பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : மே 10, 2021
Share
Advertisement
மே 11, 1897சிவகங்கையில், 1897 மே 11ம் தேதி பிறந்தவர் சுத்தானந்த பாரதியார். இயற்பெயர் வேங்கட சுப்ரமணியன். 8வது வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றல் பெற்றார்.வேதம், உபநிஷத்துகள், பிரம்ம சூத்திரம் ஆகியவற்றை கற்று, அவற்றை தமிழில் மொழிபெயர்த்தார். பல மொழிகளை கற்றறிந்தார். சமஸ்கிருதம், ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளிலும் நுால்கள் இயற்றியுள்ளார்.கவிதை, உரைநடை, பயணக் கட்டுரை,

இதே நாளில் அன்று

மே 11, 1897

சிவகங்கையில், 1897 மே 11ம் தேதி பிறந்தவர் சுத்தானந்த பாரதியார். இயற்பெயர் வேங்கட சுப்ரமணியன். 8வது வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றல் பெற்றார்.வேதம், உபநிஷத்துகள், பிரம்ம சூத்திரம் ஆகியவற்றை கற்று, அவற்றை தமிழில் மொழிபெயர்த்தார். பல மொழிகளை கற்றறிந்தார். சமஸ்கிருதம், ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளிலும் நுால்கள் இயற்றியுள்ளார்.
கவிதை, உரைநடை, பயணக் கட்டுரை, இலக்கணம், கீர்த்தனை, நாடகம், திறனாய்வு, சிறுகதை, வாழ்க்கை வரலாறு ஆகிய பல துறைகளிலும், 100க்கும் மேற்பட்ட நுால்களை எழுதியுள்ளார்.திருக்குறளை, அதே ஈரடிகளில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இமயமலையில் வாழ்ந்த சித்தர் ஒருவர், இவருக்கு, 'சுத்தானந்தம்' என்று பெயரிட்டு தீட்சை வழங்கினார்.
புதுவை ஆசிரமத்தில், 20 ஆண்டுகள் மவுன விரதம் இருந்து வந்தார். பிரான்ஸ், சீனா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு சென்று, சொற்பொழிவு ஆற்றியுள்ளார். சிவகங்கையில், 'சுத்தானந்த யோக சமாஜம்' எனும் அமைப்பை நிறுவினார். 1990 மார்ச் 7ம் தேதி, தன் 93வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.'கவியோகி' சுத்தானந்த பாரதியார் பிறந்த தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X