பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: அதை பார்க்கும் போதே மகிழ்ச்சி!

Updated : மே 11, 2021 | Added : மே 11, 2021 | கருத்துகள் (54)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :ஜெ.மனோகரன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:முதல்வராக பொறுப்பேற்பதற்கு முன்பாகவே, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், கொரோனா தடுப்பு பணி குறித்து, சுகாதார துறை செயலர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அவரது அக்கறை பாராட்டுக்குரியது.நிர்வாக திறமையான, ஐ.ஏ.எஸ்.,
idhu, ungal, idam, இது, உங்கள் இடம்,


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :

ஜெ.மனோகரன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

முதல்வராக பொறுப்பேற்பதற்கு முன்பாகவே, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், கொரோனா தடுப்பு பணி குறித்து, சுகாதார துறை செயலர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அவரது அக்கறை பாராட்டுக்குரியது.நிர்வாக திறமையான, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நான்கு பேரை, முதல்வர் அலுவலக செயலராக நியமித்துள்ளார். பல்வேறு திறமை பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இறையன்பு, தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.திறமையான அதிகாரிகள், அரசின் முக்கிய பொறுப்புகளை ஏற்பது, மாநிலத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதும் ஆவின் பால் விலை குறைப்பு, பெண்களுக்கு நகர பேருந்தில் இலவச பயணம் உட்பட ஐந்து திட்டங்களுக்கு கையெழுத்திட்டுள்ளார்; பாராட்டுகள்.மேலும் கவர்னர் மாளிகையில் நடந்த புதிய அரசு பதவி ஏற்பு விழாவில், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., மற்றும் முன்னாள் சட்டசபை சபாநாயகர் தனபால் ஆகியோர் பங்கேற்றனர்.இருவருக்கும், முன் வரிசையில் அமர இடமளிக்கப்பட்டது. கடந்த காலத்தில், எதிர்க்கட்சி தலைவர்கள் வேண்டா விருந்தாளி போல நடத்தப்பட்டனர்.ஸ்டாலின் தலைமையிலான அரசு, எதிர்க்கட்சியினருக்கு உரிய மரியாதை அளித்தது வரவேற்கத்தக்கது.


latest tamil news


பதவி ஏற்பு விழா முடிந்ததும், கவர்னர் மாளிகையில் வழக்கமாக நடக்கும் தேநீர் விருந்து நிகழ்ச்சியில் கவர்னர், முதல்வர், தலைமைச் செயலர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஓ.பி.எஸ்., தனபால் ஆகியோர், ஒரே மேஜையில் அருகருகே அமர்ந்து தேநீர் அருந்தினர். அதை பார்க்கும் போதே, மகிழ்ச்சியாக இருந்தது.இதுபோன்ற ஆரோக்கியமான, அரசியல் நாகரிக பண்பாடு தொடர்ந்து தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் மாநிலத்தின் வளர்ச்சிக்காக இணைந்து பணியாற்ற வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மனிதன் - riyadh,சவுதி அரேபியா
11-மே-202123:52:00 IST Report Abuse
மனிதன் இன்ன செய்தாரை ஒறுத்தல்.......
Rate this:
Cancel
11-மே-202123:15:23 IST Report Abuse
சுரேஷ் சார், வணக்கம். இந்த பதிவு எனது சந்தேகத்தை நிவர்த்தி செய்ய மட்டுமே. நீண்ட கால தினமலர் வாசகனாக உள்ளேன். தொற்று ஆரம்பத்தில் பேப்பர் எதற்கு என்று நண்பர்கள் கேட்டபோது தாங்கள் கிருமி நீக்கம் செய்கிறீர்கள் என்று தங்கள் செய்திகள் அடிப்படையில் கூறினேன். தற்போதும் அது தொடர்கிறது என நம்புகிறேன். நாளிதழ் காலை நான் எழும்பு முன் வருகிறது. எங்களது பகுதி பேப்பர் காரர் மிகவும் பரிச்சயமான நல்ல மனிதர். இருந்தாலும் நாளிதழ் போடுபவர்கள் கையுறைகள் போட்டுக் கொள்வதை உறுதி செய்து கொள்ள வேண்டுகிறேன். நன்றி.
Rate this:
Cancel
ennadhu -  ( Posted via: Dinamalar Android App )
11-மே-202122:43:07 IST Report Abuse
ennadhu ennappa
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X