கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள்: அரசுக்கு ஐகோர்ட் அறிவுரை

Updated : மே 12, 2021 | Added : மே 11, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை :பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வாயிலாக, வடமாநிலங்களில் குறுகிய காலத்தில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைத்தது போல, தமிழகத்திலும் ஏற்படுத்துவதற்கு வழிவகை காணும்படி, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆக்சிஜன், வென்டிலேட்டர், தடுப்பூசி மருந்து, 'ரெம்டெசிவிர்' மருந்து பற்றாக்குறை இருப்பதாக வெளியான
ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள்: அரசுக்கு ஐகோர்ட் அறிவுரை

சென்னை :பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வாயிலாக, வடமாநிலங்களில் குறுகிய காலத்தில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைத்தது போல, தமிழகத்திலும் ஏற்படுத்துவதற்கு வழிவகை காணும்படி, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆக்சிஜன், வென்டிலேட்டர், தடுப்பூசி மருந்து, 'ரெம்டெசிவிர்' மருந்து பற்றாக்குறை இருப்பதாக வெளியான செய்தி அடிப்படையில், தலைமை நீதிபதி அமர்வு, வழக்கை விசாரணைக்கு எடுத்தது.இவ்வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது.


ஸ்டெர்லைட்தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, சுகாதார துறையின் அறிக்கையை தாக்கல் செய்து வாதாடியதாவது:
* தற்போதைய தேவை 475 டன் ஆக்சிஜன் என்றாலும், மத்திய அரசு 419 டன் ஒதுக்கியுள்ளது. இன்னும் 15 நாட்களில் 800 டன் தேவைப்படும்


* ரெம்டெசிவிர் மருந்து 3.50 லட்சம் குப்பிகள் கேட்டுள்ளோம்; 2.05 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் விற்பனைக்காக கோவை, திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி ஆகிய நகரங்களில் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

* தடுப்பூசி மருந்து 77 லட்சம் டோஸ் வந்து உள்ளது; 64.13 லட்சம் டோஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. 18 முதல் 44 வயது உடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக 13.85 லட்சம் டோஸ் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் 5 லட்சம் டோஸ் வந்துள்ளது; மீதி வர வேண்டிஉள்ளது.
* துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், வரும் 15ம் தேதி முதல், 40 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும். தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், வைரஸ் பரவல் குறையும்.இவ்வாறு அவர் வாதாடினார்.

புதுச்சேரி அரசு பிளீடர் மாலா ஆஜராகி, ''பரிசோதனை செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ''நேற்று 1,653 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. பெரிய அளவில் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. தடுப்பூசி மருந்து, ஆக்சிஜன் போதிய அளவில் உள்ளது,'' என்றார்.


நிபுணர் குழுவழக்கறிஞர்களின் வாதங்களுக்கு பின், முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, முறையான ஆக்சிஜன் ஒதுக்கீட்டுக்கான பரிந்துரையை, இதற்காக அமைக்கப்பட்ட நிபுணர் குழு வழங்கும்.அதுவரை ஆக்சிஜன், தடுப்பூசி மருந்து மற்றும் இதர மருந்துகள் தொடர்ந்து வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டியது, மத்திய அரசின் பொறுப்பு.பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, வட மாநிலங்களில் குறுகிய காலத்தில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை ஏற்படுத்தியதை பரிசீலிக்க வேண்டிய தேவை உள்ளது. அதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும்.

மூன்றாவது அலை வருவதாக கூறப்படுவதால், நாம் இன்னும் கூடுதலாக தயாராக வேண்டியுள்ளது. மோசமான நிலையை சமாளிக்க நாம் தயாராக இருக்க வேண்டும்.புதுச்சேரியில் தொற்று எண்ணிக்கை அதிகரித்தாலும் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை.
இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nalam Virumbi - Chennai,இந்தியா
11-மே-202119:27:30 IST Report Abuse
Nalam Virumbi From FB According to India today TN has vaccinated the lowest with maximum wastage
Rate this:
Cancel
S Bala - London,யுனைடெட் கிங்டம்
11-மே-202118:52:34 IST Report Abuse
S Bala இப்போதிருக்கும் தலைமை நீதிபதியின் காலம் எப்போது முடியும்?
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
11-மே-202115:27:54 IST Report Abuse
r.sundaram ஸ்டர்லிட் ஆலையை திறக்க எதிப்பவர்களை இன்னமும் கூட நீதிமன்றங்கள் கண்டிக்க வில்லை என்பது வரூத்த மளிக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X