பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 28,978 பேருக்கு கொரோனா: 232 பேர் உயிரிழப்பு

Updated : மே 10, 2021 | Added : மே 10, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 28,978பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 232 பேர் உயிரிழந்து உள்ளனர். 20,904 பேர் குணமடைந்து உள்ளனர்.இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 46, 233 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 28,978 பேருக்கு கொரோனா உறுதியானது. அதில், 11 பேர், வெளி நாடு மற்றும் வெளி

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 28,978பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 232 பேர் உயிரிழந்து உள்ளனர். 20,904 பேர் குணமடைந்து உள்ளனர்.



latest tamil news



இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 46, 233 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 28,978 பேருக்கு கொரோனா உறுதியானது. அதில், 11 பேர், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள், 28,967 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.இதன் மூலம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,09,237ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 2,41,54,820 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 16,925பேர் ஆண்கள், 12,053 பேர் பெண்கள். இதன் மூலம், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 8,47,770ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 5,61,429ஆகவும் அதிகரித்து உள்ளது. 20,904 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12,40,968 ஆக உயர்ந்தது.

232பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர். அதில், 98 பேர் தனியார் மருத்துவமனையிலும், 134 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15,880ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


மாவட்ட வாரியாக விபரம்


latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandramouli - Mumbai,இந்தியா
10-மே-202120:43:44 IST Report Abuse
Chandramouli இதுவும் கடந்து போகும் என்ற எண்ணத்தில் தான் மும்பையில் தினமும் காலத்தை கடக்கிறோம் .
Rate this:
Cancel
Ramona - london,யுனைடெட் கிங்டம்
10-மே-202119:34:55 IST Report Abuse
Ramona அய்யா, தினமும் எவ்வளவு பேருக்கு கொரோனா என்று நம்பரகளை முதலில் போடுவதைவிடதினமும் எத்தனை நபர்கள் வியாதியிலிருந்து சுகமாக அவரவர் வீட்டிற்கு திரும்பினார்கள் என்பதை சொல்லிவிட்டு பாதிப்பை வெளியிட்டால் கலங்கிய உள்ளங்களில் ஒரு புதிய தெம்பு கிடைக்கும் இல்லையா.சற்று பரிசீலித்தால் நன்றி நன்றி..
Rate this:
Changes - Pkt,இந்தியா
10-மே-202122:51:04 IST Report Abuse
Changesமக்கள் முகக்கவசத்தை போடாததின் விளைவு இந்த செய்தியை போட வேண்டியுள்ளது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X