3 நியமன எம்.எல்.ஏ., பதவிகள்: வாரி சுருட்டியது புதுச்சேரி பா.ஜ.,

Updated : மே 11, 2021 | Added : மே 11, 2021 | கருத்துகள் (36)
Share
Advertisement
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபைக்கு பா.ஜ.வைச் சேர்ந்த மூன்று பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் சட்டசபையில் பா.ஜ. பலம் ஒன்பதாக உயர்ந்துள்ளது.புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங். - பா.ஜ. - அ.தி.மு.க. கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட்டன. என்.ஆர்.காங். 10 இடங்களிலும் பா.ஜ. ஆறு இடங்களிலும் வெற்றி பெற்று ஆட்சியை
புதுச்சேரி,  பா.ஜ.க., எம்.எல்.ஏ., நியமனம்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபைக்கு பா.ஜ.வைச் சேர்ந்த மூன்று பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் சட்டசபையில் பா.ஜ. பலம் ஒன்பதாக உயர்ந்துள்ளது.

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங். - பா.ஜ. - அ.தி.மு.க. கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட்டன. என்.ஆர்.காங். 10 இடங்களிலும் பா.ஜ. ஆறு இடங்களிலும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.என்.ஆர்.காங். தலைவர் ரங்கசாமி மே 7 முதல்வராக பொறுப்பேற்றார். 'பா.ஜ.வும் ஆட்சியில் அங்கம் வகிக்கும்' என மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன்ரெட்டி அறிவித்திருந்தார். துணை முதல்வர் மற்றும் இரண்டு அமைச்சர்களை பா.ஜ. கேட்டுள்ளது.

மே 14ம் தேதி அமைச்சரவை பதவியேற்பு விழா நடப்பதாக இருந்த சூழலில் பா.ஜ.வைச் சேர்ந்த மூன்று பேரை எம்.எல்.ஏ.க்களாக நியமித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.தி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜ.வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடேசன் பா.ஜ. நகர மாவட்ட தலைவர் வக்கீல் அசோக்பாபு முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து தம்பி ராமலிங்கம் ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக அறிவித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலர் கோவிந் மோகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இதன் மூலம் புதுச்சேரி சட்டசபையில் பா.ஜ. - எம்.எல்.ஏ. க்களின் பலம் ஒன்பதாக உயர்ந்துள்ளது.


latest tamil news




என்.ஆர்.காங். கட்சியை விட ஒரு எம்.எல்.ஏ. மட்டுமே குறைவாக உள்ளது.மத்திய அரசின் அதிரடியால் என்.ஆர்.காங். - அ.தி.மு.க. அதிர்ச்சியில் உள்ளது. என்.ஆர்.காங். - பா.ஜ. - அ.தி.மு.க. கூட்டணி அமைத்ததால் நியமன எம்.எல்.ஏ.க்களை தலா ஒரு சீட் வீதத்தில் பிரித்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்பட்டது.போட்டியிட்ட ஐந்து இடங்களிலும் தோல்வியடைந்த அ.தி.மு.க.விற்கு சட்டசபையில் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் ஒரு நியமன எம்.எல்.ஏ. கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் மத்திய அரசு அதிரடியாக மூன்று எம்.எல்.ஏ.க்களையும் நியமித்துள்ளது.


தள்ளிப்போகிறது பதவியேற்பு



என்.ஆர்.காங்.-பா.ஜ. அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் மே 14ம் தேதி பதவியேற்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் முதல்வர் ரங்க சாமி கொரோனா பாதித்து சென்னையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பதவியேற்பு விழா தள்ளிப்போகிறது.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramshanmugam Iyappan - Tiruvarur,கத்தார்
17-மே-202119:11:40 IST Report Abuse
Ramshanmugam Iyappan எதற்கெல்லாம் பிஜேபி கூச்சப்படாது அவர்கள் ஏறிய ஏணியை உதைத்து தள்ளுவர், காங்கிரஸ்+திமுக அலையென்சுடன் ஆட்சி நடந்தால் திருமிகு ரங்கசாமி அவர்கள் தப்பிப்பார். பிஜேபியை விரட்டமுடியும்.
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
16-மே-202114:23:23 IST Report Abuse
Malick Raja கொரோனாவும் வாரி சுருட்டுமே
Rate this:
Cancel
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
12-மே-202113:32:43 IST Report Abuse
Ramesh R backward entry is a favorite for BJP
Rate this:
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
15-மே-202107:10:37 IST Report Abuse
RaajaRaja Cholanமுஸ்லிம்க்கு ரமேஷ் என்றும் பெயர்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X