பொது செய்தி

தமிழ்நாடு

உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும்'லிங்க முத்திரை' : சென்னை ஐ.ஐ.டி., அங்கீகாரம்

Added : மே 11, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
மதுரை :உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க மதுரை சித்தா டாக்டர்.சாலை ஜெய கல்பனா கண்டுபிடித்த 'லிங்க முத்திரை'யை சென்னை ஐ.ஐ.டி., அங்கீகரித்துள்ளது.உடலில்ஆக்சிஜன் குறைவால் தவிப்போர் 'லிங்க முத்திரை' செய்தால் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும், காய்ச்சலை குறைக்கும் என மதுரை சித்தர் வனம் மருத்துவமனை தலைமை டாக்டர். சாலை ஜெய கல்பனா தன் கொரோனா தடுப்பு முறை ஆய்வில் கண்டறிந்தார்.அவர்
 உடலல் ஆக்சிஜன் , அதிகரிக்க'லிங்க முத்திரை'

மதுரை :உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க மதுரை சித்தா டாக்டர்.சாலை ஜெய கல்பனா கண்டுபிடித்த 'லிங்க முத்திரை'யை சென்னை ஐ.ஐ.டி., அங்கீகரித்துள்ளது.

உடலில்ஆக்சிஜன் குறைவால் தவிப்போர் 'லிங்க முத்திரை' செய்தால் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும், காய்ச்சலை குறைக்கும் என மதுரை சித்தர் வனம் மருத்துவமனை தலைமை டாக்டர். சாலை ஜெய கல்பனா தன் கொரோனா தடுப்பு முறை ஆய்வில் கண்டறிந்தார்.
அவர் கூறியதாவது: லிங்க முத்திரை ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் என ஐ.ஐ.டி., உறுதிப்படுத்தி உள்ளது. இதயம், நாடித் துடிப்பு சீராவதும் ஆய்வில் தெரியவந்தது.
இதை ஆய்வுசெய்த சென்னை ஐ.ஐ.டி., தொடு உணர்வு ஆய்வக தலைவர் மணிவண்ணன் சான்று அளித்துள்ளார். ஐ.ஐ.டி., சார்பில் சர்வதேச இதழ் ஒன்றில் ஆராய்ச்சி கட்டுரையும் ஐ.ஐ.டி.,வெளியிட்டது.
முத்திரை செய்வதால் உடல் வெப்பம் அதிகரித்து, நோய் எதிர்ப்பு சக்தி துாண்டப்பெற்று கொரோனா உள்ளிட்ட வைரஸ் கட்டுக்குள் வரும். ஆக்ஸிஜன் அளவு கணிசமாக உயர்ந்து, சுவாசம் சீராகும். கர்ப்பிணிகள் தவிர சிறுவர்கள், முதியோர், சர்க்கரை, ரத்த அழுத்தம், இதய நோயாளிகள், கொரோனா சிகிச்சை பெறுவோர், செயற்கை ஆக்ஸிஜனில் இருப்பவர்களும் இந்த முத்திரையை செய்யலாம். லிங்க முத்திரை செய்யும் முறைஅமர்ந்த, படுத்த நிலையில் முத்திரை செய்யலாம். ஆள்காட்டி விரலை மூக்கின் அடியில் வைத்து மூச்சை கவனிக்கவும். எந்த நாசி துவாரத்தில் குறைந்த மூச்சு வருகிறது அல்லது அடைத்துள்ளதோ அந்தப் பக்கம் உள்ள கை கட்டை விரலை செங்குத்தாக உயர்த்தவும்.

மற்றொரு கையின் ஆள்காட்டி, கட்டை விரலால், உயர்த்தி பிடித்த கட்டை விரல் அடியில் சுற்றி வளைத்து, இரு கைகளின் மற்ற விரல்களையும் கோர்க்கவும். இரு கைகளுக்கும் இடையே காற்று புகாதபடி இறுக்கமாக பிடிக்கவும். இதை செய்ய தொடங்கி 5 முதல் 40 நிமிடத்தில் நெற்றி, மூக்கு, தொண்டை, நெஞ்சு பகுதி வெப்பம் அதிகரித்து, வியர்க்கும் போது நிறுத்த வேண்டும்

என்றார். மேலும் அறிய மின்னஞ்சல் info@siddharvanam.com

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
16-மே-202121:16:19 IST Report Abuse
spr கபாசுரக் குடிநீர் குடியுங்கள், முகக்கவசம் அணியுங்கள் சமூக இடைவெளி கடைபிடியுங்கள் என்று எல்லோருக்கும் புரியும்படி கண்ணுக்கெதிரில் பலன் தெரியும் வழிகளை சொன்னாலே மக்கள் கேட்பதில்லை இவற்றின் பலன் கண்கூடாகத் தெரிய வாய்ப்பில்லை இதெல்லாம் நடக்குமா? முனைவர் பட்டம் பெற மட்டுமே உதவும்
Rate this:
Cancel
அன்பு - தஞ்சை,கனடா
14-மே-202102:10:46 IST Report Abuse
அன்பு மக்களை ஏமாற்ற வேண்டாம். ப்ளீஸ்.
Rate this:
Cancel
Nandhashree - MADURAI,இந்தியா
13-மே-202112:45:15 IST Report Abuse
Nandhashree For videos visit the youtube channel Dr.Salai Jaya Kalapana's Healthy World in youtube
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X