பொது செய்தி

இந்தியா

தடுப்பூசி பதிவில் மோசடி; மத்திய அரசு எச்சரிக்கை

Updated : மே 11, 2021 | Added : மே 11, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: தடுப்பூசி போட்டுக் கொள்ள பதிவு செய்து கொள்ளும்படி போலியான குறுஞ்செய்தி அனுப்பி 'ஆன்ட்ராய்டு மொபைல் போன்' பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டு வருவதாக, மத்திய அரசு எச்சரித்துள்ளது.கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்புகிறவர்கள் 'கோ - வின்' இணையதளம் மற்றும் 'மொபைல் போன்' செயலி வாயிலாக பதிவு செய்து கொள்ள மத்திய அரசு

புதுடில்லி: தடுப்பூசி போட்டுக் கொள்ள பதிவு செய்து கொள்ளும்படி போலியான குறுஞ்செய்தி அனுப்பி 'ஆன்ட்ராய்டு மொபைல் போன்' பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டு வருவதாக, மத்திய அரசு எச்சரித்துள்ளது.latest tamil news


கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்புகிறவர்கள் 'கோ - வின்' இணையதளம் மற்றும் 'மொபைல் போன்' செயலி வாயிலாக பதிவு செய்து கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.இந்நிலையில் 'ஆன்ட்ராய்டு மொபைல் போன்' பயன்படுத்தும் பயனாளர்களின் போன்களுக்கு சமீபநாட்களாக குறுஞ்செய்தி வருகிறது.அதில், ஒரு செயலியின் இணைப்பு தரப்பட்டுள்ளது. அதை 'க்ளிக்' செய்து செயலியை பதிவிறக்கம் செய்து தடுப்பூசிக்கு பதிவு செய்து கொள்ளும்படி குறிப்பிடப்பட்டுள்ளது. இதை நம்பி தரவிறக்கம் செய்பவர்களின் மொபைல் போனில் உள்ள தொடர்பு எண்கள் உள்ளிட்ட தகவல்கள் திருடப்படுவதாக 'சைபர்' குற்றங்களை கண்காணிக்கும், இந்திய கணினி அவசரகால மீட்பு படையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இது போன்ற, ஐந்து விதமான இணைப்புகள் உலா வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


latest tamil news'மத்திய அரசின் கோ - வின் இணையதளம் மற்றும் செயலியை தவிர வேறு புதிய தளங்களில் தடுப்பூசி முன்பதிவு செய்ய வேண்டாம்' என, மத்திய அரசு எச்சரித்துள்ளன.நம்பகமற்ற செயலிகளை பதிவிறக்கம் செய்வதை தடுக்கும்படியும் 'மொபைல் போன் செட்டிங்கில்' மாற்றம் செய்து வைக்கும்படியும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
11-மே-202109:25:20 IST Report Abuse
vbs manian இப்போதெல்லாம் கோவின் தளத்தில் ஓ டீ பி கூட வருவதில்லை.
Rate this:
Cancel
11-மே-202105:00:32 IST Report Abuse
ஆப்பு டிஜிட்டல் இந்தியா... எதுக்கெடுத்தாலும் மொபைல் நம்பர் மொபைல் நம்பர்னு அரசே புடுங்கி எடுக்குது. பேங்குகள் புடுங்கி எடுக்கின்றன. அமேசான், பே.டி.எம், கூக்ய்ள், ஆதார், லொட்டு, லொசுக்கு எல்லாத்துக்கும் மொபைல் நம்பர்தான். அதில் குறுஞ்செய்திதான். எவனை நம்பறதுன்னு தெரியலை.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
11-மே-202102:24:55 IST Report Abuse
தல புராணம் இன்றைய தொற்றுக்கள் 4 லட்சத்தை தாண்டி.. அரசு சொல்லும் ஒருநாள் சாவுகள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 4,000. கங்கை, யமுனை ஆறுகளில் மிதக்கும் சவங்கள் எண்ணிக்கையில் சேர்க்காமல்.. கொத்துக் கொத்தாய் எரிக்கப்படும் உடல்களை கணக்கில் கொள்ளாமல், 4000. சவுக்கித்தார் மோடி அவர்களே, பறந்து பறந்து கும்பமேளா வைரஸை பரப்பி எந்த இந்தியர்களை காப்பாத்தி, எந்த மானுட வர்க்கத்தையே காப்பாத்தினீங்க? 2,50,000 தினசரி தொற்று இருக்கும் சமயத்தில், பல்லாயிரம் மக்களை ஒன்று கூட்டினீர், இந்த அளவு கூட்டத்தை நான் பார்த்ததில்லைன்னு பூரிப்படைஞ்சி பொங்குனீங்களே, 40,00,000 பேரை கும்பமேளான்னு கூடவச்சீங்களே? உங்களாலே ஒரு நாளைக்கி 4000 உயிர்கள் சாவது என்னிக்காவது உங்க மனசுக்கு உறுத்துமா?? உண்மையான சாவுகள் எண்ணிக்கை 2 இலிருந்து 5 மடங்கு வரை அதிகமிருக்கும் என்று இந்திய மருத்துவர்கள் அடித்து சொல்கிறார்கள்.. 5 இலிருந்து 10 மடங்கு அதிகம் சாவுகள் என்று களத்தில் இருக்கும் வெளிநாட்டு பத்திரிக்கைகள் ஆதாரத்துடன் வெளியிடுகின்றன.. குறைந்தபட்சம் என்று வைத்தாலே 10,000 சாவுகள்.. ஆற்றில் உப்பி மிதக்கும் பிணங்கள் உங்களின் பொய்யை பறை சாற்றிக் கொண்டு இருக்கின்றன.. தடுப்பூசிக்கும் விலையை ஏற்றி வைத்தீர்.. தட்டுப்பாடு இருக்கவேண்டும், விலையேற வேண்டும் என்பதற்காகவே ஐந்து நிறுவனங்கள் வரவேண்டிய இடத்தில இரண்டே பேருக்கு அனுமதி அளித்தீர்.. என்ன செய்து இந்த பாவங்களிலிருந்து கரையேறப் போகிறீர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X