அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொங்கு மண்டல தோல்வி காரணங்களை ஆராய குழு

Updated : மே 12, 2021 | Added : மே 10, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
கொங்கு மண்டல தோல்விக்கான காரணங்களை ஆராய தொகுதி வாரியாக தனிக்குழுக்கள் அமைக்க தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது.கொங்கு மண்டலத்தில் உள்ள 68 தொகுதிகளில் அ.தி.மு.க., 44 தொகுதிகளை கைப்பற்றியது. மீதமுள்ள 24 தொகுதிகளில் தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றது. கொங்கு மண்டல தோல்வி தொடர்பாக, தி.மு.க., சுயபரிசோதனை செய்யக் கூடிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. உயர்மட்ட குழுக்கள்தோல்வி
கொங்கு மண்டலம், தோல்வி காரணங்கள் , ஆராய குழு

கொங்கு மண்டல தோல்விக்கான காரணங்களை ஆராய தொகுதி வாரியாக தனிக்குழுக்கள் அமைக்க தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது.

கொங்கு மண்டலத்தில் உள்ள 68 தொகுதிகளில் அ.தி.மு.க., 44 தொகுதிகளை கைப்பற்றியது. மீதமுள்ள 24 தொகுதிகளில் தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றது. கொங்கு மண்டல தோல்வி தொடர்பாக, தி.மு.க., சுயபரிசோதனை செய்யக் கூடிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.


உயர்மட்ட குழுக்கள்



தோல்வி அடைந்த தி.மு.க., வேட்பாளர்கள், தங்கள் தோல்விக்கான காரணங்கள் குறித்த புகார் மனுக்களையும் விளக்க கடிதங்களையும் அறிவாலயத்தில் வழங்கி வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின், கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டி வருவதால் புகார் மனுக்களை விசாரிக்க உயர் மட்டக் குழுக்களை அமைக்க திட்டமிட்டுள்ளார். மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்டிருந்த தேர்தல் பொறுப்பாளர்களிடம் அறிக்கையும் கேட்கப்பட்டு உள்ளது. அதையடுத்து, தொகுதி வாரியாக, தோல்விக்கான காரணங்களை ஆராய தனித்தனி குழுக்கள் அமைக்கவும், உளவுத்துறை வாயிலாக அறிக்கை கேட்கவும் திட்டமிடப்பட்டுள்ளத

இந்த மூன்று தரப்பில் இருந்தும் வருகிற அறிக்கைகளை ஒப்பிட்டு பார்த்த பின், கொங்கு மண்டல தி.மு.க., நிர்வாகத்தில் அதிரடி மாற்றம் நிகழ உள்ளது.இதற்கிடையில் தி.மு.க., முக்கிய நிர்வாகி ஒருவரும் அறிவாலயத்தில் உள்ள ஒருவரும் இணைந்து, கொங்கு மண்டல நிர்வாகிகளிடம்,'உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது' எனக்கூறி வருவதாக தெரிகிறது.



புகைச்சல்



உடனே அவர்கள் அலறி அடித்து மாநில நிர்வாகி, அறிவாலய ஊழியரைசந்தித்து, தங்களின் பதவிக்கு ஆபத்து வராமல் பார்த்துக் கொள்ளும்படி வலியுறுத்துவதாக தகவல்.இதற்கிடையில் அரசு வழக்கறிஞர்கள் பதவிக்கு தி.மு.க., வழக்கறிஞர்களிடம் விருப்ப மனுக்களை, வழக்கறிஞர் ஒருவர் பெற்று வருவதும் அக்கட்சியில் புகைச்சலை உருவாக்கி உள்ளது.
- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Thanjavur ,இந்தியா
12-மே-202100:18:46 IST Report Abuse
Mohan குழு எதுக்கு ரொம்ப சிம்பிள் சூரியனை குத்துணது இலையில பட்டுருச்சி.
Rate this:
Cancel
11-மே-202119:58:54 IST Report Abuse
sakthi shanmugam காசு பணம் துட்டு மணி
Rate this:
Cancel
Nalam Virumbi - Chennai,இந்தியா
11-மே-202119:24:35 IST Report Abuse
Nalam Virumbi மத மாற்றதிற்கும், மத வெறிக்கும் அலையும் மக்கள் எப்போதும் தி மு க வைத்தான் ஆதரிப்பார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X