பொது செய்தி

தமிழ்நாடு

உயிரிழந்த அலுவலர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் வழங்க வலியுறுத்தல்

Added : மே 10, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மதுரை- 'கொரோனா தொற்று பணியில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, 25 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையை அரசு வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.சங்க மாநில தலைவர் குமரேசன், பொதுச் செயலர் முருகையன், மதுரையில் அளித்த பேட்டி:அரசு உத்தரவின்படி, கொரோனா தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை

மதுரை- 'கொரோனா தொற்று பணியில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, 25 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையை அரசு வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சங்க மாநில தலைவர் குமரேசன், பொதுச் செயலர் முருகையன், மதுரையில் அளித்த பேட்டி:அரசு உத்தரவின்படி, கொரோனா தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையினர், அனைத்து மாவட்டங்களிலும் முழுமையாக பணியில் ஈடுபட்டுள்ளனர்.பணியில் ஈடுபட்ட நிலையில் தொற்றுக்கு ஆளாகி, இதுவரை எட்டு அலுவலர்கள் இறந்தது வருத்தத்தை ஏற்படுத்திஉள்ளது.

இறந்தவர்களின் குடும்பத்திற்கு, ஏற்கனவே பிறப்பித்த அரசாணைப்படி, 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு முன்னுரிமையின்படி, அரசு பணி வழங்க வேண்டும். முன்கள பணியாளர்களாக பணிபுரிவோருக்கு, தனிநபர் தற்காலிக உபகரணங்கள் வழங்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். வாகன வசதி செய்வதுடன், யாரையும் பணிக்கு வர நிர்ப்பந்திக்க கூடாது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
11-மே-202102:32:04 IST Report Abuse
.Dr.A.Joseph சாதாரண கூலி தொழிலாளியின் உயிருக்கும் இதேபோல வழங்க கோரிக்கை வைப்பீர்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X