பொது செய்தி

தமிழ்நாடு

மே 11: இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு

Updated : மே 11, 2021 | Added : மே 11, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (மே 11) பெட்ரோல் லிட்டருக்கு 93.62ரூபாய், டீசல் லிட்டருக்கு 87.25 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை,

சென்னை: சென்னையில் இன்று (மே 11) பெட்ரோல் லிட்டருக்கு 93.62ரூபாய், டீசல் லிட்டருக்கு 87.25 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news



சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.


latest tamil news



சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 93.38 ரூபாய், டீசல் லிட்டர் 86.96 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல் லிட்டருக்கு 24 காசுகள் உயர்ந்து ரூ 93.62 ஆகவும், டீசல் லிட்டருக்கு 29 காசுகள் உயர்ந்து ரூ 87.25 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kosu moolai - nadunilaiyoor,இந்தியா
11-மே-202113:09:35 IST Report Abuse
kosu moolai ஆமாங்க எது தல எது காலுன்னே புரியலே.
Rate this:
Cancel
Amirthalingam Shanmugam - Trichy,இந்தியா
11-மே-202111:51:24 IST Report Abuse
Amirthalingam Shanmugam எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டினிலே.மத்திய மாநில அரசுகள் பெட்ரோல்,டீசல் மற்றும் காஸ் ஆகியவற்றை ஜி.எஸ்.டி.யின் கீழ் உடனே கொண்டுவந்து விலைகுறைப்பை செய்ய வரவேண்டும்.
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
11-மே-202110:03:18 IST Report Abuse
பாமரன் ///...சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.../// இதை நம்பனும் மக்களே... இல்லைன்னா நீங்க ஆண்டிஇன்டியன்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X