கங்கை, யமுனை நதிகளில் சடலங்கள் : மக்கள் கடும் பீதி

Updated : மே 10, 2021 | Added : மே 10, 2021 | கருத்துகள் (27)
Share
Advertisement
பாட்னா : பீஹாரில் கங்கை நதியில், 40க்கும் மேற்பட்ட சடலங்கள் மிதந்ததால் மக்கள் பீதி அடைந்தனர். பீஹாரில் கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 5.91 லட்சத்தை கடந்துள்ளது.இந்நிலையில் பீஹார் எல்லையோரம், பக்சார் மாவட்டத்தில் ஓடும் கங்கை நதியில் 40க்கும் மேற்பட்ட சடலங்கள் மிதந்தன. இதை பார்த்து
கங்கை, யமுனை நதிகள்,  சடலங்கள் ;  மக்கள் கடும் பீதி

பாட்னா : பீஹாரில் கங்கை நதியில், 40க்கும் மேற்பட்ட சடலங்கள் மிதந்ததால் மக்கள் பீதி அடைந்தனர்.
பீஹாரில் கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 5.91 லட்சத்தை கடந்துள்ளது.இந்நிலையில் பீஹார் எல்லையோரம், பக்சார் மாவட்டத்தில் ஓடும் கங்கை நதியில் 40க்கும் மேற்பட்ட சடலங்கள் மிதந்தன.


latest tamil newsஇதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், நதியில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட உடல்களை மீட்டனர். இந்த உடல்களை பாதுகாப்பான மற்றும் ஒழுக்கமான முறையில் தகனம் செய்து அப்புறப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
'இவர்கள் கொரோனா வைரசால் உயிரிழந்திருக்கலாம்' என, பக்சார் பகுதி மக்கள் அச்சம் தெரிவித்தனர். கொரோனாவால் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சத்தில், இந்த உடல்களை, உறவினர்கள் நதியில் வீசிவிட்டு சென்றிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. '
யமுனையிலும் உடல்கள்பீஹார் மட்டுமல்லாமல், உத்தர பிரதேசத்தின் ஹமிர்பூர் மாவட்டத்தில் யமுனை நதியிலும், பல சடலங்கள் மிதந்தன.இது குறித்து காவல்துறை உதவி கண்காணிப்பாளர் அனுாப் குமார் சிங் கூறுகையில், “இதற்கு முன்பு வரை, ஒன்று இரண்டு சடலங்கள் மட்டுமே இந்த நதியில் கண்டெடுக்கப்பட்டன.''இப்போது அதிக எண்ணிக்கையிலான சடலங்கள் மிதப்பதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர், என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
amuthan - kanyakumari,இந்தியா
11-மே-202109:24:00 IST Report Abuse
amuthan What Next? 5000 cr rupees allotment to clean ganga river
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
11-மே-202108:13:02 IST Report Abuse
VENKATASUBRAMANIAN தலபுராணம் அவர்களே முதலில் மக்களை விதிகளை கடை பிடிக்க சொல்லுங்கள். அப்புறம் அடுத்தவரை குறை சொல்லுங்கள். எதை எடுத்தாலும் மோடியை குறை சொல்லுவதை நிறுத்துங்கள். உங்களை போனறு எண்ணத்தில் இருக்கும் அதிகாரிகளால் தான் இவ்வாறு நடக்கிறது. சிதம்பரம் எப்படி அரசாங்க பைலை எடுத்தரோ. அதேபோல்தான். ஒருவர் மட்டும் எல்லாம் செய்து விடமுடியாது.
Rate this:
Ellamman - Chennai,இந்தியா
11-மே-202109:52:13 IST Report Abuse
Ellammanபோலியான புள்ளிவிவரங்களை அள்ளி தெளித்து நாங்கள் சாதித்துவிட்டோம் என்று பறைசாற்றுவதற்கு மட்டும் மோடி தேவை... இப்படி மக்கள் பணபற்றாக்குறையால் ஈமகிரியை செய்யமுடியாமல் இப்படி நடந்துகொள்ளும் மட்டும் பீசப்பியை... யோகியை.. மோடியை குறை சொல்ல கூடாதா? தலைமை பண்பு என்றால் என்ன என்று தெரியுமா? அப்துல் கலாம் செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவினால் அவர் முன்னாடி நிற்கமாட்டார் ... அவருடைய டீமை முன்னாடி நிறுத்துவார்... விண்ணில் ஏவுவது தோல்வி அடைந்தா அவர் தான் பத்திரிகைகளை சந்திப்பார்...
Rate this:
Enrum anbudan - dammam,சவுதி அரேபியா
11-மே-202114:18:03 IST Report Abuse
Enrum anbudanபெரும்பாலும் அதிகாரிகளால் தான் இவ்வாறான தவறுகள் அதிகம் நடக்கின்றது. நன்றாக சம்பளம் வாங்கி கொழுத்து திரிகின்ற அதிகாரிகளுக்கு முதலில் குறைந்த பட்ச தண்டனை கொடுத்தால் தான் திருந்துவார்கள் அல்லது அவர்கள் குடும்பத்தில் இவ்வாறான துன்ப நிகழ்வுகள் நடக்க வேண்டும்..... அப்பொழுதும் அறிவு வருமா என்பது தெரியவில்லை...
Rate this:
Amal Anandan - chennai,இந்தியா
12-மே-202103:15:11 IST Report Abuse
Amal Anandan//தலபுராணம் அவர்களே முதலில் மக்களை விதிகளை கடை பிடிக்க சொல்லுங்கள். அப்புறம் அடுத்தவரை குறை சொல்லுங்கள். எதை எடுத்தாலும் மோடியை குறை சொல்லுவதை நிறுத்துங்கள். உங்களை போனறு எண்ணத்தில் இருக்கும் அதிகாரிகளால் தான் இவ்வாறு நடக்கிறது. சிதம்பரம் எப்படி அரசாங்க பைலை எடுத்தரோ. அதேபோல்தான். ஒருவர் மட்டும் எல்லாம் செய்து விடமுடியாது.// மோடியை மட்டும் குறை சொல்லவே கூடாது. இரண்டு மாதங்களுக்கு முன் கொரோனாவை வென்றவர் என்று புகழுரை. இப்போது பிரச்சினை என்றவுடன் மக்களை குத்தம் சொல்லணும்? விளங்கிடும்....
Rate this:
Cancel
ஆப்பு சங்கி புலவர் பாரு... பாரு... பாரு...கொரொனா பரவுது பாரு...இதுக்கு காரணம் யாரு...எல்லாம் அந்த நேரு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X