பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டங்களுக்கு இடையே இ-பாஸ் அவசியமில்லை

Updated : மே 11, 2021 | Added : மே 11, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை: 'தமிழகத்தில், மாவட்டங்களுக்கு இடையே செல்ல, 'இ - பாஸ்' வாங்க வேண்டிய அவசியமில்லை; அதற்கான வசதியும், இ - பாஸ் தளத்தில் வழங்கப்படவில்லை' என அதிகாரிகள் கூறினர்.தமிழகத்தில், கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிகரித்துள்ள நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போது புதுச்சேரியை தவிர, பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் மற்றும் வெளிநாடுகளில்

சென்னை: 'தமிழகத்தில், மாவட்டங்களுக்கு இடையே செல்ல, 'இ - பாஸ்' வாங்க வேண்டிய அவசியமில்லை; அதற்கான வசதியும், இ - பாஸ் தளத்தில் வழங்கப்படவில்லை' என அதிகாரிகள் கூறினர்.



latest tamil news



தமிழகத்தில், கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிகரித்துள்ள நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போது புதுச்சேரியை தவிர, பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு இ - பாஸ் கட்டாயம்.இந்நிலையில் நேற்று முதல், 24ம் தேதி வரை, தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்த நேரத்தில் மாவட்டங்களுக்கு இடையே செல்ல, இ - பாஸ் அவசியம் என, சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகிறது. இது தவறானது என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


தமிழ்நாடு மின்னாளுமை முகமை இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருவோருக்கு மட்டுமே, இ - பாஸ் கட்டாயம். அவர்கள் இ - பாஸ் பெறுவதற்கான வசதிகள் மட்டுமே, அதற்குரிய தளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.மாவட்டங்களுக்கு இடையே செல்ல இ - பாஸ் அவசியமில்லை. அதற்கான வசதிகள் இணையதள பக்கத்தில் ஏற்படுத்தப்படவில்லை. தமிழக அரசும், மாவட்டங்களுக்கு இடையே செல்ல, இ - பாஸ் அவசியம் என்று கூறவில்லை. சமூக வலைதள தகவல்கள் தவறானவை. பிற மாவட்டங்களுக்கு செல்வோர், அதற்கான அவசியம் குறித்த விபரங்கள், ஆவணங்களுடன் செல்லலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skandh - Chennai,இந்தியா
11-மே-202111:15:59 IST Report Abuse
skandh என்னடா இது பகுத்தறிவு?பஸ் ஓடாது, தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை, டாக்ஸி, ஆட்டோ ஓடாது.இந்த CLARIFICATION நடந்து செல்லுவோருக்கோ? அரசியல் நிர்ணய சட்டத்தில் இருக்கும் அடிப்படை உரிமை இருக்கா என்ற சந்தேகத்தை கிளப்பி விட்ட்டார்கள். நடக்கட்டும், நடக்கட்டும். துக்லக் ராஜ்ஜியம்.
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
11-மே-202108:11:47 IST Report Abuse
Nagarajan D எதிலும் தெளிவில்லை... எல்லாவற்றிலும் குழப்பம்... அரசுகளுக்கு மக்களை பற்றி கவலை இல்லை அரசியல் செய்யவே விரும்புகிறது.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
11-மே-202107:28:08 IST Report Abuse
RajanRajan அப்போ தனியார் கார்களில் அவசரம் கருதி விவசாயப்பணி மருத்துவ தேவைகளுக்கு தமிழகத்திற்குள் எங்கு வேண்டுமானாலும் மூவர் எனும் கட்டுப்பாட்டுடன் பயணிக்கலாம். சரிதானே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X