பொது செய்தி

இந்தியா

மருத்துவமனை படுக்கை வசதி: கூகுள் நிறுவனம் தகவல்

Updated : மே 11, 2021 | Added : மே 11, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கைகள், மருத்துவ ஆக்சிஜன் கிடைக்கும் இடங்கள் குறித்த விபரங்களை தெரிவிக்கும் புதிய சேவை அறிமுகத்தை, 'கூகுள்' நிறுவனம் பரிசோதித்து வருகிறது.கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, பல்வேறு மாநிலங்களில் மருத்துவமனை படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான உதவிகள் கேட்டு, சமூக

புதுடில்லி: மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கைகள், மருத்துவ ஆக்சிஜன் கிடைக்கும் இடங்கள் குறித்த விபரங்களை தெரிவிக்கும் புதிய சேவை அறிமுகத்தை, 'கூகுள்' நிறுவனம் பரிசோதித்து வருகிறது.



latest tamil news



கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, பல்வேறு மாநிலங்களில் மருத்துவமனை படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான உதவிகள் கேட்டு, சமூக வலைதளங்களில் பதிவுகள் குவிகின்றன. இந்நிலையில், தடுப்பூசியின் செயல்திறன், நம்பகத்தன்மை மற்றும் தடுப்பூசி நிலையங்கள் குறித்த தகவல்கள், கொரோனா பாதிப்புகளுக்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டுவது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை கூகுள் நிறுவனம் அளித்து வருகிறது.


latest tamil news


இந்த வகையில், மருத்துவமனை படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் நிலவரங்கள் குறித்த தகவல்களை வெளியிட கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:நாட்டின் சில குறிப்பிட்ட இடங்களில், காலியாக உள்ள மருத்துவமனை படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் கிடைக்கும் இடங்கள் குறித்த தகவல்களை வெளியிட கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கேள்வி - பதில் அடிப்படையில் இந்த தகவல்களை, 'கூகுள் மேப்' செயலி வாயிலாக பெற்று, அதை தேவைப்படுபவர்களுக்கு அளிக்க உள்ளோம்.இந்த தகவல்கள் அதிகாரபூர்வமானவை அல்ல என்பதால், அதை பயன்படுத்தும் முன், உறுதி செய்து கொள்வது அவசியம். இந்த சேவை, தற்போது சோதனைக் கட்டத்தில் உள்ளது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-மே-202105:03:01 IST Report Abuse
ஆப்பு அரசிடமிருந்து வந்தால் ஒழிய எந்த குறுஞ்செய்திகளையும் நம்பாதீர்கள். எந்த லிங்க்கையும் ஓப்பன் பண்ணாதீர்கள்.
Rate this:
Cancel
11-மே-202105:03:07 IST Report Abuse
ஆப்பு அரசிடமிருந்து வந்தால் ஒழிய எந்த குறுஞ்செய்திகளையும் நம்பாதீர்கள். எந்த லிங்க்கையும் ஓப்பன் பண்ணாதீர்கள். கூகுளே உங்கள் தகவல்களை உறிஞ்சிட வாய்ப்பு உள்ளது. இல்லேன்னா, கூகுள் பேர்ல எவனாவது உறிஞ்சுவான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X