மம்தா அமைச்சரவை பதவியேற்பு: எதிர்க்கட்சி தலைவரானார் சுவேந்து

Updated : மே 12, 2021 | Added : மே 10, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
கோல்கட்டா :மேற்கு வங்கத்தில், 43 பேர் அமைச்சர்களாக நேற்று பதவியேற்றனர். முதல்வர் மம்தா பானர்ஜியை தோற்கடித்த சுவேந்து அதிகாரியை, எதிர்க்கட்சி தலைவராக பா.ஜ., தேர்வு செய்துள்ளது.மேற்கு வங்க சட்டசபைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., வென்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. மம்தா பானர்ஜி ஏற்கனவே முதல்வராக
மம்தா அமைச்சர், பதவியேற்பு எதிர்க்கட்சி ,சுவேந்து

கோல்கட்டா :மேற்கு வங்கத்தில், 43 பேர் அமைச்சர்களாக நேற்று பதவியேற்றனர். முதல்வர் மம்தா பானர்ஜியை தோற்கடித்த சுவேந்து அதிகாரியை, எதிர்க்கட்சி தலைவராக பா.ஜ., தேர்வு செய்துள்ளது.

மேற்கு வங்க சட்டசபைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., வென்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. மம்தா பானர்ஜி ஏற்கனவே முதல்வராக பதவியேற்றுள்ளார்.இந்நிலையில், 43 பேர் அமைச்சர்களாக நேற்று பதவியேற்றனர். அமைச்சர்களுக்கான துறைகளும் நேற்று அறிவிக்கப்பட்டன. உள்துறை மற்றும் சுகாதார துறையை, முதல்வர் மம்தா பானர்ஜி தன்வசம் வைத்துள்ளார்.''ஆசிமா பாத்ரா மற்றும் பார்த்தா பவுமிக் அமைச்சர்களாக விரைவில் பதவியேற்பர்,'' என, மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

திரிணமுல் காங்., மூத்த தலைவராக இருந்த சுவேந்து அதிகாரி, சட்டசபை தேர்தலுக்கு முன் பா.ஜ.,வில் இணைந்தார். சட்டசபை தேர்தலில், நந்திகிராம் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிடும்படி, மம்தாவுக்கு அவர் சவால் விடுத்திருந்தார்.அந்த தொகுதியில் மம்தாவை வென்ற சுவேந்து அதிகாரியை, எதிர்க்கட்சி தலைவராக, பா.ஜ., நேற்று அறிவித்துள்ளது. பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக, கட்சியின் மூத்த தலைவரும், மத்திய சட்ட அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் அறிவித்தார்.


சி.ஐ.எஸ்.எப்.,புக்கு 'சம்மன்'



சட்டசபை தேர்தல் ஓட்டுப் பதிவின்போது, கூச்பெஹர் மாவட்டம், சீதல்குசி பகுதியில் வன்முறை ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த சி.ஐ.எஸ்.எப்., எனப்படும் மத்திய தொழிலக
பாதுகாப்பு படையினர் சுட்டதில், ஐந்து பேர் உயிரிழந்தனர்.சி.ஐ.டி., எனப்படும் குற்ற புலனாய்வு துறை விசாரணைக்கு, முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, சி.ஐ.எஸ்.எப்., படையைச் சேர்ந்த நான்கு கான்ஸ்டபிள்கள், ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு துணை கமான்டென்டுக்கு, 'சம்மன்' அனுப்பப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
11-மே-202118:42:57 IST Report Abuse
sankaseshan எதிர்கட்சி தலைவ ர பேச விடுவார்களா தமிழ்நாட்டில் நடந்தது போல பேசவிடாமல் செய்வார்களா ? சபாநாயகர் அவிங்க ஆளு .
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
11-மே-202117:00:18 IST Report Abuse
Malick Raja கொரோனா வந்தும் கூட அறிவிலிகளுக்கு ஆர்ப்பரிப்பு அடங்கவில்லை .. எல்லாம் முடிக்கப்படும் ..
Rate this:
Cancel
இறைவனுக்கே இறைவன் மஹாவிஷ்ணு மமதை பேகம் மாநிலத்தில் இனி மேலும் பல கொலைகளை அரங்கேற்றுவார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X