 4:00 மணி வரை விண்ணப்பிக்கலாம்' என, இந்து சமய அறநிலையத் துறை அழைப்பு விடுத்துள்ளது. இது இந்துக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


latest tamil news
'தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்கும் ஒரு நாள் முன், அவசர அவசரமாக இந்த அறிவிப்பை அறநிலையத்துறை விடுத்துள்ளதற்கான காரணம் என்ன? யாரை திருப்திப்படுத்த அறநிலையத்துறை அதிகாரிகள் இவ்வாறு செயல்படுகின்றனர். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ராமானுஜ மடத்தின் ஜீயரை மடத்தினர் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். ஜீயர் நியமனத்தில் புதிய முறையைப் பின்பற்றுவதை தி.மு.க., அரசு கைவிட வேண்டும். இந்துக்களுக்கு எதிராகச் செயப்படுவதற்காக அறநிலையத்துறைக்குள் புகுந்துள்ள புல்லுருவிகளைக் கண்டறிந்து உடனடியாகக் களையெடுக்க வேண்டும்' என, இந்துக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.பா.ஜ.க., மூத்த தலைவர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், 'இந்துவிரோத அரசின் முதல் இந்து விரோதச் செயல். அரசே ஜீயரை நியமிக்க முனைவது மிகப் பெரிய அராஜகம். கார்டினல் ஆர்ச்பிஷப் பாதிரியாரை நியமிக்கும் துணிச்சல் இந்த இந்து விரோதிகளுக்கு வருமா? வீதிக்கு வந்து போராடுவது தவிர வேறு வழியில்லை போலும்' எனப் பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் அறநிலையத் துறையின் அத்துமீறலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (226)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathi R - CHENNAI,இந்தியா
11-மே-202110:22:10 IST Report Abuse
Parthasarathi R DMK government should never do such things. Don't play with Hundu's feelings.
Rate this:
Cancel
shekar shekar - Tirupur,இந்தியா
11-மே-202105:51:02 IST Report Abuse
shekar shekar சிந்திப்போம், மனித குலத்திற்கான சிறந்த முடிவுகளை வரவேற்போம்.
Rate this:
Cancel
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
11-மே-202105:47:57 IST Report Abuse
Svs Yaadum oore //....ஏன்னா நாங்க முந்திரி, பிஸ்தா போட்ட ஸ்பெஷல் இந்து..//....ஜாதியை பற்றி பேச உனக்கு என்ன தகுதி ....உன் கட்சியிலே தனி தொகுதி காரனை பொது தொகுதியில் நின்னு ஜெயிக்க வை ....அப்பறம் நீ ஜாதியை பற்றி பேசு ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X