கமிஷன் காசு பிரிப்பதில் குஸ்தி... கல்லா கட்ட போலீசுக்கு ஆசை ஜாஸ்தி!

Updated : மே 11, 2021 | Added : மே 10, 2021
Advertisement
''மித்து... மதியம், 12:00 மணிக்குள்ள பல சரக்கு கடைய அடைச்சுடுவாங்க. அதுக்குள்ள, போய் மளிகை பொருள் வாங்கிட்டு வந்துடலாம். ரெடியா இரு. இதோ வந்துட்டேன்,'' என மொபைல் போனில் பேசிய சித்ரா, அடுத்த, 10வது நிமிடத்தில் மித்ரா வீட்டுக்கு சென்றாள். இருவரும், டூவீலரில் கடைத்தெருவுக்கு சென்றனர்.''என்னக்கா கொரோனா இப்படி பயமுறுத்துது; வெளியே வரவே பயமா இருக்கு,'' என்றாள்
 கமிஷன் காசு பிரிப்பதில் குஸ்தி...  கல்லா கட்ட போலீசுக்கு ஆசை ஜாஸ்தி!

''மித்து... மதியம், 12:00 மணிக்குள்ள பல சரக்கு கடைய அடைச்சுடுவாங்க. அதுக்குள்ள, போய் மளிகை பொருள் வாங்கிட்டு வந்துடலாம். ரெடியா இரு. இதோ வந்துட்டேன்,'' என மொபைல் போனில் பேசிய சித்ரா, அடுத்த, 10வது நிமிடத்தில் மித்ரா வீட்டுக்கு சென்றாள்.

இருவரும், டூவீலரில் கடைத்தெருவுக்கு சென்றனர்.

''என்னக்கா கொரோனா இப்படி பயமுறுத்துது; வெளியே வரவே பயமா இருக்கு,'' என்றாள் மித்ரா.

''ஆமான்டி. அதுக்குத்தான் வேற வழியில்லாம 'லாக் டவுண்' போட்டிருக்காங்க. ஆனா, யாரு கேக்கறாங்க. டூவீலரில், காரில் தேவையில்லாம பலரும் சுத்திட்டுத்தான் இருக்காங்க. போலீஸ்காரங்க என்ன சொன்னாலும் கேக்கறதில்லை. 'அட்வைஸ்' பண்ணி அனுப்பறாங்க...''

''அக்கா... நமக்கு தான் 'சேப்டி' பண்றாங்கன்னு நெனச்சு ஒத்துழைப்பு கொடுக்கோணும். ஜனங்க இப்படின்னா, ஜி.எச்.,சில் நடந்த ஒரு விஷயத்தை கேட்ட தலையே சுத்துதுக்கா...''

''என்னடி விஷயம்''''அக்கா, வெள்ளகோவில்ல இருந்து, நாலு கொரோனா பாஸிட்டிவ் உள்ளவங்க, திருப்பூர் ஜி.எச்., போயிருக்காங்க. 'பெட்' இல்லைன்னு சொல்லி, அவிநாசி மகாராஜா காலேஜ்க்கு போங்கன்னு சொல்லியிருக்காங்க. ஆம்புலன்ஸ் இல்லாததால், பஸ்சில போயிருக்காங்க. அதனால, எத்தனை பேருக்கு தொற்று பரவுச்சோ, என்னமோ...'' கவலைப்பட்டாள் மித்ரா.

''இந்த மாதிரி நடந்துகிட்டா இன்னும் என்னன்ன பிரச்னை வரும்னு தெரியலே. அதுவுமில்லாம, ஒரு முறையான நடவடிக்கையே இல்ல. இப்ப பாரு, கொரோனா டெஸ்ட் 'ரிசல்ட்' வர்றதுக்கு, அஞ்சு நாள் ஆகுதாம். டெஸ்ட்டுக்கு கொடுத்தவர், பல பக்கம் போயிட்டு வர்றதால, பல பேருக்கு பரவிடுதாம். இதுக்கு கலெக்டர் தான் ஒரு முடிவெடுக்கணும்,''

''கரெக்டா சொன்னீங்க்கா...'' என்ற மித்ரா, ''கொரோனா ஊரடங்கு நேரத்துல கள்ளச்சந்தைல 'சரக்கு' விக்கறவங்ளோட, 'டாஸ்மாக்' ஊழியர்கள், 'சீக்ரெட் டீலிங்' வைச்சு இருக்காங்களாம்,'' என அடுத்த மேட்டருக்கு தாவினாள்.

''எப்படி சொல்ற?''

''ரெண்டு நாளைக்கு முன்னாடி, கோவையில இருக்க ஒரு ரெஸ்ட்ரான்ட் ஓனரு, எல்லை தாண்டி, அவிநாசியில இருக்க ஒரு 'டாஸ்மாக்' கடைல இருந்து, 27 பெட்டில, 2 லட்சம் ரூபாய்க்கு மதுபானங்களை வாங்கிட்டு போனப்ப, மதுவிலக்கு போலீஸ்காரங்க பிடிச்சுட்டாங்க...''

''விசாரணையில, விற்பனை மந்தமா இருக்கற 'டாஸ்மாக்' கடை ஊழியருங்க, தாபா ஓட்டல்காரங்ககிட்ட, 'எந்த சரக்கை, எப்போ கேட்டாலும், எவ்வளவு வேணும்னாலும் தர்றோம்'ன்னு சொல்லி 'டீலிங்' வச்சிருக்காங்களாம்,''

''இந்த மேட்டரில், ரெண்டு ஊழியர் மட்டும் சிக்கிட்டாங்க. போலீசார் கேட்டதுக்கு, 'நாங்கெல்லாம் ஆளுங்கட்சி தெரியுமா?'னு சொன்னாங்களாம். 'நீங்க யாரா வேணா இருங்க. எங்க டியூட்டியை செய்யறோம்,'னு அரெஸ்ட் செஞ்சிருக்கா...''

''ஆனா, 'கேங்' லீடர்ஸ் ரெண்டு பேரு எஸ்கேப் ஆயிட்டாங்களாம்,'' என்ற மித்ரா, ''அக்கா, 'ராகவேந்திரா' ஸ்டோர்ஸ்க்கு போயிட்டு, 'மோகன்' மளிகைக்கடைக்கு போலம்'' என்றதும், வண்டியை நிறுத்தினாள், சித்ரா.இருவரும் பொருட்களை வாங்கி விட்டு மீண்டும் புறப்பட்டனர்.''மித்து, பல்லடம் பஸ் ஸ்டாண்ட், சிக்னல்னு எங்க பாத்தாலும் 'பார்' வந்துடுச்சாம். போன மாசம் வரைக்கும் இலை கட்சிக்காரங்களுக்கு மாமூல் போனது. இப்போ, உள்ளூர்ல அவங்க கட்சி ஜெயிச்சாலும், தி.மு.க., ஆட்சில இருக்கு. இதனால ரெண்டு பேருக்கும் மாமூல் கொடுக்கணும்னு, 'பார்' நடத்தறவங்க புலம்பறாங்களாம்,''

''மதுக்கடை 'பார்' நடத்துறதுக்கு இத்தனை போட்டி எதுக்குங்க்கா?''''வெரம் புரியாம பேசாதே. 'பார்' நடத்தியே திருப்பூர், அவிநாசி, பல்லடம் இப்படி பல ஊரில, பலபேரு, 'குரோர்பதி' ஆயிட்டாங்க. 'பார்'ல வேல பாக்கற சப்ளை பசங்க கூட, ரொம்ப செழிப்பா இருக்காங்களாம். சிலரு, தாபா ஓட்டல் வச்சி நடத்துறாங்களாம். இப்ப புரியுதா, ஏன் ஆசைப்படறாங்கன்னு,''''ஆட்சி மாறியும் காட்சி மாறலைன்னு, நல்லா புரிஞ்சுதுங்க்கா''அப்போது, வழியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அதைப்பார்த்த சித்ரா, ''ஆட்சி மாறின ஒரு சில நாளிலேயே ஒற்றர்படை பெண் ஆபீசரை டிரான்ஸ்பர் பண்ணி, 'வெயிட்டிங் லிஸ்ட்ல' வச்சுட்டாங்க,'' என்றார்.

''யாருங்க்கா...''

''அந்த ஆபீசரு, இலை கட்சியின் கொங்கு மண்டல வி.ஐ.பி.,யின் ஆதரவு பெற்றவங்களாம். அவங்க மட்டுமில்லாம, அவரோட ஆதரவு பெற்ற மத்த ஆபீசர்களின் 'லிஸ்ட்' எடுத்து வச்சு, 'டிரான்ஸ்பர்' பண்ண ஆரம்பிச்சுட்டாங்க,''

''யாரு ஆட்சிக்கு வந்தாலும் இப்படி நடக்குறது சகஜம்தானே,'' சொன்ன மித்ரா, கமிஷன் தொகையை பங்கு போடறதுல போலீஸ்காரங்களுக்குள்ள 'கலவரம்' ஆகி போச்சு,'' என வேறொரு மேட்டரை கூறினாள்.

''அப்படியா...'' ஆர்வமாக கேட்டாள் சித்ரா.

''சிட்டில, 'நார்த் ரேஞ்ச்'ல இருக்க ஒரு ஸ்டேஷனில், 'குட்கா' பறிமுதல் பண்ண சரக்குகளை பாதியளவு பதுக்கி வைச்ச போலீஸ்காரங்க, கூட்டு சேர்ந்து, ஒரு வியாபாரி மூலமா வித்துட்டாங்க. அதுல வந்த 'லகர' தொகையை, பங்கு போடறதுல சண்டை வந்துடுச்சாம்,''

''கை வைக்கிற அளவுக்கு நிலைமை போயிடுச்சாம். இதபத்தி தெரிஞ்சுகிட்ட ஸ்டேஷன் ஆபீசரு, 'என்கொயரி' பண்ணிட்டு இருக்காராம்,'' விளக்கினாள் மித்ரா.

''இதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியலையா?'' என்ற சித்ரா, ''காங்கயம் ரோட்டுல, ஊருக்கு ஒதுக்குபுறமா இருக்கு ஸ்டேஷனை சேர்ந்த ஒரு குட்டி ஆபீசரு, சக போலீஸ்காரங்கள, ரொம்ப மோசமா பேசுறாராம். அதிலயும், லேடி போலீஸ்கிட்டயே, இரட்டை அர்த்த வசனத்தில பேசுறாராம். போலீசுக்கே இப்படின்னா, கம்ப்ளைன்ட் கொடுக்க லேடீஸ் ஸ்டேஷனுக்கு போறதுக்கே பயப்படறாங்களாம்,'' விளக்கினாள்.

''ஆமாங்க்கா. ஸ்டேஷனுக்கு பக்கத்தில இருக்கற 'பழனிசாமி' அங்கிள் கூட, இதப்பத்தி சொல்லியிருக்காரு,'' என்ற மித்ரா, ''அதுமட்டுமில்லீங்க்கா. அந்த ஸ்டேஷன் எல்லையில இருக்க காசிபாளையம் 'செக் போஸ்ட்'ல எந்த வண்டி வந்தாலும், 'வரி' வசூலிக்காம அனுப்புறதே இல்லையாம்,''

''ரெண்டு நாளைக்கு முன்னாடி கூட, பனியன் கம்பெனி ஸ்டாப் ஒருத்தர்கிட்ட, எல்லா டாக்குமென்ட்டை பாத்துட்டு, 'ஸ்மோக் சர்டிபிகேட்' கேட்டு, வசூல் பண்ணிட்டாங்களாம்,'' கோபமாக சொன்னாள் மித்ரா.

''விவேக் பட காமெடி போல, இந்த மாதிரியான போலீசுக்கு, 'ஏழரை'தான் போட்டு காட்டணும் போல,'' என சிரித்த சித்ரா, அரசியல் கட்சிகளின் பேனர்களை பார்த்து, ''பிளக்ஸ் பேனர் கலாசாரம் மீண்டும் தலைதுாக்கிடுச்சு பாத்தியா,'' என்றாள்.

''ஆமாங்க்கா. மறுபடியும் ஏதாவது விபரீதம் நடக்கிறதுக்குள்ள நடவடிக்கை எடுத்தா பரவாயில்ல,''''மித்து, எலக்ஷன் ரிசல்ட் எதிரொலியா, 'மாவட்ட'த்தை மாத்த போறாங்களாம்'' என, அரசியல் குறித்து பேசிய சித்ரா, ''இலைக்கட்சில, கோஷ்டி பூசல் அதிகமா இருந்ததால, பொள்ளாச்சிக்காரரை மாவட்ட செயலாளரா போட்டாங்க. எலக் ஷன் முடிஞ்சதும், அவர மாத்திடுவாங்கன்னு சொன்னாங்க. மீண்டும் எம்.எல்.ஏ., ஆனதால, போஸ்டிங்கை தக்க வைக்க காய் நகர்த்திட்டு இருக்கிறாராம்,''

''இருந்தாலும், லோக்கல் யாராச்சும் இருந்தா தான், கார்ப்ரேஷன், முனிசிபாலிட்டி, வார்டுகளை பிடிக்க முடியும்னு, சிலரு, மேலிடத்துக்கு 'பிரஷர்' கொடுத்துட்டு இருக்காங்களாம்,'' என்றாள் சித்ரா.

''அட போங்கக்கா. அங்கயே ஒரே 'பஞ்சாயத்தா' இருக்குது. அதுக்குள்ள இது வேறயா,''என, சிரித்தாள் மித்ரா.

''பஞ்சாயத்துன்னு சொன்னதும் கோழிப்பண்ணை ஊர் மேட்டர் ஞாபகத்துக்கு வந்துடுச்சு. 'வடுக' ஊரில் வேலைபார்க்கும் ஒருத்தர், பட்டா மாறுதல், பர்த், டெத் சர்டிபிகேட்டுக்கு வசூல் அள்றாராம். ஒரு காந்தி நோட்டு கிடைச்சாக்கூட போதும்ங்கற நிலைமைல, கிடைச்சத வாங்கிக்கிறாராம்,'' என சித்ரா கூற, மொபைல் போன் சிணுங்கியது.டிஸ்பிளேவில், 'சாமிநாதன்' என பெயர் தெரியவே, மொபைல் போனை அணைத்த சித்ரா, ''மித்து, அப்பாவோட பிரண்ட் தான். வீட்டுக்கு போய்ட்டு, சொல்லிக்கலாம்,'' என்றாள்.

''ஓ.கே., மித்து நான் கிளம்பறேன். அக்னி வெயில் கொளுத்துது. கொரோனாவும் அதிகரிக்குது. 'ஸ்டே ேஹாம்... ஸ்டே சேப்,'' என்றவாறு, முக கவசத்தையும், ஹெல்மெட்டையும் சரி செய்தவாறு, மித்ராவின் வீட்டிலிருந்து புறப்பட்டாள் சித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X