அரசியல் செய்தி

தமிழ்நாடு

சபாநாயகர் ஆகிறார் அப்பாவு

Updated : மே 11, 2021 | Added : மே 10, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
சென்னை: 'சட்டசபை சபாநாயகர் தேர்தலில், மு.அப்பாவு, துணை சபாநாயகர் தேர்தலில் கு.பிச்சாண்டி ஆகியோர், தி.மு.க., சார்பில் போட்டியிடுவர்' என, அக்கட்சி அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளது.சென்னை, கலைவாணர் அரங்கத்தில் இன்று துவங்கவுள்ள, 16வது சட்டசபை முதல் கூட்டத்தில், தேர்தலில் வெற்றி பெற்ற, எம்.எல்.ஏ.,க்கள் பதவி ஏற்கின்றனர். நாளை, சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல்
சபாநயகர்,அப்பாவு ,தி.மு.க.,

சென்னை: 'சட்டசபை சபாநாயகர் தேர்தலில், மு.அப்பாவு, துணை சபாநாயகர் தேர்தலில் கு.பிச்சாண்டி ஆகியோர், தி.மு.க., சார்பில் போட்டியிடுவர்' என, அக்கட்சி அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளது.

சென்னை, கலைவாணர் அரங்கத்தில் இன்று துவங்கவுள்ள, 16வது சட்டசபை முதல் கூட்டத்தில், தேர்தலில் வெற்றி பெற்ற, எம்.எல்.ஏ.,க்கள் பதவி ஏற்கின்றனர். நாளை, சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக, தி.மு.க., தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், 'சபாநாயகர் தேர்தலில், ராதாபுரம் எம்.எல்.ஏ., - அப்பாவு, துணை சபாநாயகராக கீழ்பென்னாத்துார் எம்.எல்.ஏ., - பிச்சாண்டி ஆகியோர், தி.மு.க., சார்பில் போட்டியிடுகின்றனர்' என, கூறப்பட்டுள்ளது.


நான்கு முறை வெற்றி



கடந்த 1996ல், த.மா.கா., சார்பில் முதல் முறையாக, ராதாபுரம் தொகுதியில் வெற்றி பெற்றார்,அப்பாவு. 2001ல் த.மா.கா.,வில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால், சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின், தி.மு.க.,வில் இணைந்தார். கடந்த 2006 தேர்தலில், தி.மு.க., சார்பில் வெற்றி பெற்றார். 2016 சட்டசபை தேர்தலில், குறைந்த ஓட்டில் தோல்வி அடைந்தார். தற்போது, நான்காவது முறையாக, ராதாபுரம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். திருநெல்வேலி மாவட்டத்திற்கு அமைச்சர் பிரதிநிதித்துவம் வழங்காததால், சபாநாயகர் பதவி, மு.அப்பாவுக்கு வழங்கப்படுகிறது.சாமானிய குடும்பத்தில் பிறந்து, ஆசிரியராக வாழ்க்கையை துவக்கி, சமூக சேவை, மக்கள் சேவையில் ஈடுபட்ட அப்பாவு , தற்போது சபாநாயகராக உயர்கிறார்.


ஆறு முறை வெற்றி



latest tamil news




துணை சபாநாயகராகும் பிச்சாண்டி, 1989, 1996, 2001, 2006 என, நான்கு முறை, திருண்ணாமலை தொகுதியில் வெற்றி பெற்றார். கடந்த 2016ம் ஆண்டு மற்றும் தற்போதைய தேர்தலில், கீழ்பென்னாத்துார் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். கடந்த1996ம் ஆண்டு, தி.மு.க., ஆட்சியில் வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அறவோன் - Chennai,இந்தியா
11-மே-202110:59:16 IST Report Abuse
அறவோன் ராதாபுரத்தில் வென்றவர் சபாநாயகர், தாராபுரத்தில் தோற்ற நபர் ஆளுநரா?
Rate this:
Cancel
rajan_subramanian manian - Manama,பஹ்ரைன்
11-மே-202110:01:08 IST Report Abuse
rajan_subramanian manian பண்பாடோடு பேசக்கூடியவர்?இவரா?
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
11-மே-202100:13:16 IST Report Abuse
வெகுளி சபாநாயகரின் நடவடிக்கைகளை நீதிமன்றம் கூட கட்டுப்படுத்த முடியாது... அவரது கட்டளையை முதல்வர் கூட மீறமுடியாது... எனவே இயற்கையாகவே இந்த பதவிக்கு பொருத்தமானவர் உதயநிதிதான்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X