தமிழ்நாடு

தலைதுாக்கும் பேனர் கலாச்சாரம்! காற்றில் பறக்குது தடை உத்தரவு: அதிகாரிகள் கையில் 'சாட்டை' மாயம்

Updated : மே 11, 2021 | Added : மே 10, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூரில், மீண்டும் பேனர் கலாச்சாரம் தலைதுாக்குகிறது; மக்கள் பிரதிநிதிகளே சட்டத்தை மீறும் அவல நிலை தொடர்கிறது. ஆட்சியாளர்களுக்கு பயந்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர்.சென்னை, பள்ளிக்கரணை அருகே, 2019 செப்., 12ம் தேதி, டூ - வீலரில் சென்றுகொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண், சாலையிலிருந்த பேனர் விழுந்ததில், நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவருக்குப்
தலைதுாக்கும் பேனர் கலாச்சாரம்! காற்றில் பறக்குது தடை உத்தரவு: அதிகாரிகள் கையில் 'சாட்டை' மாயம்

திருப்பூர்:திருப்பூரில், மீண்டும் பேனர் கலாச்சாரம் தலைதுாக்குகிறது; மக்கள் பிரதிநிதிகளே சட்டத்தை மீறும் அவல நிலை தொடர்கிறது. ஆட்சியாளர்களுக்கு பயந்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர்.
சென்னை, பள்ளிக்கரணை அருகே, 2019 செப்., 12ம் தேதி, டூ - வீலரில் சென்றுகொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண், சாலையிலிருந்த பேனர் விழுந்ததில், நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவருக்குப் பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியதில், சுபஸ்ரீ படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.இதனால், பிளக்ஸ் பேனர் வைக்க, ஐகோர்ட் தடை விதித்தது. ஆரம்பத்தில் இந்த உத்தரவை அமல்படுத்த, உள்ளாட்சித் துறை அதிகாரிகள் தீவிரம் காட்டினர். ஆனால், காலப்போக்கில், நீதிமன்ற உத்தரவு காற்றில் பறக்க விடப்பட்டது.சட்டசபை தேர்தலின்போது, திருப்பூர் மாவட்டத்துக்கு, அரசியல் கட்சி தலைவர்கள் பலர் வருகை புரிந்தனர். விதிமுறைகளை மீறி, தலைவர்களை வரவேற்று பேனர்கள் அதிகளவில் கட்டப்பட்டிருந்தன.
தற்போது, தேர்தலில் பெரும்பான்மை இடங்களை வென்று, தி.மு.க., ஆட்சி அமைத்துள்ளது. திருப்பூரில் பல்வேறு இடங்களில், ஸ்டாலின் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தும், கொரோனா நிவாரணமாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் குறித்தும், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.இதேபோல், திருப்பூர் வடக்கு தொகுதியில் வென்ற, எம்.எல்.ஏ., விஜயகுமார் படத்துடன், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.மீண்டும் தலைதுாக்கி உள்ள பேனர் கலாச்சாரம் குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:அ.தி.மு.க., ஆட்சியின்போது, பேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்தபோது, முதல்வர் ஸ்டாலின் கடுமையாக சாடினார். தங்கள் கட்சியினர் பேனர் வைக்கவும் தடை விதித்தார்.

தற்போது தி.மு.க., ஆட்சியில், முதல்வரின் கண்டிப்பையோ, கோர்ட்டின் உத்தரவையோ மதிக்காமல், திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆட்சியாளர்களுக்கு பயந்து, விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டாலும், அதிகாரிகள் கண்டும் காணாமல் இருக்கின்றனர்.பேனர்களை அகற்றுவதோடு, ஆளும் கட்சியாக இருந்தாலும், சரி; எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி; வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுத்தால், இனி இதுபோன்று பேனர்கள் வைக்க மாட்டார்கள்.

எம்.எல்.ஏ.,க்களாக வெற்றி பெற்ற செல்வராஜ், விஜயகுமார் போன்றவர்கள், தங்கள் கட்சியினருக்கு அறிவுறுத்தி பேனர்களை அகற்றச் செய்ய வேண்டும்.இனியும் நடவடிக்கை எடுக்காவிட்டால், கோர்ட் மூலம் தான் இதற்கு தீர்வு காண முடியும். அதிகாரிகள், விதிமுறைப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
11-மே-202114:05:46 IST Report Abuse
S. Narayanan பாவம் முதல்வர் உத்தரவுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
11-மே-202108:41:45 IST Report Abuse
a natanasabapathy Yentha கட்சி ஆட்சிக்கு வருகிறதோ அதன் காலில் விழுந்து காரியம் சாதிப்பது தான் அதிகாரிகளின் வழக்கம் அவர்களிடம் நேர்மையை எதிர் பார்க்க முடியாது பாவம் அவர்களும் குடும்பஸ்தர் தான்
Rate this:
Cancel
11-மே-202108:19:10 IST Report Abuse
அருணா தன்மகனை விளம்பர பலகையில் பார்ப்பது தனி மகிழ்ச்சி. போகப் போக கவனம் செலுத்துவார்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X