சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : மே 10, 2021
Share
Advertisement
'நல்ல, 'ஐடியா' தான். அதற்கு முன், நம் தம்பிகளையும், தங்கைகளையும், முப்பாட்டன்களையும், மாமன்களையும், 15 நாட்களுக்கு வீட்டிற்குள் இருக்க சொல்லுங்கள்...' என, கிண்டலாக சொல்லத் தோன்றும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை: பேரிடர் கால நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தை ஐந்து மண்டலங்களாக பிரிக்க வேண்டும். அந்த ஐந்து

பேச்சு, பேட்டி, அறிக்கை

'நல்ல, 'ஐடியா' தான். அதற்கு முன், நம் தம்பிகளையும், தங்கைகளையும், முப்பாட்டன்களையும், மாமன்களையும், 15 நாட்களுக்கு வீட்டிற்குள் இருக்க சொல்லுங்கள்...' என, கிண்டலாக சொல்லத் தோன்றும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை: பேரிடர் கால நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தை ஐந்து மண்டலங்களாக பிரிக்க வேண்டும். அந்த ஐந்து மண்டலங்களுக்கும், ஐந்து சுகாதாரத்துறை செயலர்களை நியமித்து, நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

'ஈ.வெ.ரா., ரசிகர்கள் தினமும் உங்களை பின்பற்றுவதை, சூசகமாகச் சொல்றீங்களே... புத்திசாலி தான்...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., கலாசார பிரிவின் தலைவர், நடிகை காயத்ரி ரகுராம் அறிக்கை: ஈ.வெ.ரா., தினமும், 'காயத்ரி' மந்திரத்தை உச்சரிப்பாரோ... அவரைப் பின்பற்றுபவர்கள், தினமும் காயத்ரி மந்திரத்தை முழக்கமிடுகின்றனர். அவர்களை நாத்திகர் என்று நான் நினைத்தேன். 'காயத்ரி'யைப் பிரார்த்தனை செய்யாமல் அவர்கள் ஒருபோதும் ஓய்வெடுப்பதில்லை.

'எத்தனை போலீஸ் கமிஷனர்கள் மாறி மாறி வந்தாலும், ரவுடிகளும் ஒழிக்கப்படவில்லை; போலீஸ் அணுகுமுறையிலும் மாற்றம் வரவில்லை...' என, சொல்லத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் மத்திய கமிட்டி உறுப்பினர், டி.கே.ரங்கராஜன் எம்.பி., அறிக்கை: ஒவ்வொரு முறை புதிய போலீஸ் கமிஷனர் பொறுப்பேற்கும்போது, ரவுடிகள் ஒழிக்கப்படுவர் என உறுதிமொழி எடுக்கின்றனர். அதை பார்க்கும்போது, ஏற்கனவே பணியில் இருந்த கமிஷனர் அதை செய்யவில்லையோ என்ற எண்ணம், சாதாரண மக்களுக்கு ஏற்படுவது இயற்கை.

'பத்திரிகையாளர்களை பிரதமர் சந்தித்தால் மட்டும், கொரோனா போன்ற பிரச்னைகளை தீர்த்து விட முடியுமா; பிரதமரின் பிடிவாதத்திற்கு ஏதேனும் காரணம் இருக்கும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா அறிக்கை: பிரதமராக பொறுப்பேற்று, ஏழு ஆண்டுகள் ஆகியுள்ள போதிலும், ஒரு நாள் கூட பிரதமர் மோடி, பத்திரிகையாளர்களை சந்தித்ததில்லை. அதற்கு காரணம், தன்னை யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்ற மமதை தான். இப்போது கொரோனா அசுர தாண்டவம் ஆடுவதால், மோடியிடம் தான், அவரின் மோசமான நிர்வாகம் பற்றி நாம் கேட்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகி உள்ளோம்.



'ஸ்டாலின் முதல்வரான மூன்றே நாட்களில் உங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு விட்டது. இன்னமும், தமிழக மக்களுக்கு நம்பிக்கை வர வேண்டுமே...' என, சொல்லத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை:
தமிழக முதல்வராக பொறுப்பேற்றவுடன், ஸ்டாலின், ஐந்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். 100 நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியை நியமித்துள்ளார். இதன் மூலம், தமிழகத்தில் நல்லாட்சி மலரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X